குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

ஐ.நா.செயலாளரின் கடிதமும் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போன இலங்கை குழுவும் - ச.வி.கிருபாகரன்!

18.09.2011த.ஆ.2042-கடந்த 12 ஆம் திகதியிலிருந்து யெனீவாவில் நடைபெற்று வரும் ஐ. நா. மனித உரிமைச் சபையின் 18 ஆவது கூட்டத் தொடர் இலங்கை சரித்திரமுக்கியத்துவம் பெற்ற ஓர் நாடாக விளங்குகிறது. இலங்கையின் சரித்திரமுக்கியத்துவம் என்பது இச்சபையில் பல விடயங்களில் காணப்படுகின்றன. இலங்கை ஒரு ஜனநாயக குடியரசு நாடு எனக் கூறப்பட்ட பொழுதிலும் ஐ.நா. அங்கத்துவம் பெற்ற 193 நாடுகளில் குடியரசுடன் ஜனநாயகம் எனக் கூறப்படாத நாடுகளின் மனித உரிமை, நல்லாட்சி, மக்கள் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் போன்ற விடயங்களில் ஒப்பிடும் பொழுது இலங்கை மிகவும் பின்தங்கிய நாடாகவே காணப்படுகிறது.

மனித உரிமைச் சபையின் கவனத்திற்குள்ளாக்கப்படும் படுகொலைகள், ஆட்கள் காணாமல் போதல், கைது, தடுப்புக்காவல் போன்ற மனித உமை மீறல்களில் இலங்கை முன்னணியில் இருப்பதுடன் தற்பொழுது நடைபெறும் கூட்டத் தொடரில் ஐ. நா. செயலாளனால் நியமிக்கப்பட்ட குழுவினால் ஓர் போர் குற்றம் நிறைந்த நாடாகக் காணப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது இந்த மனித உரிமைச் சபையின் சத்திரத்தில் முதன் முதலாக ஐ.நா. செயலாளனால் இச் சபையின் கவனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நாடாகவும் இலங்கை காணப்படுகிறது.

இச்சபையின் ஆரம்பதினமான 12 ஆம்திகதியே ஐ.நா. செயலாளர், இச்சபையின் தலைவியான உருகுவே நாட்டின் தலைவி திருமதி லோறடுபியூ லாசேரவுக்கு இலங்கை மீதான தனது குழுவின் அறிக்கையையும் அத்துடன் ஓர் இணைப்புக் கடிதத்தையும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

ஐ. நா. செயலாளன் கடிதம் இலங்கையில் போர் முடிந்து சில நாட்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி நான் அங்கு சென்றிருந்து திரும்பிய வேளையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நானும் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தோம். இதில் அங்கு நடை பெற்ற கொலைகள், காணாமற் போதல் போன்ற விடயங்களுக்கு ஓர் விசாரணைக் குழுவை இலங்கை அரசு அமைக்க வேண்டும் என்பதாகும்.

இதன் பிரகாரம் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி மூவர் கொண்ட குழு ஒன்றை எனக்கு இவ்விடயமாக ஆலோசனை கூறுமாறு நியமித்தேன்.

இவ்விடயமாக இம் மூவர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி சில நடவடிக்கை களுக்கான ஆலோசனைகளுடன் ஓர் அறிக்கையை எனக்கு சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை இலங்கை அரசிடம் நான் அனுப்பி இவ்விடயமாக அவர்களை வினாவினேன்.

இவர்கள் அந்த அறிக்கை பற்றி எந்தவித பதிலும் தராத பொழுதிலும் கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி, தம்மால் தயாரிக்கப்பட்ட மனித அபிவிருத்தி முன்னெடுப்பும் உண்மை ஆய்வு ஜூலை 2006  ஜூலை 2009 என எனக்கு பதில் அனுப்பியுள்ளார்கள்.

இவர்களது அறிக்கையில் எமது மூவர் அறிக்கையில் ஏற்கப்படாத பல விடயங்கள் உள்ளன.. இவை யாவற்றையும் உங்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கிறேன். மூவர் கொண்ட குழுவின் அறிக்கையில் கொண்டு வரப்பட்ட விடயங்களுக்கு நான் அங்கு சிறிய மனிதாபிமான நிலைகளை மறு பசீலனை செய்யும் முகமாக திருமதி தோரா யா ஒபேட் என்பவரை நியமித்துள்ளேன்” எனக் கூறப்பட்டுள்ளது.
இப்போதைய நிலை அப்படியானால் தற்பொழுது ஐ. நா. மனித உரிமைச் சபையில் இலங்கையின் நிலை என்ன என்ற ஓர் கேள்வி உருவாகிறது.
 
