குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - பிளக்!

 மகிந்த – கோத்தாபய – பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு பிடிவிறாந்து?
17.09. 2011-  தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய வலய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராயாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். புது டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தமிழக தொலைக்காட்சி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
குறிப்பாக யுத்தம் காரணமாக பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் அவலங்களை போக்குவதற்கு துரித கதியில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சகல தரப்பினரும் விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டங்களை வழங்குவதற்கு அரசாங்கம் காத்திரமான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தீர்வுத் திட்டத்தை வழங்கும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தாமதிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
 
தொறயா ஓபெய்டடின்; அறிக்கை வெளிவந்தால் மகிந்த – கோத்தாபய – பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு பிடிவிறாந்து?
16 .09. 2011 
விமல் வீரவன்ச:-

தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய பான் கீ மூன் நியமித்த விசாரணை அதிகாரியான ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா ஓபெய்டடின் அறிக்கை வெளிவந்தால் இலங்கை ஜானதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும், பாதுகாப்பு உயரதிகாரிக்கும் பிடிவிராந்து அனுப்பப்படும் சந்தர்ப்பம் ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச ஆருடம் கூறுகின்றார்.

எனவே இந்த சதிதிட்டத்திற்கு எதிராக இந்த நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரண்டு போராட  வேண்டும் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் கோரிக்கை விடுத்தார்.
 
அத்துடன் இலங்கையில் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றும்படியும், அங்கு தமிழ் பொலிஸாரைக் கடமையில் அமர்த்தும்படியும் குறிப்பிடுவதற்கு ரொபர்ட் ஓ பிளேக் தகதியற்றவர் என்றும் தெரிவித்தார்.
 
ஏனெனில் இலங்கையின் வடக்கே அதாவது இலங்கைக்குள்ளேயே இந்த அரசாங்கம் முகாம்களை அமைத்தள்ளதாகவும், மாறாக அமெரிக்கா போன்று ஏனைய நாடுகளில் முகாம்களை அமைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
அத்துடன் இலங்கையின் பாதுகாப்பிற்காக பொருத்தமான இடங்களில் முகாம்களை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உரிமை இருப்பதாகவும் இதில் பிறநாட்டு பிரஜைகள் தலையிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
முல்லேரியாவில் தோமஸ் கிராமப் பகுதியில் நிரந்தர வீடற்ற 21 குடும்பங்களுக்கு நிர்ந்தர வீட்டுத்தொகுதி கட்டட நீர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு தொடர்ந்தும் உரையாற்றியதாவது :-
 
தருஸ்மான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா செயலாளர் பான் கீ  மூனினால் ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா ஓபெய்ட் விசாணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையும்,  அதன் அதிகாரிகளும் செயற்பட்ட விதம் குறித்து தருஸ்மன் அறிக்கையிலே அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
இதனால் இறுதி யுதத காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை தமது கடமைகளை சரிவர செய்ததா? இல்லையா?  என்பது குறித்து ஆராய்வதற்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயம் உண்மையா? பொய்யா? என்று ஆராய்வதற்கும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தருஸ்மன் அறிக்கையுடன் ஆரம்பமான நாடகத்தின் அடுத்தகட்ட செயற்பாடே இந்த நியமனமாகும்.
 
அன்று இந்த ஆலோசனைக் குழுவை நியமிக்கும் போது இந்த நாட்டு மக்கள் அதற்கு எதிராக அணிதிரண்டு  கிளர்ந்தெழுந்தார்கள் அதன்போது இலங்கை அரசாங்கத்தை சமாதானப்படுத்துவதற்கும், இலங்கை மக்களை ஆற்றுப்படுத்துவதற்கும், இலங்கையின் நட்பு நாடுகளை சமாதானப்படுத்துவதற்காகவும்,  இது தனக்கு ஆலோசனை  வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவே ஒழிய இதனால் யாரும் குழப்பமடைய வேண்டாம் என்று பான் கீ மூன் குறிப்பிட்டிருந்தார்.
 
ஆனால் இன்று குறித்த அறிக்iயினை திருட்டுத்தனமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பியுள்ளார். அதனுடன்  மாத்திரம் நிற்காமல் இந்த அறிக்iயினை மையமாகக் கொண்டு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை ஆராய ஐக்கிய  நாடுகள் சபையின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகைள மேற்கொள்ள ஒருவரை நியமித்துள்ளார்.
 
இந்த  நாடகத்தின் அடுத்த கட்டமாக இந்த விசாரணை அதிகாரி இன்னும் சில மாதங்களில் அதாவது எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமது அறிக்கையையும் வெளிப்படுத்துவார்.
 
