குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

சினிமாவிலும் இந்துமாயையிலும் மூழ்கிக்கிடக்கும்வரை காலையில்லை என்றும் மாலையே!


13.08.2011-பூநகரி.பொ.முருகவேள்.ஆசிரியர்.சுவிசு

 மலையக மக்களை மாய்த்த மனிதர் வெள்ளையர்-தமிழர்-சிங்களர்.
 இன்னும்  இ( ல)யங்களில் தேயிலைச் செடி விலங்குகளாய் மாய்கின்றனர்.
இவர்களை இப்படியே வைத்திருப்பதில் இ.தோ.காவிற்கு பங்குண்டு.
 பயனுள்ள சில செய்து பெரியகட்சியாய் பயனற்றுக் கிடக்கிறது. அது போல்  த. தே.கூ.அமைப்பு வளருமோ! தமிழருக்கு என்னாகுமோ?
மலையகத்தில் இ(ல)யங்கள் அறையாகக் இருக்கிறது
வன்னியில் பத்து தகரம் கூரையாய் வாட்டி வதைக்கிறது.
கிறிசு பேய்வேறு  வந்திருக்கு அது தமிழரை மட்டுமே கடிக்கிறது.

மலையகத்திலும் கடிக்குது கிழக்கிலும் கடிக்குது
கிறிசு பேய் பெண்களையே கடிக்குது கலைக்குது.
பாதுகாப்பு அமைச்சு செயல் ஏன் பதுங்குது?
அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கோ! என்று கேள்வி எழுந்திருக்கிறது?

கிறிசுபேய் என்று  பெயர் வைத்ததே பெரிய இடமோ எனத்தோன்றுகிறது.!
பிடிபடாது நழுவும் வழுக்கும் ஆனால் எப்டியும் உங்களைத்தாக்கும்.
இலங்கையில் தமிழன் பட்டிணியுடன் பயத்துடன் வாழ்ந்து
முன்னேற்றம் இல்லாது மடங்கட்டும் என்ற திட்டங்களே அரங்கேறும்.

தமிழர் வாழ்வில் அவலங்கள் கலந்திருக்கும் அதற்கான
அடித்தளங்கள் உறுதியாய் ஆக்கப்பட்டிருக்கு!
காசுமீரில் சுவிசுபோன்று அழகிருக்கு சீமைஇலந்தை(அப்பிள்)
விளைய வளமிருக்கு மக்கள் மகிழ்ந்து வாழமட்டுமே முடியாதிருக்கு!

 இது கடவுள் வகுத்த விதி என்பது மடமை மந்திரக்காரரின் சூழ்ச்சி!
 கடவுளுக்கு ஓதுவது மடடும் தொழிலல்ல தாம்மட்டும் உயர்ந்திரக்கத்தந்திரம்.
காசுமீராய் தமிழரிடம் மாறிக்கிடக்கிறது தமிழகம் முழுமையாய்
ஆடாது டில்லி ஆடாது. தமிழகமும் உலகத்தமிழினமும் சினிமாவிலும் இந்து
மாயையில் மூழ்கிக்கிடக்கும் வரை காலையில்லை என்றும் மாலையே!