குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழர்களே சிந்தியுங்கள் கீழே வரும் பெயர்கள் தமிழா.....? சிந்தியுங்கள் தமிழர்களே......

தைத்தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது?

தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?


1.தமிழ்த்தைப்பிறப்பான தைப்பொங்கல் நாளே தமிழ் ஆண்டுப்பிறப்பு.இதுவே திருவள்ளுவர் ஆண்டு.

2.நாட்கள்(கிழமைகள்)புதனும்,சனியையும் தவிர ஏனையவை தமிழிலேதான் இருக்கின்றது.அறிவன் (புதன்) காரி-(சனி)

3.மாதங்கள் 12 உம் தமிழில் இல்லை.

4.உலகம் பயன்படுத்தும் 1,2,3,4,5,6,7,8,9, ...என்ற எண்கள் தமிழ் எழுத்துக்களிலிருந்து தோன்றியவையாகும். இவைதொடர்பாக மேலும். எதிர்வரும் தைப்பொங்கல் 2041 ஆம் தமிழாண்டு ஆகும்.

மாதங்களின் பெயர்கள்


தமிழில்                                             வடமொழியில்

சுறவம்                                                   தை

கும்பம்                                                  மாசி

மீனம்                                                    பங்குனி

மேழம்                                                 சித்திரை

விடை                                                  வைகாசி

இரட்டை                                              ஆனி

கடகம்                                                  ஆடி

மடங்கல்                                              ஆவணி

கன்னி                                                 புரட்டாதி

துலை                                                  அய்ப்பசி

நளி                                                    கார்த்திகை

சிலை                                                   மார்கழி

உலகம் பயன்படுத்தும் எண்கள் தமிழருடையது.1,2,3,4,5,6,7,8,9, ...இதை அராபியருடையது என்று கூறப்படுகின்றன. ஆனால் அராபியர்களுக்கு எண்ணின் பழைய வரலாறு தெரியல்லை.இந்திய எண்கள் என்பர்.வடநாட்டு இந்தியருக்கும் இவை பற்றி ஒன்றும் புரிவதில்லை ஏனென்றால் அவர்கள் தமிழர்களிடமிருந்து பெற்றமையே. இந்த எண்கலையை பழம் தமிழகத்தாரே உலகுக்கு வழங்கினர் என்ற உண்மையை மூதறிஞர் வரதராசனார் கூறுகின்றார்.

தமிழாண்டை எப்படிக்கணக்கிடுவது? கிறிசுது ஆண்டுடன் 31 அய்க்கூட்டினால் வரும் கூட்டு எண்ணிக்கையே தமிழாண்டாகும். 2010+31 = 2041 இது இனிவரும் நடைமுறைத்தமிழாண்டு. அத்துடன் தமிழர் தொன்மையில் இயற்கையின்மீதும் நன்றி உணர்விலும் எவ்வளவு ஆழமாக இருந்தார்கள் என்பதை பிற இனத்தாருக்கும் தமிழர்களுக்கும் விளக்கவேண்டும். சுவையான  சக்கரைப்பொங்கல்...முறுக்கு...சீனிஅரியாரம்... பால்ரொட்டி... பயிற்றம்பணியாரம் போன்றவற்றை அழகாகப்பொதிசெய்து வழங்கி உரையாடும் போது எம்துயர்களையும் விளக்கவேண்டும். அதிகமான தமிழர்கள் பிறப்பியம் (சாதகம்) எழுதிவைத்திருப்பது வழக்கமாகயிருக்கிறது. தனிமனித வாழ்வில் கவனம் செலுத்தியதமிழர்கள் குமுகாயம் (சமுதாயம்) இனம்.. மொழி என்று

எண்ணி தமக்கான ஆண்டுக்கணக்கை ஏன்பழக்கிக்கொள்ளவில்லை.

