குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

முல்லைத்தீவு, கொக்கிளாயில் புதிய சிங்களக் குடியேற்றங்கள்.சிறிதரன் சீறுகிறார்.

20 .09.2011  அரசு பயங்கர வாதத்தை ஒழித்ததாகக் கூறி மீண்டும் அத்துமீறிய சிங்களக் குடி யேற்றங்களை ஏற்படுத்துவது நிலைமையை மோசமாக்கும் -சிறீதரன் முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பகுதியில் இன்று ஒரு தொகுதி சிங்களக் குடும்பங்கள் புதிதாகக் குடியேற்றப்படவுள்ளன என கரைதுறைப்பற்று உதவி அரச அதிபர் எஸ்.தயானந்தா தெரிவித்துள்ளார்.
 
1960 காலப் பகுதியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒருதொகுதி மக்கள் (37 குடும்பங்கள்) அண்மையில் முகத்துவாரம் பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இப்போது மற்றுமொரு தொகுதி மக்கள் மீளக்குடியேற்றப்படவுள்ளனர். இதில் 45 குடும்பங்கள் இன்று (20) புதிதாகக் காணிகள் வழங்கப்பட்டு  குடியேற்றப்படவுள்ளன.ஏற்கனவே வெலிஓயா என்ற பிரதேச செயலக பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அரசால் முல்லைத்தீவு அரச அதிபருக்கு கடிதமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இதில் 8 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன. அவற்றில் குமுளமுனை, தண்ணிமுறிப்பு, அளம்பில், கருநாட்டுக்கேணி போன்ற கிராமசேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன.  என்றார் கரைத்துறைப்பற்று உதவி அரச அதிபர்.
 
கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், தென்னமரவாடி, முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, கலியாணபுரம், மாரியாமுனை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1983 ஆம் ஆண்டு அரசின் ஆதரவோடு அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
 
 
இதன்போது அக்கரைவெளி, முந்திரிகைக்குளம், கலியாணபுரம் போன்ற இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. எஞ்சியிருந்த தமிழ்ப் பிரதேசங்களான கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, தென்னமரவாடி ஆகிய கிராமங்கள் சிங்களப் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இப்போது சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன.
 
இதேவேளை, 28 வருடங்களுக்குப் பின்னர் குறித்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட போதும் அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றித் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாக பொய் ஆதாரங்கள் காட்டி இந்தப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.
 
அரசு பயங்கரவாதத்தை ஒழித்ததாகக் கூறி மீண்டும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவது நிலைமையை மோசமாக்கும் -சிறீதரன்
 
அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றதன் காரணமாகவே வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து உரிமைப் போராட்டத்தையும் ஆரம்பித்தனர். இப்போதுள்ள அரசு பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாகக் கூறி மீண்டும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கி பதற்றத்தை அதிகரிக்கும். இது உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
 
 
இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படவுள்ள செய்தி தொடர்பாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
 
1982 ஆம் ஆண்டுக்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 சிங்களக் குடும்பங்களே வாழ்ந்துள்ளன. இந்தக் குடும்பங்களும் கடலோரக் கிராமங்களில் தற்காலிகமாகத் தொழில் நிமித்தம் குடியேறியிருந்தன.
 
 
இவர்களை அடிப்படையாக வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாகக் கூறி இலங்கை அரசு திட்டமிட்டு தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.இதன் ஒரு கட்டமாகவே இன்றுஅங்கு சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதாக காரணம் காட்டி புதிதாக அவர்களை அங்கு குடியமர்த்துகின்றது.
 
வடக்கு, கிழக்கு இணைந்த நிர்வாக அலகின் அடிப்படையில் 1982 இற்குப் பின்னர் இந்தப் பகுதிகளில் இடம்பெற்ற அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்படவேண்டும் என்பது தமிழ்த்தேசிய் கூட்டமைப்பின் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாக பொய்க் காரணங்கள் கூறி, இலங்கை அரசு நில ஆக்கிரமிப்பையும், சிங்களக் குடியேற்றங்களையும் செய்து வருகின்றது.
 
குறிப்பாக அநுராதபுர மாவட்டத்தின் சில பகுதிகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளையும் இணைத்து வெலிஓயா பிரதேச செயலகம் ஒன்று ஜனகபுர பகுதியில் போருக்கு முன்பே இயங்கியதாகவும், அது தற்போது அந்தப் பகுதியில் மீள நிறுவப்பட்டுள்ளதாகவும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வளங்களையும் அவர்களுக்குக் கிடைக்கும் உதவிகளையும் சிங்கள மக்களுக்குத் திசை திருப்பும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.ஏற்கனவே நெல்சிப் திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு வந்த உதவித் திட்டங்கள் மர்மமான முறையில் ஜனகபுர பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
 
இலங்கை அரசின் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை மேலும் ஆபத்தான நிலைக்கே கொண்டு செல்லும். எனவே வழக்கு, கிழக்கில் உள்ள புத்திஜீவிகளும், தமிழ் மக்கள் மீது கரிசனை உள்ள அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.கூடுதலாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் அக்கறையுடன் செயற்படவேண்டும் என சிறிதரன் தெரிவித்துள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.