குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 20 ம் திகதி புதன் கிழமை .

முதல்வர் ஓபிஎசு, யெ.தீபா திடீர் சந்திப்பு: சோகத்தில் சசிகலா-கட்டாயப்படுத்தி பதவிவிலகச்செய்ய வைத்ததா

08.02.2017-   க குற்றம்சாட்டினார்.பன்னீர்ச்செல்வம் முதல்வர் பதவியை விலகல் செய்ய இதுதான் கார ணமா?இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படு த்திய நிலையில், இன்று மீண்டும் செய்தியாள ர்களை சந்தித்த பன்னீர் செல்வம், யெயலலிதா அண்ணன் மகள் யெ.தீபா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு,இரு வரும் இணைந்து செயல்பட வருமாறு தீபாவிற்கு அழை ப்பு விடுத்தார்.சசிகலாவுக்கு சாட்டையடி பதிலடி கொடுத்த பன்னீர் செல்வம் மவிலங்குகளால் தான் சிரிக்கமுடியாது பன்னீரின் தமிழ் அறிவியல் பதில்பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தமை செல்லுபடியாகாது – தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.

இந்நிலையில், யெ.தீபா முதல்வர் பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருவரின் சந்திப்பிற்கு பின்னர் அதிரடி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயப்படுத்தி பதவிவிலகச்செய்ய வைத்ததாக குற்றம்சாட்டினார்.பன்னீர் செல்வம்-அக்கட்சியின் உறுப்பினரான கே.எசு கீதா.

முதல்வர் பதவியை விலகல் செய்ய பன்னீர் செல்வதுடன் அதிமுக பொதுச்செயலாளர் பேரம் பேசியதாக அக்கட்சியின் உறுப்பினரான கே.எசு கீதா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் பதவியில் இருந்து நேற்று முன் தினம் பன்னீர்ச்செல்வம் விலகல் செய்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தன்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக பதவியை விலகல் செய்வதாக பன்னீர் செல்வம் குறிப்பிட்டுருந்தாலும், இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில். அதிமுகவின் நீண்டகால உறுப்பினரான கே.எசு கீதாவை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

அப்போது, பன்னீர் செல்வம் எதற்காக தனது முதல்வர் பதவியை விலகல் செய்தார் எனக் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த கே.எசு கீதா ‘முதல்வர் பதவியை விலகல் செய்ய பன்னீர் செல்வதிற்கு சசிகலா பல நூறு கோடிகளை கொடுத்து பேரம் பேசியுள்ளார்.

ஆனால், இதனை வாங்க பன்னீர் செல்வம் மறுத்துள்ளார். இதனை அறிந்த சசிகலா உடனடியாக பன்னீர் செல்வத்தை அழைத்து மிரட்டியுள்ளார்.

’நீங்களும், சேகர் ரெட்டியும் ஒன்றாக சேர்ந்து எனக்கு எதிராக சதி செய்கிறீர்கள். பணத்தை வாங்க மறுப்பதற்கு நீங்கள் யார்?

எனது கணவருக்கு(நடராயன்) உங்களை பற்றி தெரியும். இந்த ஆட்சியை எப்படி நிர்வகிப்பது என்பதும் அவருக்கு தெரியும்’ என்ற தொடர் மிரட்டல்கள் மூலம் பன்னீர் செல்வத்தை சசிகலா பணிய வைத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தான் சீலா பாலகிருச்ணனும் தனது பதவியை ராயினாமா செய்தார் என கே.எசு கீதா தெரிவித்துள்ளார்.

அதிமுக உறுப்பினரான கே.எசு கீதாவின் இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சசிகலாவுக்கு சாட்டையடி பதிலடி கொடுத்த பன்னீர் செல்வம் மவிலங்குகளால் தான் சிரிக்கமுடியாது பன்னீரின் தமிழ் அறிவியல் பதில்

யெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை.

தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன் என்று அதிரடியாக கூறினார்.

இதையடுத்து அதிமுகவின் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.

மேலும், சுடாலினை பார்த்து பன்னீர் செல்வம் சிரித்ததாகவும், பன்னீர் செல்வத்தின் இந்த திடீர் புரட்சி பின்னணியில் எதிர்கட்சியான திமுக இருப்பதாகவும் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

சுடாலினைப் பார்த்து நேரில் சிரித்தது குறித்து சசிகலா குற்றச்சாட்டு எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும்போது, மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் சிரிக்க முடியும். சுடாலினைப் பார்த்து சிரிப்பது குற்றமாகாது.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக முன்னாள் முதல்வர் யெயலலிதாவால் பொருளாளராக நியமிக்கப்பட்டேன்.

அந்தப் பணியை யெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவனாக, என் மனதுக்கு நிறைவாகச் செய்திருக்கிறேன். அந்தப் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு தமிழகத்தில் யாருக்கும் உரிமையில்லை.

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. கழகம், தொண்டர்கள் எண்ணம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்'' என்று பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தமை செல்லுபடியாகாது – தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.

அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் ஒருவரை நியமிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள  தேர்தல் ஆணைய வட்டாரங்கள் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தமை  செல்லுபடியாகாது  என தெரிவித்துள்ளன.

அதிமுக சட்டவிதிகளின் படி பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுக உறுப்பினர்களும் வாக்குப்பதிவு செய்து   தேர்வு செய்தால்மட்டுமே ஒருவர் பொதுச்செயலராக முடியும்.

1972-ம் ஆண்டு  திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் அல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுமே பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும் என கட்சி விதியை உருவாக்கினார்.

அதேபோல் அதிமுக விதிகளின்படி தற்காலிக பொதுச்செயலர் அல்லது இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்கவும் முடியாது.   இவற்றை  முன்வைத்து தேர்தல் ஆணையத்திடம் சசிகலா நியமனத்துக்கு எதிராக சசிகலா புஷ்பா முறையீடு செய்தார்.

இந்த முறையீட்டினைத் தொடர்ந்து சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில்  அதிமுகவின் சட்டவிதிகளில் உரிய திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியும் எனவும்  அப்படி செய்யாமல் பொதுச்செயலர் ஒருவரை அதிமுகவில் நியமிக்க முடியாது என தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில்  தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.