குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

பொங்குதமிழ் மக்கள் வெள்ளாத்தால் பொங்குவதைவிடவும் கொள்கைகளும் சீர்திருத்தத்தாலும் பொங்கவேண்டும்.(+.-)

16.09.2011.திருவள்ளுவராண்டு.2042- யெனிவாவிற்கு சென்று என்ன செய்யவேணும் என்ன செய்யக்கூடாது.குமரிநாடு.நெற்...

 1.யெனிவா முன்றலில் முருகதாசின்  தசைகள்  நெருப்பில் உருக்கப்பட்ட தமிழர்களின் புனிததேசம் என்பதை உலகஉறுப்பினர்கள்  கூடியிருக்கும் வேளையில் முதல்வணக்க நிகழ்வு மூலம் விளக்கலாம். முருகதாசிற்கே முன்னுரிமை பெரியபடம் சிறப்புபீடம் தமிழர்களின் பண்பாட்டை உணர்த்தும் செப்பு அல்லது பித்தளைப் பெரிய குத்துவிளக்கு (அமங்கலம்) என்பதால் ஒற்ரை திரிமட்டும் எரியவேண்டும்.

2.எல்லாத்தமிழர்களுக்கும் உணர்வுஉண்டு இதைச் சரியாகப் பயன்படுத்துவதே இன்றைய தேவை. எனவே எமது கோரிக்கைக்கோசங்கள் பழையபல்லவிகளாக இருக்கக்கூடாது. திருத்தமானவைகளாக  திட்டமிடப்பட்டு கட்டுப்பாட்டுன் செயலாற்றும் மக்களாக காண்பிக்கப்படவேண்டும். எடுத்துச்செல்லப்படும் படங்கள் அரசின் பயங்கரவாதஅழிப்பு அபிவிருத்தி மீள்குடியேற்றம் என்பவற்றின்  ஏமாற்றை உடைப்பதாக அதாவது அரசதரப்பு திரு.அமரசிங்க அமைச்சரவர்கள் இங்கே அவைக்குள் கூறியதற்கு ஏற்பநாட்டில்  எம்உறவுகளின் நிலை இல்லை. மதிப்பிற்குரிய நவநீதம்பிள்ளை அவர்கள் கூறியது போல் மக்களின் உரிமைகள் மதிக்கப்படாது அழிக்கப்பட்டார்கள்  என்ற சான்றுகளை முன்வைப்போம்.

3.மதிப்பிற்குரிய. நவநீதம்பிள்ளைக்கும்  ஆதரவுநாடுகளுக்கும்  அவர்களின் நீதிக்கும் நன்றிகளைத்தெரிவிப்போம். அய்.நா.சபை நிபுணர்குழு அறிக்கையை மனிதஉரிமைகள் சபைக்கு  அனுப்பிவைத்த  செயலுக்கும் நன்றிதெரிவிப்போம்.  தமிழகமக்களுக்கு தமிழக முதலமைச்சருக்கு நன்றிதெரிவிப்போம்.சர்வதேசவிசாரணைக்கு கோருவோம். இலங்கையின்  சிங்கள அரசுகள் (இரு பெரியகட்சிகளும் இனப்பாரபட்சநீதி முறைகளைக் கையாண்டதாலேதான்)  தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தெரிந்திருந்தாலும்  அவர்கள்ளுக்கு வலுச் சேர்த்து கொடுத்து எமக்காகச் செயற்படவைக்கமுடியும். இந்தியா இத்தருணத்திலாவது  இலங்கைக்கு முண்டு கொடுப்பதை நிறுத்த சர்வதேசத்தின் மூலம் அழுத்தம் ஏற்படும். இது தமிழக முதலமைச்சர் செல்வி யெயலலிதா அவர்களின் இருதீர்மானங்களுக்கும் வலுச்சேர்க்கும் காரியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4.இறுதிப்போரின் போது மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது  உலககவனம் தமிழர்கனைக் கவனிக்கவில்லை என்றகவலையில் இப்பகுதில் இத்திகதியில் தனக்க தானே  தீயிட்டு இறந்தார். அங்குஉறவுகள் இறந்தகவலை ஒருபக்கம் இங்கு இவர் இப்டி இறந்தது ஒருபக்கமாக துயர்கள் இரட்டிப்பானது. துடித்தோம் உலகம் (இந்தியா. சீனா. பாக்கிசுதான் )போன்றநாடுகள்  இலங்கைக்கு உதவிகள் புரிந்தன வேறெந்தமனிதாபிமான முள்ளநாடுகளும் ஆறுதல்  தரவில்லை  தமிழர்களைக் காப்பற்றவில்லை . மாறாக  எம்மை அழித்துக்கொண்டிருந்தவர்களுக்கு உதவிசெய்வதை உணர்ந்து தவித்தோம். இது தமிழர்களின் மனங்களில் வடுவாகிவிட்டது.

5.எல்லா நாடுகளிலிருந்தும் தமிழர்கள் வருவதுடன்  இப்போராட்ட இலக்கு வெற்றியாகிவிடமுடியாது. என்ன செய்தோம் என்னசெய்யப்போகின்றோம் என்பதை அறிந்து வருதலே  முக்கியமானது. இன்றைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பயணநேரத்தையே பயிற்சிப்பட்டடையாக மாற்றலாம்.தமிழினம் தமிழ்மொழி இன்று
உலகில் தமிழர்களாக  உள்ளநாம் தமிழ்மொழிக்கு  கொடுக்கவேண்டிய மொழி அந்தசு. முதலில்  எதிர்காலச்சந்ததியினரை தமிழில் கையொப்பமிடச் செய்தல். இந்துக் கொண்டாட்டங்களை விடுத்து  தமிழ்க் கொண்டாட்டங்களை  அறிந்து முன்னுரிமை கொடுத்தல். தமிழர்களின் தோற்றம் இந்தியாவில் அல்ல குமரிக்கண்டத்தில்  என்ற அறிவியலைப் பாய்சல்.

6..தற்போது உலகசூழலில்  இப்போராட்ட மூலம்  எம்மை ஏற்கசெய்வது  அதற்குதகநடந்து கொள்வது தான் மையக்கரு இதைசெயற்படுத்தினால்  நன்று  இல்லையேல் புதியபானையில் பழையசோறு என்ற கதைதான். முன்புபோல் முடிவையோ விளைவுகளையோ பற்றிச் சிந்திக்காது ஏதாவதுஒன்றை செய்து கொண்டு இருக்கின்றோம் என்ற நிலை எதிர்மறை விளைவுகளைத்தான் தரும் இதற்கு இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் தேவைதான?.

செய்யக்கூடாதவை

1.யெனிவா  முன்றலுக்கண்மியமாக  கோப்(coop) என்ற வர்த்தகநிலையத்தில் மதுபானப் போத்தல்களும்  சேர்வைக்  குவளைகளும் வாங்கப்பட்டு அப்பகுதியில் நின்று கூட்டம் கூட்டமாக மதுஅருந்தும் காட்சி  படப்பிடிப்பு  கருவிகளில் பதிவாகும் என்பதை நாம் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். எமக்கு எதிரானவர்கள் இவற்றை ஊடகங்களில் போடுவார்கள் .

2.கழிவுப்பொருட்களை கண்டஇடங்களில் வீசினால் வீதிகளில் இடையுறுகளை ஏற்படுத்தினால் சுவிசுமக்கள் எம்மை வெறுப்பார்கள். எம்மைப்பற்றி நனறாக எழுதத் தக்கஎதையும் செய்யுங்கள்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.