குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியா, இலங்கைக்கு காலக்கெடு

 18 .09.2011  மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் சாதகமான அபிவிருத்தியை எட்ட வேண்டுமென பிரித்தானியா அறிவித்துள்ளது.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு காத்திரமான தீர்வுகளை இலங்கை முன்வைக்க வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
 
இந்த ஆண்டின் இறுதிக்குள் அரசாங்கம் உரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தவறினால் ஏனைய உலக நாடுகளுடன் இணைந்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையும் செனல்4 ஊடக ஆவணப்படமும் சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அழுத்தங்களின் மூலம் பலவந்தமாக விசாரணைகள் நடத்தப்படுவதனை விடவும் இலங்கையாகவே பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தினால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்த வாய்ப்பாக அமையும் என பிரி;த்தானியா நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.