நாம் நேரில் கண்டவற்றை காதால் கேட்ட வவற்றை சுருக்கமாகக் கூறுவதானால் இலங்கை இப்படியான ஓர் கடுமையான நிலை நிச்சயம் தமக்கு 18 ஆவது கூட்டத் தொடரில் ஏற்படும் என்பதை ஊகித்துக் கொண்ட காரணத்தினால் முற்கூட்டியே தமது வேறுபட்ட அமைச்சர்களை வேறுபட்ட நாடுகள், கண்டங்களுக்கு அனுப்பி அவ்விடங்களில் உள்ள வெளிநாட்டு அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதிகளிடம் இலங்கை மீது எந்த விதக் கண்டன பிரேரணையையோ அழுத்தங்களையோ 18 ஆவது கூட்டத் தொடரில் பிரயோகிக்க உதவ வேண்டாமென மண்டியிட்டுள்ளதை நாம் அறிந்துள்ளோம். அத்துடன் தமது வேண்டுகோளை நிராகரித்த நாடுகள் மீது வேறு நட்பு நாடுகளின் துணையை நாடியும் உதாரணமாக சீனா, கியூ பா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் செல்வாக்கையும் பாவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகள், அணிசேரா நாடுகள், இஸ்லாமிய நாடுகள் மீது எகிப்து, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளைக் கொண்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஐ. நா. செயலாளரினால் மனித உமைச்சபைக்கு அனுப்பப்பட்ட அறிக்கையும் கடிதம் பற்பல திரைமறை இராஜதந்திரம், பேரம் பேசல், விட்டுக் கொடுத்தல் போன்றவற்றிற்கு தற்பொழுது ஆளாக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இலங்கை மீதான ஐ.நா. செயலாளரின் அறிக்கையை இவ் 18 ஆவது கூட்டத் தொடல் விவாதிப்பதா? அல்லது நடவடிக்கை எடுப்பதா போன்றவை தொடர்ந்தும் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.

18 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகிய 12 ஆம் திகதியே இந்த அறிக்கை பற்றி பல குற்றச்சாட்டுகளை வைத்து சபையில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க சில கொழும்பு அரச ஊடகங்களில் உண்மை நிலையை அறியாத ஓர் கதாநாயகனாக வர்ணிக்கப்பட்டார். இதற்கான உண்மை காரணம் என்னவெனில், ஐரோப்பிய நேரத்திற்கும் அமெக்க நேரத்திற்குமிடையில் சரியாக 6 மணி இடைவெளியிருப்பதே காரணியாக அமைகிறது.

என்னவெனில் விடயம் புரியாத மகிந்த சமரசிங்க 12 ஆம் திகதி காலை ஐரோப்பிய நேரத்திற்கு தனது உரையை ஆற்றிய உடனேயே தமது கொழும்பு ஊடகங்களில் செய்திகளும் தெவிக்கப்பட்டு விட்டன.
ஆனால், அமெக்க நேரம் மதியம் 12 மணி என்னும் பொழுது அது இலங்கை நேரம் இரவு ஆகி விடும். இதனால் அமெரிக்காவிலிருந்து இதே 12 ஆம் திகதி அனுப்பப்பட்ட செயலாளரின் அறிக்கை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இதனால் செவ்வாய்க்கிழமை 13 ஆம் திகதி இலங்கையின் பிரச்சாரக் குழு மிக அதிர்ச்சி அடைந்து, செய்வதறியாது பெட்டிப் பாம்பு ஆகியதுடன் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது.

இதனால் தற்பொழுது ஜெனீவாவிலிருந்து வரும் மூன்று அமைச்சர்கள், 4 தூதுவர்கள், முன்னாள் சட்டமா அதிபர், சட்டமா அதிபர்,வெளிநாட்டு அமைச்சு காரியாலய உத்தியோகத்தர்கள், பல பத்திகையாளர் யாவரும் இலங்கை அரசின் உத்தரவில் மீண்டும் தமது கடும் பிரச்சார வேலையை ஜெனீவாவில் ஆரம்பித்துள்ளனர்.

தற்பொழுது இவர்கள் உணவு, உறக்கம் இன்றி இரவு, பகலாக தமது பழைய படலங்களையே தொடர்ந்தும் பாட ஆரம்பித்துள்ளனர்.

இவர்களது பிரசார வேலைகள் இலங்கைக்கு ஏதும் பலனைக் கொடுக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நன்றி வீரகேசரி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.