ஆரியரின் கற்பனைக்கதைகளின் ஒன்றில் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்களே ” பிரபவ ” முதல் ”அட்சய” வரையான 60 ஆண்டுகளின் பெயர்களும் கூட தமிழிலில்லை. இவை எப்படித்தமிழாண்டு ஆகும்? நாடு கேட்ட நாங்கள் இதையெல்லாம் எண்ணவில்லையே... எனவே தமிழர் ஆண்டாக 1921 ஆம் ஆண்டுசென்னைப்பச்சையப்பன் கல்லுரியில் 500 தமிழ்

அறிஞர்கள் மறைமலை அடிகள் தலைமையில் ஆராய்ந்து முடிவுசெய்தனர்.

தமிழர்கள் வடஇந்தியர்களின் ஆண்டுமுறையைப் பின்பற்றுவதால் சீனர் மற்றும் இனத்தாவர்களின்  ஆண்டுமுறைபோல் எம்மிடையே இல்லை என்றும் இதனால் திருவள்ளுவரின் பிறப்பை ஆதாரம் கொண்டு கிறிசுது ஆண்டுடன் 2010+31  = 2041 முறையை தமிழக அரசபதிப்பில் பதிவாகிவந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்ப்பற்றாளர்கள் அரசியலில் ஈடுபாடுஅற்ற சுவிற்சர்லாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளிலுள்ள நல்நோக்காளர்களும் ஆபிரிக்க மலேசியத்தமிழர்களுடன் தமிழகத்தமிழுணர்வாளர்களும்.. இலங்கை நண்பர்களும் இணைந்து இனம்.. மொழி.. வாரலாற்றில் சீர்திருத்த எண்ணமுள்ளோரும் ஆரிய ஆரவாரத்தில் அகப்படாத நுண்ணாற்றல் பெற்றோரும்.. இந்திய அரசின் அனுமதியுடன் தமிழக அரசில் பதிவாக்கி சென்றாண்டு.

02.01.2009 இல் முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்கள் அறிவித்தார்.அத்தோடு தமிழாண்டுப் பிறப்பு வழிபாட்டை தைப்பொங்கல் அன்றே செய்யலாம் என்று சட்டமும் இயற்றினார்.சித்திரைப் பிறப்பில் தமிழாண்டுப்பிறப்பிற்கு வழிபாடு செய்வதை மறுத்துள்ளார்.இவற்றை ஆர்வமாக அறியாது அரசியல் வெறுப்பால் ஓர் இனத்துக்கானதை மறுப்பது மடைமை.முதலில் நிலம் (பூமி) உருண்டை என்றபோது மதச்சட்டக்காரர் அவர்களை உயிரோடு கொழுத்தவேண்டும் என்றார்கள்.மிதியுந்து..விண்ணுந்தை அறிமுப்படுத்தியவர்களை அடித்து விரட்டியதை அறிவோம்.இன்று அவற்றையே பயன்படுத்துகின்றார்கள் என்பதை எண்ணி தமிழர் மூளை விலங்கை உடைக்கும் மூலிகைகள் போன்றவற்றை இன்னும் தேடுவோம்.துாய தமிழ்உணர்வோடு நடைமுறைப்படுத்துவோம்.


பூநகரி. பொ.முருகவேள். ஆசிரியர்சுவிற்சர்லாந்து.

 

தமிழர்களே சிந்தியுங்கள் கீழே வரும் பெயர்கள் தமிழா.....? சிந்தியுங்கள் தமிழர்களே......