அந்த அறிக்கையிலே யுத்த குற்றம் நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இராணுவத்தினரின்  செயற்பாடுகளுக்கு முன்னாள் ஐ.நா செயற்பட முடியாது போயுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
இந்த அறிக்கை தருஸ்மன் அறிக்கை போலல்ல இது  ஐ.நாவின் நேரடி கட்டுப்பாட்டில் நியமிக்கப்பட்ட ஒருவரின் விசாரணை அறிக்கை இந்த அறிக்கை அப்படியே ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்படும்.
 
இதனை அடிப்படையாகக் கொண்டு மார்ச் மாதம் மனித உரிமை பேரவையில் விவாதம் நடைபெறும். இதன்போது மேற்கத்தைய சர்வாதிகார நாடுகள் இதனை தமக்கு சாதகமாகப்பயண்படுத்தி குறித்த அறிக்கைக்கு ஆதராவக பெரும்பான்மை பலத்தை திரட்டும்.
 
இவ்வாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மை நாடுகள் அந்த அறிக்கைக்கு ஆதரவாக இருக்குமாயின், இதனை அடிப்படையாக கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் இலங்கை ஜனாதிபதிக்கோ,  பாதுகாப்புச் செயலாளருக்கோ, பாதுகாப்பு அதிகாரிக்கோ பிடிவிறாந்து அனுப்பப்படும் நிலைமையும் ஏற்படும்.
 
இதுதான் அவர்கள் நடத்திச் செல்கின்ற இந்த  கபட நாடகத்தின் இறுதி முடிவாகும்.
 
அவர்கள் அங்கு அவ்வாறு திட்டம் தீட்டி செயற்படும் போது இங்கு பிளேக் வந்து வேறுவளியில் பிரச்சினையை  உண்டுபன்னகின்றார்.
 
அத்துடன் இலங்கையின் நிலைமை இப்படியே நீடித்தால் இன்னும் 10  வருடத்தில் மீண்டும் ஆயுதப்போராட்டம் தோன்றலாம் என்றும் பிளேக் ஜோசியம் கூறுகின்றார்.
 
இந்த நாட்டிற்குள்ளே எதிர்க்கட்சி என்று ஒன்றும் இல்லை. சகல எதிர்க்கட்சிகளும் இன்று இரண்டு மூன்றாக பிளவுபட்டே காணப்படுகின்றன.
 
இந்த அரசிற்கு எதிராக உள்நாட்டிலே எதிர்க்கட்சிகள் இல்லாவிடினும் சர்வதேசத்தில் எதிர்கட்சிகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. தமிழ் புலி ஆதரவாளர்களான புலம்பெயர்ந்த மக்கள், இந்த நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற சில சுதந்திர ஊடகவியலாளர்கள், அத்துடன் மேற்கத்தைய சர்வாதிகார நாடுகள் போன்றன இன்று இலங்கையை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தி, அடக்கி, முடிக்கி ஆள முற்படுகின்றன.
 
நாட்டிற்குள் இருக்கின்ற எதிர்க்கட்சிகளினால் செய்ய முடியாமல் போனதை சர்வதேசத்திலுள்ள இவ்வாறானவர்களைக் கொண்டு செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் பொலிஸாரைக் நியமித்து அங்கிருந்து இராணுவத்தினரை வெளியேற்றும்படி ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்திருக்கின்றார்.
 
இந்த நாட்டிலே தேவயான இடங்களில் இராணுவ முகாம்களை அமைக்க இந்த அரசாங்கத்திற்கு உரிமை இருக்கின்றது. இதில் தலையிடுவதற்கு பிறருக்கு உரிமை இல்லை.
 
அமெரிக்காவிற்குள்ளே எந்த இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவேண்டும், எந்த இடங்களிலே இராணுவ முகாம்கள் அமைக்கப்படகூடாது என்று தீர்மானிக் பிறநாட்டவர்களுகக்கு உரிமை இல்லை.
 
இந்த அமெரிக்கர்கள் பிறநாட்டிலேயே இராணுவ முகாம்களை அமைத்துக்கொண்டவர்கள். பிறநாடுகளில் இராணுவ முகாம்களை அமைத்துக்கொண்ட அவர்கள் இன்று இலங்கைக்கு வந்து  வடக்கிலே இராணுவ முகாம் தேவையில்லை அதனை அப்புறப்படுத்துமாறு கூறுகின்றார். இதற்கு அவருக்கு உரிமையோ அருகதையோ இல்லை என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.