குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றனர்- றொபேர்ட் பிளேக்.

 16.09.2011த.ஆ.2042-  தக்கஅறிவிப்பு இதற்குபின்னரும் கெடுப்போராக தமிழர்களே!  உலகம் ஏற்றபுலிகளை அழித்தகாரணம் தமிழர்களுக்கு தெரியும் தமிழர்களும்  உலகமும் எதிர்பார்த்த நன்மைகளை விடவும்  எதிர்மறை விளைவுகளால் தமிழர்கள் அழிந்தார்கள்.விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றதற்கு முதற்காரணம் என்ன என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தங்களுடைய உரிமைகள் கரைந்து போகின்றன என்று தமிழ் மக்கள் பெரிதும் விரக்தி அடைந்திருந்த நிலையில் தான் விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றனர் என அமெரிக்க பிரதி இராயாங்க செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

அவர்கள் பயங்கரவாத போராட்ட பாதையை தெரிவு செய்தனர். அமெரிக்கா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது என்றும் அவர் தெரிவித்தார்.   ஆனால் தமிழ் மக்களின் உரிமைகள் கரைந்து போன காரணத்தால்தான் விடுதலைப்புலிகள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது என அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் வரலாறுகளை நிபுணர்கள் பலர் ஆய்வு செய்துள்ளனர். அரசாங்கங்கள் போதுமான அளவில் பொறுப்புக்கூறும் கடமையை நிறைவேற்றத்தவறியதாலும் நல்லிணக்கத்தைக் காணத்தவறியதாலும் முடிவுற்ற கிளர்ச்சிகளில் 60 சதவீதமானவை மீண்டும் ஆரம்பித்துள்ளன என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

அதனால் தான் நாம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு ஆகியவற்றுக்கு குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

இந்த இடத்தில் விடுதலைப்புலிகள் ஏன் தோற்றம் பெற்றார்கள் என்பதற்கான காரணத்தை நாம் மறந்து விடக்கூடாது. தமிழ் மக்கள் தங்களின் உரிமைகள் எல்லாம் பறிக்கபடுகின்றன என்ற விரக்தியில் இருந்த போது தான் ஏதாவது ஒருவிதமான
பயங்கரவாத போராட்டம் தான் சிறந்த தெரிவாக அதற்கு இருக்க முடியும் என்று அவர்கள் கருதினார்கள்.

அமெரிக்கா விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றே பிரகடனம் செய்துள்ளதுடன் தனது நாட்டில் அதனை தடைசெய்தும் உள்ளது. இன்னும் அத்தடை நடைமுறையில் உள்ளது.

இவ்வாறான கிளர்ச்சிகள் தோன்றுவதற்கு அடிப்படையான காரணங்களையும் இவை தோன்றுவதற்கான மனக்குறைகளையும் கண்டறிந்து தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் முதற் கடமையாகும்.

அதனால் தான் அமெரிக்கா தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை அரசாங்கம் நடத்தவேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தீர்வு காணுவதன் மூலமே அனைத்து இலங்கையர்களும் சமாதானம் மற்றும் ஒற்றுமையுடனும் வாழும் நிலையை உருவாக்க முடியும்’ என்றும் பிளேக் தெரிவித்தார்.


----------------------------------------------------------------------------------------- 
 
அதிகரித்து வரும் சர்வதேசத்தின் அழுத்தத்தை இலங்கையினால் சமாளிக்க முடியுமா  இலங்கைக்கு இறுகிவருகிறது பாசக்கயிறு.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஏனைய நாடுகளின் பாரிய உதவியுடன், பங்களிப்புடன் இலங்கை வென்றுள்ளது. ஆனால், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தி லிருந்து பல்வேறுபட்ட முறைகளில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் தினமும் அதிகரித்த வண்ணமாகவுள்ளன. இவற்றை இலங்கையினால் சமாளிக்க முடியுமா? சர்வதேச சட்டங்களை மீறிப் போர்க்குற்றம், இன அழிப்பு ஆகிய மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையால் எப்படி தலை நிமிர்ந்து நிற்கமுடிகிறது? ஆனால், இவ்விரு பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நாம் தொடர்ந்து சர்வதேசங்களினால் தண்டிக்கப்பட்டு வருகிறோம் என்று சில நாடுகள் கடந்த பல வருடங்களாக முணு முணுத்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் படி குறைந்தது 40ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும், ஏறக்குறைய 30ஆயிரம் பொதுமக்கள் முகாம்களையும் சென்றடைந்தனர். இதேவேளை, ஏறக்குறைய 15 ஆயிரம் போராளிகள் சரணடைந்தனர். ஆனால், இலங்கை அரசு சகல புள்ளி விபரங்களையும் மறைப்பது மட்டுமல்லாது தினமும் சரணடைந்த போராளிகள் முதல் பொதுமக்கள் வரை காணாமல் போகின்றனர். ஐ.நா.முதல் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, ஆசியா, ஆபிரிக்க நாடுகளில் பல இலங்கையின் இச்சர்வாதிகாரப் போக்குடனான தமிழின அழிப்பைக் கடுமையாகக் கண்டிக்கின்றன.