1 பிரபவ 2 விபவ 3 சுக்ல 4 பிரமோதூத 5 பிரசோர்பத்தி 6 ஆங்கீரச 7 ஸ்ரீமுக 8 பவ 9 யுவ 10 தாது 11 ஈஸ்வர 12 வெகுதானிய 13 பிரமாதி 14 விக்கிரம 15 விஷு 16 சித்திரபானு 17 சுபானு 18 தாரண 19 பார்த்திப 20 விய 21 சர்வசித்து 22 சர்வதாரி 23 விரோதி 24 விருத்தி 25 கர 26 நந்தன 27 விஜய 28 ஜய 29 மன்மத 30 துன்முகி 31

கேவிளம்பி 32 விளம்பி 33 விகாரி 34 சார்வரி 35 பிலவ 36 சுபகிருது 37 சோபகிருது 38 குரோதி 39 விசுவாசுவ 40 பிராபவ 41 பிலவங்க 42 கீலக 43 செளமிய 44 சாதாரண 45 விரோதிகிருது 46 பரிதாபி 47 பிரமதீச 48 ஆனந்த 49 ராட்சச 50 நள 51 பிங்கள 52 காளயுக்தி 53 சித்தார்த்தி 54 ரெளத்திரி 55 துன்மதி 56 துந்துபி 57 ருத்ரோத்காரி 58 ரக்தாட்சி 59 குரோதன 60 அட்சய......

 

தை - தமிழ்ப் புத்தாண்டு - மதச்சாயமோ அரசியல் சாயமோ பூசாதீர்கள்..

சமச்சீர் கல்விக்குப் பிறகு, தமிழக சட்டமன்றத்தில் பிறந்து இரண்டே ஆண்டுகள் ஆன தை - தமிழ்ப் புத்தாண்டு திமுகச் சாயமும் மதச்சாயமும் பூசப்பட்டு  பலியிடப்பட்டது. இப்போதெல்லாம் தமிழக சட்டமன்றம் திமுக ஆட்சிக் காலத்து ஆடுகளை பலிகொடுக்கும் பலிபீடமாய் மாறிவிட்டது. தினமும் சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் சட்டமன்றத்திற்குள் நுழையும் போதெல்லாம் இன்றைக்கு எந்த ஆடு பலியாகப் போகிறதோ என்று ஒரு மிரட்சியுடன் தான் உள்ளே நுழைகிறார்கள்.

அப்படித் தான் திமுக ஆட்சிக்காலத்தில் 2008 - ஆம் ஆண்டில் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்ட தை - தமிழ்ப் புத்தாண்டு என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் இன்னொரு சட்டத்தின் மூலம் சித்திரை - தமிழ்ப் புத்தாண்டாக மாற்றிவிட்டனர். அதற்கு முதலமைச்சர் சோதிடம், வானசாஸ்திரம், மதம் போன்ற அறிவியலுக்கோ வரலாற்றுக்கோ பொருந்தாத சான்றுகளை அள்ளி வீசி, திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக தமிழ்ப் புத்தாண்டு  என்பது தை முதல் நாளாக மாற்றப்பட்டது என்று கூறி ''சுவாஹா'' என்று முடித்து விட்டார்.

தை - தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பதற்கான நியாயமான சான்றுகள் கடந்த கால வரலாற்றிலும், இலக்கியங்களிலும் உள்ளன என்பதை தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டில் 2008க்கு முன்பும் வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்பகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர். பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை தமிழ்மக்களிடம் பழக்கத்தில் வந்துள்ளது. இந்த ஆண்டு கணக்கீடு பற்சக்கர முறையில் அமைந்துள்ளது. அறுபது ஆண்டுகள் ஒரு சுழற்சியாக கருதப்படுகிறது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பது தமிழறிஞர்களின் வாதம்.

இதையொட்டி குமரிக் கண்டமாக தமிழர் நிலப்பரப்பு பரந்து விரிந்திருந்த காலம் தொட்டே தை முதல் நாளே தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடினர் என்று கூறி, தனித் தமிழர் இயக்கத் தலைவர் மறைமலை அடிகளும் 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களும் புலவர்களும் வரலாற்று ஆசிரியர்களும் ஒன்று கூடி விவாதித்து, கடந்த 1921-ம் ஆண்டில் அறிவித்தனர். இந்த அறிவிப்பை 1971ம் ஆண்டு ஆட்சியிலிருந்த தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.

