குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

அண்ணா பிறந்த நாளில் மறுபரிசீலனை தேவை! மறைமலை அடிகளார்தமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாள் எனஅறிவித்தை

அண்ணா தந்தைபெரியாரின் பிறந்த நாளில் , தமிழியக் கொள்கை ஏற்று வாழ்வோம்
16.09.2011.தி.ஆ.2042-நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் தலை மாணாக்கர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா- வெளிச்சம் போட்டு விழாக் கொண்டாடுவதால் மட்டும் பயனில்லை. அண்ணா வாழுகிறார், மறையவில்லை என்பது அவரது படங்களிலோ, பதாகைகளிலோ அல்ல.

மாறாக, அவரது கொள்கைள், லட்சியங்கள் மூலம்தான் நிரந்தரப்படுத்த முடியும்.

அண்ணா சுட்டிக் காட்டிய ஆரிய மாயை உள்ளிட்ட கொள்கை லட்சியங்களை கிரகணமாகப் பற்றிக் கொள்ளச் செய்தால், அதை விடக் கொடுமை அண்ணாவுக்கு வேறில்லை.

1967இல் அண்ணாவின் ஆட்சியில் சுயமரியாதைத் திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், இந்திக்கு இடமில்லாத இருமொழிக் கொள்கை - இவற்றின் அடிப்படைத்  தத்துவம் என்ன?

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழர்களை - திராவிடர்களை - அடிமைப்படுத்தப்பட்ட மக்களை மீட்டெடுப்பது என்பதுதானே!

தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., பேராசிரியர் கா.சு. பிள்ளை, நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் முதல் புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன்,டாக்டர் மு.வ. என்றழைக்கப்பட்ட மு. வரதராசனார் வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இங்கு பச்சையப்பன் கல்லூரியில் கூடி மட்டுமல்ல;

அதற்குப் பிறகு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும்கூடி,  தமிழ்ப் புத்தாண்டு என்பது தை முதல் நாள் முதலே என்று அறிவித்ததை ஏற்று,  திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம் போலவே சட்டத்தின் மூலம் தமிழ்ப் புத்தாண்டு தை முதல்  நாள் என முதல் சட்டம் 2008இல் கொணர்ந்து தி.மு.க. ஆட்சியில் அதன் முதல்வர் கலைஞர் சட்டம் இயற்றினார். அண்ணா பெயரில் கட்சி வைத்து, அண்ணாவை வழி காட்டியாக்கிய எம்.ஜி.ஆர். அரசு என்று கூறும் இன்றைய அரசு அதை ரத்து செய்தது ஒரு பச்சை பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு மட்டுமல்ல; பகுத்தறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். அண்ணா படம் அல்ல; பாடமாக வேண்டும்!

60 ஆண்டுகளில் ஒரு ஆண்டுகூட தமிழ்ப் பெயர் இல்லை. 60 ஆண்டு பிறந்த கதையோ ஆபாசம்! அருவருப்பு!!

எனவே அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடு முதல்வருக்கு நமது வேண்டுகோள் - அருள்கூர்ந்து இதை மறுபரிசீலனை செய்து தமிழ்ப்புத்தாண்டு சட்டத்தை மீண்டும் உயிரூட்டுவதுதான் அண்ணாவுக்குச் செய்யும் உண்மை மரியாதையாகும். வாழ்க அண்ணா!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.