குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

15 ஆடுகளையும் 25 கோழிகளையும் ஏப்பமிட்டார் மேர்வின்? கோழி ஆடு திருடுவோரை பீடாதிபதிகள் பாராட்டுவதா?

  19.09.2011-அமைச்சர் மேர்வின் சில்வாவினால் பலாத்காரமாகக் கொண்டுசெல்லப்பட்ட ஆடு மற்றும் கோழிகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியத்தருமாறு முன்னேசுவரம் காளிகோயில் நிர்வாகம் சிலாபம் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்திருக்கிறது. திடீரென காளிகோவிலுக்குச் சென்ற அமைச்சர் மேர்வின் அங்கிருந்த 15 ஆடுகளையும், 25 கோழிகளையும் அகற்றி சிலாபம் காவல்துறையினரிடம் ஒப்படைப்பதாகக் கூறி எடுத்துச் சென்றிருந்தமை ஆனால், இவற்றைப் அவர்கள் ஏற்க மறுத்த காரணத்தினால் அவை எங்கிருக்கின்றன என்று தெரியாமல் கோயில் நிர்வாகத்தினரும், நேர்த்திவைத்த பக்தர்களும் தடுமாறிப்போயிருக்கின்றனர்.
ஆடுகளும், கோழிகளும் வேறு எங்காவது கொண்டு செல்லப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டிருக்கலா மெனத் தகவல்கள் வெளிவந்திருப்பதால் இந்த விவகாரத்தின் உண்மை நிலையை அறிவதற்காக கோயில் நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்திருக்கிறது.
கொண்டுசெல்லப்பட்ட ஆடுகளும், கோழிகளும் திரும்பி வந்தாலென்ன, வராவிட்டாலென்ன. உரியவர்களுக்கு உரிய பதிலைக் கடவுள் கொடுப்பார் என்று குறிப்பிட்டார் கோயிலின் நிர்வாகி ஒருவர்.
எவ்வாறாயினும், கோயில் நிர்வாகத்தின் முறைப்பாடு குறித்து விசாரிக்கும் சிலாபம் பொலிஸார் இதுவரை ஆடுகள், கோழிகளுக்கு என்ன ஆனது என்பதுபற்றி எந்தத் தகவல்களும் இல்லாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 3 ஆம் திகதி முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் பூஜைக்காக கட்டிவைக்கப்பட்டிருந்த ஆடுகள், கோழிகள் என்பவற்றை மேர்வின் சில்வா அங்கிருந்து பலவந்தமாக எடுத்துச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக சூழ்ச்சிஅமைச்சர் நிமல் குற்றச்சாட்டு  குழுவின் தோல்வியைசொல்லாமல் சொல்கிறார்.19.09.2011- சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட அரச சார் பற்ற அமைப்புகள் இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் அழுத்தம் கொடுக்கும் நிலையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபையும் இதர மனித உரிமை அமைப்புகளும் செயற்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை தருஸ்மன் அறிக்கையை ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தனது எதிர்ப்பை நேரில் தெரிவிக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.