அப்போதிலிருந்து தமிழர்களின் ஆண்டு என்பது திருவள்ளுவரின் பிறப்பை (இயேசு கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் திருவள்ளுவர் என்கிறது தமிழ் வரலாறு) மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டது. தமிழக அரசுத் துறை சார்ந்த அனைத்து ஆவணங்களிலும் திருவள்ளுவராண்டும், தை முதல் நாளை மையப்படுத்திய புத்தாண்டு முறையும் நடைமுறையிலிருந்தது. அரசிதழிலும் இது வெளியாகியுள்ளது. தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று தமிழக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது

பண்டை காலத்திலேயே தை புத்தாண்டு :

உலகில் பூர்வகுடி மக்களாக சில ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் குமரி கண்டம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு வாழ்ந்த தமிழர்கள் இயற்கையை வணங்கி வந்தார்கள். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை  என  இவை தான் மாறி மாறிப் பருவக் காலங்களாக  மனிதனை ஆண்டு வந்ததால்,  தமிழன் ''ஆண்டு'' என்று அழைத்தான் என்று சொல்லப்படுகின்றது.  மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் முன்னதானது  என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்க  நூல்களிலும் காணப்படும் வானியல்  செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்று கூறப்படுகின்றது. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரே தமிழர்கள் வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.  பண்டையத் தமிழர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள்  சூரியன் மற்றும் சந்திரன்  ஆகியவற்றின் இயக்கத்தையும் பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் இயற்கையை  ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் கால பகுப்பு :

பொழுது, நாழிகை :

"வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு,மாலை, யாமம்" என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.

 

1நாழிகை - 24 நிமிடங்கள்

60 நாழிகை -1440 நிமிடங்கள்

 

இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்

 

1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்

24மணித்தியாலங்கள் -1 நாள்

இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பருவ பகுப்பு

தமிழன் காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.

 

1.இளவேனில் - தை - மாசி மாதங்கள்

2.முதுவேனில் - பங்குனி - சித்திரை மாதங்கள்

3.கார் - வைகாசி – ஆனி மாதங்கள்

4.கூதிர் - ஆடி - ஆவணி மாதங்கள்

5.முன்பனி - புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்

6.பின்பனி – கார்த்திகை - மார்கழி மாதங்கள்

 

தமிழர்களின் ஆண்டு பகுப்பு

2 கண்ணிமை - 1 நொடி

2 கை நொடி - 1 மாத்திரை

2 மாத்திரை - 1 குரு

2 குரு - 1 உயிர்

2 உயிர் - 1 சணிகம்

12 சணிகம் - 1 விநாடி

60 விநாடி - 1 நாழிகை

2 1/2 நாழிகை - 1 ஓரை

3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் - 1 சாமம்

4 சாமம் - 1 பொழுது

2 பொழுது - 1 நாள்

15 நாள் - 1 பக்கம்

2 பக்கம்(30 நாள்) - 1 மாதம்

6 மாதம் - 1 அயனம்

2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு

60 ஆண்டு - 1 வட்டம்

-என்று தமிழர்களால் தெறிப்பளவு (Time Measure) முறையில் ஆண்டுகள் கணக்கிடப்பட்டு வந்துள்ளன

அறிஞர்கள் பார்வையில் தமிழ் புத்தாண்டு

பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும், தமது நாகரீகத்தையும், தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியினரான உலகின் மூத்த தமிழ்க் குடியினர், அவர்களது மொழி மற்றும் வாழ்வியல் கூறுகளை பூமியின் சுழற்சியை சரியாக மதிப்பிட்டும், இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தும் தமது காலக் கணிப்பீட்டு முறைமைகளை உருவாக்கியவர்களாவர்.

''காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப் படுத்திக்கொண்டான்''

பொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்றே அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முந்தைய  நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது - போகியது - போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது. எனவே போகி என்பது போக்கிய நாளானது. (பழைய ஆண்டு) புது நாள் என்பது புத்தாண்டாகவும் கொள்ளப்பட்டது. எனவே தமிழரின் புத்தாண்டு பழந்தமிழரின் காலக் கணிப்பீட்டுக்கு அமைவான தை மாதம் முதலாம் நாளிலேயே கொண்டாடப்பட வேண்டும்.

