குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கை வகித்து வரும் அங்கத்துவத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை

20 .09.2011  பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கை வகித்து வரும் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டுமென அவுசுதிரேலியாவின் கிறீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போரக் குற்றச் செயல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் வரையில் உறுப்புரிமை இடைநிறுத்தி வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பிலான பிரச்சார நடவடிக்கைகளை கிறீன் கட்சி ஆரம்பித்துள்ளது.
 
எதிர்வரும் மாதம் அவுசுதிரேலியாவின் பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நீதித்துறையைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் அவுசுதிரேலிய பாராளுமன்றில் கிறீன் கட்சி வட்டமேசை மாநாடு நடத்தவுள்ளது.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியங்களைத் திரட்டும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
 
சரியான ஆதாரங்கள் திரட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டால் இலங்கையின் சார்பில் பேர்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கிறீன் கட்சி செனட்டர் லீ ரியான்னான் தெரிவித்துள்ளார்.
 
கனடாவிலும் இதே போன்றதொரு எதிர்ப்பலை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கடந்த ஆடி மாதம் கிறீன் கட்சி முன்வைத்த யோசனைத் திட்டத்திற்கு அமோக ஆதரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, உறுப்பு நாடு என்ற காரணத்தினால் குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை அனுமதிக்க முடியாது என நியூ சவுத் வேல்ஸின் முன்னாள் சட்ட மா அதிபர் ஜோன் டொவுட் தெரிவித்துள்ளார்.
 
1999ம் ஆண்டு பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட போது பொதுநலவாய நாடு உறுப்புரிமை மறுக்கப்பட்டதுடன், 2007ம் ஆண்டு பிஜீ தீவுகளின் உறுப்புரிமையையும் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் கடன் வழங்குவதனை சர்வதேச நாணய நிதியம் ஒத்தி வைத்துள்ளது
20 .09. 2011  நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாத காரணத்தினால் கடன் வழங்குவதனை சர்வதேச நாணய நிதியம் ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
குறிப்பாக அரசாங்க நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கி வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
நாட்டின் பொருளாதார நிலைமைகளை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் கட்டம் கட்டமாக கடனுதவிகளை வழங்கி வருகின்றது.
 
ஒன்தாம் கட்ட கடனுதவியை வழங்குவது குறித்த மதிப்பீடுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மேற்கொள்வதில்லை என நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.
 
2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் கட்டம் கட்டமாக சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் கட்ட கடனுதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் கடனுதவி வழங்கும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை ஆரோக்கியமாக காணப்படுகின்றது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
 
பொருளாதார நிலைமைகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளை ஒத்தி வைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கமே கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடனோ அல்லது உதவியின்றிறோ நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய இயலுமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, மதிப்பீடுகளை காலம் தாழ்த்தி நடத்துமாறு அரசாங்கமே கோரிக்கை விடுத்தது என சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம் நம்பகத்தன்மையானதா – சவேந்திர சில்வா
20 .09. 2011  மனித உரிமை கண்காணிப்பகம் நம்பகதன்மையுடையதா என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிப் பிரதிநிதி சவேந்திர சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற நான்கு – ஐந்து மாதங்கள் பற்றிய விடயங்களை மட்டும் கருத்திற் கொள்வது நியாயமாக அமையுமா என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
27 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வந்த பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் கவனம் செலுத்தத் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இடைக்கால பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றன என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக அண்மையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதனை குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
மிகவும் குறுகிய காலத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டு அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கிய இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவிக்க சில தரப்பினர் தயக்கம் காட்டி வருகின்றமை அதிருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரச்சினையின் சகல கோணங்களையும் யதார்த்தமாக ஆராயும் நோக்கில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதாகவும், அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் அவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை சுமத்துவதில் அர்த்தமில்லை எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
 
எனினும், அடெல் பாலசிங்கம், ருத்ரகுமாரன் போன்ற புலிகளின் அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
 
28 வருடங்களாக புலிகள் தொடர்பில் ஏன் மௌனம் காத்தீர்கள் என சவேந்திர சில்வா கேட்டாராம் திவயின கூறுகிறது
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.