குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 20 ம் திகதி புதன் கிழமை .

அவசரப் பொதுக்குழுவும்… சசிகலா திட்டமும்!

17.12.2016-அ.தி.மு.க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி கூடும் நிலையில் கட்சியின் பொது ச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க-வில் குரல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சசிகலா, ‘அக்காவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதா?’ என்று கண் கலங்கி நிற்கிறார்.

அ.தி.மு.க-வின் செயற்குழு 6 மாதத்துக்கு ஒரு முறையும், பொதுக்குழு ஆண்டுக்கு ஒரு முறையும் நடக்கும். 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அதன்பிறகு, ஜூன் மாதம் செயற்குழுக் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த ஆண்டுக்கான பொதுக்குழு டிசம்பர் 29-ம் தேதி சென்னை வானகரம்வாசிறிரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்க உள்ளது.

யெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்தப் பொதுக்குழு நடைபெறுவதால் இதை அவசரப் பொதுக்குழு என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்தப் பொதுக்குழுவில் கலந்துக் கொள்ள டிசம்பர் 9-ம் தேதி அழைப்புக் கடிதம் ரெடியாகி, டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விநியோகம் செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் இருக்கும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் நேரில் அழைப்பிதழைக் கொடுத்து அவர்களிடம் கையெழுத்து வாங்கி அதைத் தலைமையிடம் கொடுத்துள்ளார்கள்.

 

பொதுச்செயலாளர் தேர்தல், உட்கட்சித் தேர்தல் குறித்து, அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் கூறுகையில், “5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய உட்கட்சி தேர்தலில் முதல்கட்டமாக கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்வார்கள். அ.தி.மு.க பொதுச்செயலாளராக 29.8.14 அன்று ஜெயலலிதா போட்டி இன்றி தேர்வானார். இதற்கான தேர்தல் அறிவிப்பு ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியிடப்பட்டது.

வேட்பு மனுக்கள் 20-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை பெறப்பட்டது. ஜெயலலிதாவுக்காக மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனவே, ஒருமனதாக 7-வது முறையாக ஜெயலலிதா தேர்வானதாக தேர்தல் ஆணையராக அப்போது இருந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அறிவித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர், கழகத்தின் அனைத்து அடிப்படை பொது உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்’’ என்ற கழக சட்ட திட்ட விதி 22, பிரிவு 2-ன்படி, ஜெயலலிதா அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, கழகப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்’ என்று அறிவித்தார். அதன்பிறகுதான் கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் 14 கட்டங்களாக நடந்தது’’ என்று சொன்னார்கள்.

மேலும், இப்போது நடக்க உள்ள பொதுச்செயலாளர் தேர்வு குறித்தும் அவர்கள் குறிப்பிடுகையில் ‘‘இப்போது கட்சியின் அவசரப் பொதுக்குழு கூடுகிறது. அதில், செயற்குழுக் கூட்டமும் பொதுக்குழுக் கூட்டமும் நடக்கிறது. இந்த இரண்டு குழுக்களும் கட்சியின் உயர் அதிகாரம் படைத்தவை. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் நடக்கும் இந்த அவசரக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி இருக்கிறது.

எனவே, அனைத்துச் செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யலாம். அதன்பின்னர், பொதுக்குழுவிலும் அதற்கு ஒப்புதல் கொடுத்து புதிய பொதுச்செயலாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம். எந்தத் தடை இருந்தாலும் அதை உடைத்து கட்சியின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் யாரையும் பொதுச்செயலாளர் ஆக்க முடியும். கட்சித் தொண்டர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது’’ என்றார்கள்.

கட்சி நிர்வாகிகள் இப்படிச் சொல்லிக் கொண்டு இருக்கையில் சசிகலாவின் மனநிலையோ வேறுமாதிரியாக இருக்கிறது என்கிறார்கள் மன்னார்குடி வகையறாவுக்கு நெருக்கமானவர்கள். அதாவது, 2011-ம் ஆண்டு டிசம்பரில் யெயலலிதாவால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் போயஸ் கார்டனுக்குள் திரும்பி வந்தபோது சசிகலா ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், ‘அரசியலில் ஈடுபட மாட்டேன். கட்சியில் பெரிய பொறுப்புகளுக்கு வரும் எண்ணமும் இல்லை’ என்று கூறியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், ‘‘என்னைப் பொறுத்தவரை அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்கவேண்டும் என்றோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடையவேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்கவேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை. பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமும் இல்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன்’’ என்று கூறியிருந்தார்.

அதுதான் இப்போது சசிகலாவுக்கு சிக்கலாக உள்ளது. எனவேதான் பொதுக்குழுவுக்கு நாம் செல்ல வேண்டாம். தன்னைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்து அந்தத் தீர்மான நகலை நம்மிடம் அவர்களே வந்து கொடுக்கச் செய்து, அதன் பிறகு அதில் கையெழுத்திட்டுப் பதவி ஏற்றுக்கொள்ளலாம். என்று கருதுகிறார் என்கிறார்கள்.

பதவியும், பட்டமும் யாரையும் அசைத்து பார்த்துவிடும். இந்த இரண்டையுமே தொட்டுவிடும் துாரத்தில் வைத்துக்கொண்டு சசிகலா மட்டும் சும்மா இருப்பாரா?

-விகடனந்-

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.