''தை'' முதல் நாளே தமிழன் புத்தாண்டு என்று கூறுவதற்கான சான்றுகள் :

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம். "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் தமிழர் முதுமொழியை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்" என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு இன மக்களும் தத்தமக்குரிய புத்தாண்டை இளவேனில் காலத்திலேயே கொண்டாடுகின்றனர்.  அன்றைய தினமே தத்தமது புதுப் பணிகளையும், நற்செயல்களையும் தொடங்குகின்றனர். ஆனால் சித்திரை மாதத்தில் குறிப்பாகத் தமிழர்கள் எந்த நற்செயல்களையும் தொடங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தை மாத தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாக காலம்  காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரம் செய்தல், பொங்கலை பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்கு படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றன.

இவை அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக யப்பானியர்களாலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் பண்பாட்டு ஒருமைப்பாடு இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த தைப்பொங்கல் நாள் பண்டையக் காலம் தொட்டே சமயச்சார்பற்று அனைத்து தமிழர்களது  திருநாளாக விளங்குகின்றது. அதேப் போன்றே தை மாதம் முதல் நாள் தொடங்கும் தமிழ் புத்தாண்டு நாள்; உலகில் தமிழ் பேசும் அனைவரதும் புத்தாண்டு பிறப்பு நாள் என்பது தமிழ் அறிவியலாளர்களின் ஆய்வில்  முடிவாகியுள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு  பற்றிய வரலாற்றை தமிழ்  மக்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ளவேண்டும்.

தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு

மலர்ந்தொளிரும் தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்றது. அதனை முன்னிட்டு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" கூறும் அதேவேளையில், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான வரலாற்றினைத் திரும்பிப் பார்க்க அன்போடு அழைக்கிறேன்.

கடந்த திருவள்ளுவராண்டு 2039 (அதாவது ஆங்கில ஆண்டு 2008)இல், தமிழ்நாட்டு அரசு தமிழகத்தின் ஆளுநர் வழியாகத் தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என உலகத்திற்கு அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாக வரவேற்றுப் பேருவகை அடைந்தனர்.

இந்த அறிவிப்பின் வழியாக, தமிழர்களிடையே பலகாலம் நிலவிவந்த "தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா?" என்ற கருத்து வேறுபாட்டுக்கு முடிந்த முடிவாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்பாக...

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டுமுறையை அதிகாரப்படியாக ஏற்றுக்கொண்டு 1971ஆம் ஆண்டுமுதல் அரசு நாட்குறிப்பிலும் அதன்பின்னர் 1972 முதற்கொண்டு அரசிதழிலும் 1981 தொடங்கி அரசாங்கத் தொடர்புடைய அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வந்துள்ளது.

இதற்கும் முன்பாக...

1921ஆம் ஆண்டு தமிழ்க்கடல் தவத்திரு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுமுறைகளின் அடிப்பையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர்.

1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு 2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல் 3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும்.

தமிழுக்கு அரணாக இருந்துவிளங்கிய 500 தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு தமிழ் ஒன்றையே முன்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.

அன்றுதொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.

இதற்கெல்லாம் முன்பாக...

தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளனர். இதற்கான அகநிலைச் சான்றுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும் "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும் ""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும் "தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும் "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்

தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியப் பாடல்களில் சான்றுகள் இவ்வாறு இருக்க, பாமர மக்கள் வழக்கிலும் பழமொழி வடிவத்தில் சில சான்றுகளும் இருக்கின்றன.

"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும் "தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்

தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன.

மேற்சொன்ன அனைத்துக்கும் மேலாக...

