குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

இறுதிக்கட்ட போரின்போது படையினரின் தாக்குதலால் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்தன : அமெரிக்கா

19.09.2011-இறுதிக்கட்ட போரின் போது ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் இழப்புகள் கூடிக்கொண்டு சென்றதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க இராயாங்க திணைக்கத்துக்கு இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. போரின் போது போர் வலயத்துக்குள்ளும் வெளியிலும் நாள் ஒன்றுக்கு 63 பேர் கொல்லப்பட்டதாக இந்த தகவல் பரிமாற்றம் கூறுகிறது.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதியன்று, ஐக்கிய நாடுகளின் தகவல்படி, ஜனவரி 20 முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை 4164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்காவுக்கு அறிவித்துள்ளார்.

சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 7 ஆம் திகதி இலங்கையின் படையினர் முல்லைத்தீவின் 17 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவான கரையோரப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கியிருந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள் ஒன்றுக்கு 33 பொதுமக்கள் போரினால் கொல்லப்பட்டனர்.

அது பெப்ரவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் நாளொன்றுக்கு 63 ஆக உயர்ந்தது.

2009 ஆம் ஆண்டு ஜனவரியில் நாள் ஒன்றுக்கு 184 பொதுமக்கள் வரை காயமடைந்தனர்.

பெப்ரவரி மாதக்காலப் பகுதியில் அது 145 ஆகவும் மார்ச்சில் 115 ஆகவும் இருந்தது.

இலங்கை அரசாங்கத்தினால், முல்லைத்தீவில் இரண்டாவது பாதுகாப்பு வலயம் பிரகடனப்படு;த்தப்பட்ட பெப்ரவரி 12 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் அங்கு 2452 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 5000 பேர் காயமடைந்தனர்.

ஐக்கிய நாடுகளின் தகவல்படி பொதுமக்களின் இலக்குகள் மீது இலங்கைப் படையினர் நாளாந்தம்; எறிகனை தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

அத்துடன் விமானக்குண்டு வீச்சுகளும் நடத்தப்பட்டன.

ஏ 35 வீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் மாத்திரம், 860 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 3339 பேர் காயமடைந்தனர்.

பலியானவர்களில் 23 சிறுவர்கள் உள்ளடங்குவர். 345 சிறுவர்கள் காயமடைந்தனர்.

கத்தோலிக்க தேவாலயத்தினால் சிறுவர்கள் பலாத்காரமாக படைகளில் சேர்க்கப்படுவதை தடுக்க முடியாமல் போய்விட்டதாகவும் விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் ஆயரின் தகவல்படி, பாதுகாப்பு வலயத்தில் சுமார் 400 சிறுவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் பிடிக்கப்பட்டு சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.