குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

மேர்வின்.மே.மே- நன்றி வலம்புரி தமிழனைஅழிக்கும் சங்குசக்கரத்தையும் வைசுணவபண்பாட்டையும் ஒதுக்கவும்.

மாடு மேய்க்கும் கண்ணா
தமிழ் மண்ணை சுடுகாடு ஆக்கும் மணிவண்ணா
ஆரியனை மட்டுமா காத்து அருள்வாய்
தமிழை அழித்த சக்கரமும்
சாவீட்டில் ஊதும் சங்கும் உன் கைப்பிடித்து
தமிழனைக் கொல்வதென்றே முடிவெடுத்தாய்
திருப்பதியில் பெருமாளாய்க்
கண்மூடி நின்றாய்.


தமிழ் மொழியின் சிறப்பும் சுவையும் மிகவும் அருமையானவை.மிருகங்கள், பறவைகளின் ஒலிகளுக்குக் கூடப் பெயர் சூட்டி அவற்றின் தன்மைக்கு மதிப்புக் கொடுத்த மொழி உலகில் தமிழ் மொழியாக மட்டுமே இருக்க முடியும்.

 சிங்கம் கர்ச்சிக்கும், யானை பிளிறும், மயில் அகவும், குயில் கூவும், ஆடு கத்தும், மாடு கதறும் இப்படி மிருகங்கள், பறவைகளின் ஒலிக்குப் பெயர் சூட்டிய தமிழ்மொழி; ஆறறிவு படைத்த மனிதனின் ஒலி குறித்து வெவ்வேறு சொற்பதங்களை சூட்டி மனித உணர்வுகளை சொல்லூடாக வெளிப்படுத்தியது.

புன்சிரிப்பு, எக்காளம், அழுகை, குளறல், கத்தல், கதறல், விம்மல், வெதும்பல் இப்படி ஒலிக்கு மட்டுமன்றி உடல்சார் உணர்வெழுச்சிகளுக்கும் நாமம் சூட்டிய பெருமை நம் தமிழுக்கு உண்டு என்ற நினைப்பு மனதை இதமாக்க உறக்கம் இறுக்கமாகியது. உறக்கத்தின் நடுவில் ஒரு கனவு. மிகப் பெரிய மைதானம். அந்த மைதானத்தில் ஆடுகள் சேர்ந்து ஒரு பெரும் மாநாடு நடத்தும் காட்சி. செவியாடு, வெள்ளாடு, தாடியாடு என்று மிகப்பெரிய உருப்படிகள் முதல் அரிக்கன் ஆடுகள் வரை மாநாட்டில் கலந்து கொண்டன. மாநாட்டுக்கு ஜமுனாபாரி ஆட்டுக்கடா தலைமை தாங்கியது. அன்புக்குரிய என் இனமே! வேள்வி என்ற பெயராலும் எங்கள் இறைச்சியைப் புசிப்பதில் கொண்ட நாட்டத்தாலும் மனித இனத்தால் கொல்லப்பட்ட எம் இனத்தின் ஆத்ம சாந்திக்காகவும் இரு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் என்று அறிவித்தது.

தலைவரின் அறிவித்தலுக்கு அமைய எல்லா ஆடுகளும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தி அமர்ந்தன. தலைமை ஆடு ஒரு பட்டோலையை எடுத்து வாசித்தது. அதில் முன்னேஸ்வரம் பத்திரகாளி கோயிலில் நடக்க இருந்த வேள்வியைத் தடுத்து வெட்டப்படவிருந்த ஆடுகளை காப்பாற்றிய அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசிக்க எல்லா ஆடுகளும் எழுந்து மே... மே... மேர்வின்... மே... மேர்வின்...நன்றி...இப்படிக் கத்திவிட்டு இருந்தன. சபையில் இருந்த ஒரு ஆடு எழுந்து, அடுத்த ஆண்டு கவுணாவத்தையில் நடக்கும் வேள்வியைத் தடுக்க அங்கு வருகை தருமாறு அமைச்சர் மேர்வினுக்கு மகஜர் அனுப்பவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிய, எல்லா ஆடுகளும் அதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டன.

அந்நேரத்தில் இன்னோர் ஆட்டுக்கடா எழுந்து அமைச்சர் மேர்வினுக்கு நன்றி கூறும் அதே வேளை, அவரின் ஒரு செயல் எனக்குப் பிடிக்க வில்லை என்றது. என்ன? என்று ஆட்டுத் தலைவர் விசாரிக்க, முன்னேஸ்வரத்து வேள்வியைத் தடுத்ததால் தனக்கு ஏற்படும் சாபத்தில் இருந்து மீள அமைச்சர் மேர்வின் சில்வா போதி பூஜை செய்கின்றார். இது மிகவும் தவறான நம்பிக்கை. எங்களின் உயிரை காப்பாற்றியதால் சாபம் ஏற்படுமா? இந்த தவறான கருத்தால் எங்களை வெட்டுபவர்கள் தங்களை நியாயப்படுத்துவார்கள் அல்லவா? எனவே அது தொடர்பில் அமைச்சர் மேர்வினைச் சந்தித்து பேச வேண்டும் என்று கூற, பேச்சுவார்த்தையில் யார் பங்குபற்றுவது என்ற சிக்கல் எழ, யாழ்ப்பாணத்து ஆடு, கொழும்பு ஆடு, திருகோணமலை ஆடு என எல்லா ஆடுகளும் ஒன்றோடு ஒன்று கத்திக் கதறி இடிபடத் தொடங்க அந்தப் பயங்கரத்தில் நான் துள்ளிக் குதித்தேன்.
அட! கண்டது கனவென்றதை உணர்ந்தேன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.