உலகத்தில் இயற்கை என்று ஒன்று இருக்கின்றது. அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு ஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவ மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் என்றும் கூறுவர்.

ஆக, சூரியன் வடதிசை நோக்கிப் புறப்படும் புதிய பயணத்தைத் தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனைச் சூரியப் பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருந்த அமைந்துள்ளன. ஆகவே, இதனைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டது இயற்கையின் சட்டத்திற்கும் உட்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

இத்தனைக்கும் இடையில்...

ஆதியிலிருந்து தைத் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது. கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சித்திரைப் புத்தாண்டுக் கணக்கும் தமிழருக்கு உரியதே.

பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியதுதான்.

இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாது, தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடிதோட் செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.

முடிவும் விடிவும் இதுதான்!

ஓர் இடைக்கால மாற்றம் என்பதாலும், ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டதாலும், பார்ப்பனியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கதிமாக நேர்ந்துவிட்டதாலும் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கமுடியாது என 1921இல் 500 தமிழறிஞர்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பதை ஆய்வுப்பார்வையும் அறிவுநோக்கும் கொண்ட எவரும் ஒப்புவர். அதுபோலவே ஆவணிப் புத்தாண்டும் வழக்கற்றுப் போனதோடு காலச்சூழலும் மாறிப்போய்விட்டது.

இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! கடவுளின் தீர்ப்பு!

உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஆங்கில மாதப் பெயர்களைத் தமிழில் எழுதினால்..

ஆங்கில மாதப் பெயர்களைத் தமிழில் எழுதுவது குறித்து பலர் என்னிடம் வினவி இருக்கின்றனர். அவர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஏற்றுக்கொண்டு பயன்படுத்துபவர் சிலர். கேட்டதோடு சரி என்று விட்டுவிட்டவரும் சிலர். அண்மையில் திருத்தமிழ் மறுமொழி பகுதியில் இதேபோல் ஒரு வினாவை எழுப்பி இருந்தார்? அதை அப்படியே கீழே தருகின்றேன்:-

"தமிழ் வருடங்கள் மாதங்கள் திகதிகள் என வகையுள்ளன. அவ்வகைப்படுத்தியை பலர் ஆசைக்கும் ஆர்வத்திற்கும் தெளிவு படுத்த முடியுமா..?

காரணம், சூன்- என்று உங்கள் பதிவில் உள்ளன. அவை தமிழ்ப்பெயருள்ள மாதமா..?

இப்படி பலர் எழுதுகின்றனர். அதனால் தான் தமிழ் அறிந்த உங்களிடம் வினவுகின்றேன்... தயவுடன் தாருங்கள்" -விழி வானலை.

சில காலத்திற்கு முன்பு ஆசிரியைத் தோழி ஒருவரும் இது தொடர்பாகக் கேட்டிருந்தார் இப்படி:-

"வணக்கம் ஐயா. என் பள்ளியில் தமிழ்மொழி ஆசிரியர்கள் மத்தியில் ஒரு சர்ச்சை. august மாதத்தைத் தமிழில் எப்படி எழுதுவது? ஒரு சாரார் ஆகஸ்ட்டு என்றும் ஒரு சாரார் ஆகஸ்டு என்றும் எஞ்சியவர்கள் ஆகஸ்ட் என்றும் எழுதி மாணவர்களைக் குழப்பிவிட்டனர். தயவுசெய்து ஒரு சிறந்த விளக்கம் அளியுங்கள்." -ஜெயா சுப்ரா

இவர்கள் இருவருக்கும்.. இதேபோன்ற மயக்கம் இருக்கும் அன்பர்களுக்குமாகச் சேர்த்து இந்தப் பதிவை இடுகின்றேன்.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்று பலர் மிக இயல்பாக எழுதிவருகின்றனர்! அச்சு ஊடகங்களும் இப்படியே எழுதுகின்றன! பள்ளிப் பாட நூல்களிலும் அப்படியே! இதுவே சரி எனப் பிடிவாதம் செய்து சாதிப்பவர்களும் இருக்கின்றனர்.

