குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

நிபுணர்கள் குழு அறிக்கையை திடீரென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தாக்கல்அரசு த.தே.கூ. பேச்சு.

 17. .09. 2011  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழு அறிக்கையை திடீரென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்தது சட்டவிரோதம் எனவும் இது குறித்து பிராந்திய நாடுகளுக்கு தெளிவுப்படுத்தி உள்ளதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையின் 18 வது கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலி உள்ளடக்கப்படாது, நிபுணர்கள் குழுவின் அறிக்கை திடீரென தாக்கல் செய்துள்ளமை சம்பந்தமாக பிராந்திய நாடுகள இலங்கைக்கு கொள்கை ரீதியான இணக்கத்தை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
 நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பெறப்பட்ட விதம் குறித்து இதுவரை வெளியிடப்படாத நிலையில், அதில் அடங்கியுள்ள தகவல்கள் சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
 ஆப்பிரிக்க, ஆசிய, லத்தின் அமெரிக்க, முஸ்லீம் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஜெனிவாவில் நடைபெற்ற சந்திப்பின் போது, இந்த விடயம் குறித்து தெளிவுப்படுத்தி உள்ளதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் கூறியுள்ளார். 
 ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப பிரித்தானிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - பிரயன் பின்லே
16 .09. 2011  ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு பிரி;த்தானியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய அனைத்து பாராளுமன்றக்குழுவின் செயலாளர் பிரயன் பின்லே தெரிவித்துள்ளார்.
 
இந்திய துணைக்கண்டத்தின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
 
மனித உரிமை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபடுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
காயங்களை ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் எனவும் வெளிச்சக்திகள் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்தால் காயங்களை ஆற்றுவதில் சிகக்ல் நிலைமை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகளை நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்துவதன் மூலம் பிரச்சாரங்களை முறியடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என பிரித்தானிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சியோபியான் மெக்டொனாஹ் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் தலைமையில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படும் வரையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் சகலருக்கும் நீதி நியாயம் கிட்ட வேண்டியது அவசியம் என கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்ட வேண்டும் எனவும், சில முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினரும் உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தி வருவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் புருட் தெரிவித்துள்ளார்.
 
பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சி எடுத்த போதிலும் முயற்சிகள் பூரணப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நிலையான சமாதானத்தை ஏற்படுத்த இன்னமும் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
16 .09.2011-  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடத்துவது என இணக்கம் காணப்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமது கட்சியினால் முன்னர் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் 2011 மார்ச் 18 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறிய அவர், இரு தரப்பினருக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடத்தவும் இணக்கம் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

 தே.கூ. அமைப்பிற்கும். அரசாங்கத்திற்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை:-

16-09-2011

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை இன்று 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.

இன்று ஆரம்பிக்கப்படும் பேச்சுவார்த்தையின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஏற்கெனவே கையளித்திருந்த தீர்வுத் திட்ட ஆலோசனைகள், சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா ஆகியோருடைய காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்ட ஆலோசனைகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் ஆலோசனைகள் என்பவற்றை ஆய்வுக்கெடுத்து அதனூடாக ஒரு தீர்வைக்காணலாம் என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே மீளவும் இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 ஏற்கெனவே இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடாத்தப்பட்ட 6 சுற்றுப் பேச்சுக்களின் போதும் திருப்திகரமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக்கூறி  கடந்த மே12ஆம் திகதி நடந்த 6வது சுற்றுப் பேச்சுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்து பேச்சுவார்த்தையிலிருந்து விலகியிருந்தது.

 ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடந்தாலும்  அவற்றில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. சிறுசிறு விடயங்களுக்குக் கூடத் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிக்கும் போக்கையே அரசு கடைப்பிடிக்கிறது. தலைமையுடன் பேசி முடிவு தெரிவிப்பதாக முதல் சுற்றுக்களில் கூறப்பட்ட விடயங்களுக்கே இதுவரை தீர்க்க மான பதிலை அரசு கூறவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அப்போது குற்றம் சாட்டியிருந்தது.

 இலங்கை அரசுடன் 6 ஆம் கட்டப் பேச்சை முடித்துக்கொண்ட கூட்டமைப்பு பேச்சுக்குழு, நேரடியாக இந்தியத் தூதரகம் சென்று தூதர் அசோக் கே.காந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

பேச்சுக்களில் மாகாணத்துக்கு அதிகாரங்களைப் பகிர்வது குறித்து ஆராயப்பட்டது. எனினும், இன்னமும் தெளிவான இணக்கம் ஏற்படவில்லை. அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் இலங்கைத் தரப்பிடம் உற் சாகத்தைக் காணவில்லை. தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் அரசுத்தரப்பு செயற்படவில்லை.

உடனடியாகச் செய்ய வேண்டிய விடயங்களில் கூட இதுவரை இணக்கம் ஏற்படவில்லை. சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோர், தடுப்பு முகாம்களில் இருப்போர், மீளக்குடியமர்வு போன்ற விடங்களில் கூட இன்னமும் அரச தரப்பு தீர்க்கமான பதில் தரவில்லை. ஒவ்வொரு பேச்சிலும் இவை தொடர்பாக நாம் எடுத்துக்கூறியும் அரசு பதில் தரத் தயங்குகிறது.

இணங்கிய ஒரு சில விடயங்களைக் கூட நடைமுறைப்படுத்துவதில் கால இழுத்தடிப்புத் தொடர்கிறது. ஒரு தடவை ஆராயப்படும் விடயம் குறித்து உயர்மட்டங்களுடன் பேசியபின் அடுத்த தடவை பதிலளிப்பதாக அரச தரப்பினர் கூறுகின்ற போதும் அப்படி நடைபெறுவதே இல்லை.

பேச்சு நடைபெறும் திகதிகளுக்கு இடையில் நீண்ட இடைவெளி காணப்படுகிறது. விரைந்து பேச்சை முடிக்கும் நோக்கம் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுக்களை அரச தரப்பினர் மீது கூட்டமைப்பினர் முன் வைத்திருந்தனர்.

தாம் முன்வைத்த விடயங்கள் குறித்து எழுத்து மூலமான பதிலைக் கோரி இரண்டு வார காலக்கெடு விதித்து கூட்டமைப்பு பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி இருந்த போதும் இலங்கை அரசாங்கம் அவற்றிற்கான எழுத்து மூலமான பதில் எதனையும் வழங்கியிருக்கவில்லை. தற்போது அவ்வாறான எழுத்து மூலமான பதில் எதனையும் கூட்டமைப்பிற்கு இலங்கை அரசு வழங்காத நிலையிலும் மீளவும் இன்றுபேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு தயாராகி இருப்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

இதேவேளை இன்று மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கான அழுதத்தத்தை இலங்கை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்தியா கொடுத்துள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு ஏற்பட்டு வரும் அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக இந்தியாவே இரண்டு தரப்புக்களுடனும் பேசி பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வை ஏற்படுத்தியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இத்தலையீடு இலங்கையில் அதனுடைய இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதா என்ற கேள்வியை அவதானிகள் மட்டத்தில் எழுப்பியுள்ளது.  

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நாளைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

 15-09-2011 - அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதித்ததன் காரணமாக பேச்சுவார்த்தைகள் இடைநடுவில் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது.
 
அரசாங்கத்துடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.