இதேவேளை, முக்கிய சர்வதேச நிறுவனங்களான சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைக் கண்காணிப்பு நிறுவனம் ஆகியவை உட்பட பல்வேறு மனிதாபிமான, மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையின் எதேச்சையான போக்கைக் கடுமையாக கண்டிக்கின்றன. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகையால், இவை விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் கடுமையாகவுள்ளனர். ஆனால், இலங்கை தமக்கு மிக நீண்ட காலமாக பழக்கப்பட்ட பொய், புரளி போன்ற திருகுதாளம் மூலம் அயல் நாடான இந்தியா உட்பட சகல எதிர்ப்புக்களையும் தற்பொழுது சமாளித்து வருகிறது. மா, புளிப்பது தோசைக்கு நல்லது என்பது போல இலங்கையின் மஹிந்த ராஜபக்­ஷ‌ அரசு கொப்பில் நின்று மரத்தைத் தறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.

பயங்கரவாதத்தை அழிக்க உதவிய இராணுவத்தைத் தாம் காட்டிக் கொடுக்க மாட்டோம் என வியாக்கியானம் பேசும் இலங்கை அரசு இவ் இராணுவ வெற்றிக்கு வித்திட்டு தலைமை வகித்த தளபதி சரத்பொன் சேகாவையே இரண்டரை வருடம் சிறையில் அடைத்துள்ளது. இப்படியான போக்கைக் கொண்ட அரசினர் உண்மையில் இராணுவத்தைக் காப்பாற்றுவார்கள் என்பது நடை முறையில் சாத்தியமானதா? தமக்கு சீனாவும், ரஷ்யாவும் என்றும் துணைக்கு வருவார்களென்ற எண்ணத்தில் இலங்கை மிகவும் கண்மூடித் தனமாக நடக்கிறது. சர்வதேச நீதிமன்றங்கள் ஒரு நாட்டையோ அல்லது நாட்டின் தலைவர்களையோ விசாரித்துத் தண்டனை வழங்குவதை வேறு எந்த வல்லரசுகளாலும் காப்பாற்ற முடியாது என்பதற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு.

 

அப்படியானால் இலங்கையின் போர்க் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்பொழுது சீனா, ரஷ்யா, கியூபாவால் என்ன செய்ய முடியும்? கடந்த வாரம் இடம்பெற்ற மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் மஹிந்த ராஜபக்­ஷ‌ அரசிற்கு சுருக்கு இறுகி வருவதை மறை முகமாகக் காட்டுகின்றன. முதலாவதாக சர்வதேச குற்ற நீதிமன்றத்துடன் பொதுநலவாய நாடுகளின் செயலகம் செய்து கொண்ட நல்லிணக்க உடன்படிக்கை, இரண்டாவதாக கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி அன்று இந்திய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் இலங்கை பற்றி பத்திரிகையாளருக்கு கூறிய கருத்து, மூன்றாவதாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் திருமதி கிலாரி கிளின்டனுடைய சென்னை பயணம்.

இந்தியாவில் மாநில அரசுகள் உண்டு. திருமதி கிளின்டன் சைவ சமயத்தைச் சார்ந்தவராக இருந்தால் தமிழ் நாட்டில் உள்ள பழம்பெரும் சைவக் கோயில்களின் வழிபாட்டிற்காக சென்னை சென்றதாக நாம் கூறிக்கொள்ளலாம். ஆனால், எண்ணெய் வளமோ, பொன் வளமோ அற்ற தமிழ் நாட்டிற்கு எதற்காக அமெரிக்கச் செயலர் சென்றார் என்பதைப் பகுத்தறிவு படைத்த இலங்கையின் அரசியல்வாதிகள் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும். சரியோ, பிழையோ இலங்கைப் போரை வெற்றி கொண்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது இறுகுகின்ற சர்வதேசத்தின் பாசக்கயிறை இலங்கையால் வெல்ல முடியுமா?
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.