உண்மையில் பார்க்கப்போனால், மேலே உள்ளவையும் அல்லது ஆகஸ்ட்டு, ஆகஸ்டு, ஆகஸ்ட் இவை எதுவுமே தமிழ் வடிவம் அன்று. காரணம், இவற்றில் சமற்கிருத / கிரந்த எழுத்துக் கலப்பு உண்டு. இவை, சிலரால் தமிழில் ஏற்றப்பட்ட - ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவம் மட்டுமே.

ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் தனி இயல்பு, தனித்தன்மை உண்டு. ஒரு மொழி போல இன்னொரு மொழியை 100% சரியாக ஒலிக்க முடியாது. அப்படி ஒலிக்க நினைப்பதும் மொழியியல் அடிப்படையில் மிகத் தவறு.

சுபானிசு (Spanish) மொழியில் எப்ப்டி எழுதுகிறார்கள் தெரியுமா?அரபு மொழியில் ஆங்கில மாதப் பெயர்களை எப்படி எழுதுகிறார்கள் பாருங்கள்.

yanayir, fibrayir, maris, abrīl, mayu, yunyu, yulyu,

aġustus, sibtambir, uktubar, nufambir, disambir

பிரெஞ்சு மொழியைப் பாருங்கள்:-

Janvier, Février, Mars, Avril, Mai, Juin, Juillet,

Août, Septembre, Octobre, Novembre, Décembre

அவ்வளவு ஏன் நமது மலாய் மொழியைப் பாருங்களேன்:-

Januari, Februari, Mac, April, Mei, Jun, Julai,

Ogos, September, Oktober, November, Disember

இவற்றுள் Mac (March), Ogos (August) ஆகிய இரண்டும் முற்றிலும் மாறுபட்டிருப்பதைக் கவனிக்க.

ஆக, அவ்வந்த மொழியின் ஒலியன்களுக்கு ஏற்பவே பிறமொழிச் சொற்கள் ஒலிக்கப்படும். உலக நடைமுறையும் இதுதான்.

ஆனால், இந்தத் தெளிவு இல்லாத காரணத்தாலும், ஆங்கிலத்தின் மேலுள்ள அளவுக்கதிமான மோகத்தாலும், ஆங்கிலேயன் என்னவோ கோபித்துக் கொள்வான் என்ற எண்ணத்தாலும்...

ஆங்கிலத்தைச் சிறிதும் பிசகாமல் ஒலிக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறோம். கொஞ்சம் மாற்றி ஒலித்தாலும் கூட மாபெரும் மொழித்தவறு, உச்சரிப்புப் பிழை, மொழிச் சிதைவு செய்துவிட்டது போல குற்ற உணர்ச்சிக்கு நாம் ஆளாகிப் போகிறோம்.

மொழி பயன்பாட்டில் தெளிவு உள்ளவர்கள் இவ்வாறு குழம்புவதே கிடையாது. ஆங்கிலத்தைத் தவறாக உச்சரித்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாவதும் கிடையாது.

அந்த அடிப்படையில், தமிழுக்குச் சில தனித்தன்மைகள், இலக்கணம், மரபு என்று உண்டு. இவைகளைப் பின்பற்றித்தான் பிறமொழிச் சொற்களை உச்சரிக்க வேண்டும். மொழியியல் அடிப்படையில் அதுவே சரியானதும் கூட.

ஆகவே, ஆங்கில மாதங்களைத் தமிழ் முறைப்படி, தமிழ் ஒலிப்புபடி, தமிழ் எழுத்துபடி உச்சரிப்பதே சரியானது. அதன்படி, ஆங்கில மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு:-

சனவரி, பிப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்தெம்பர், அத்தோபர், நவம்பர், திசம்பர்

இப்படி பயன்படுத்துவோர் சிலர் மட்டுமே. ஆனாலும் இதுவே சரியான வடிவம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.