குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, தை(சுறவம்) 25 ம் திகதி சனிக் கிழமை .

தமிழக கட்சிகளின் அரசியல் பாடத்தை கற்றுத்தந்த சன் தொலைக்காட்சி கலாநிதி மாறன் வழக்கறிஞர்.சு.கலைச்செல்வ

19.12.2016-இடையில் சற்று இடைவெளி. வாருங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். 84ஆம் ஆண்டு இந்தியா சென்று புகழ்பூத்த சென்னை லொயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பிற்காக சேர்ந்திருந்த காலம். ஈழ விடுதலைக்கான தமிழக பரப்புரைகள் தமிழக கட்சிகளைக் கடந்து இல்லை என்ற நிலையில் அதை முன்னெடுப்பதற்கான மாணவர் செயற்பாடுகளை தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் வழிப்படுத்தலில் ஒருங்கமைத்துக் கொண்டிருந்த காலம். இது குறித்து விரிவாக பின்னர் ஒரு பதிவில் எடுத்து வருகின்றேன்.

லொயோலா கல்லூரியின் மாணவர் தலைவர் தேர்தல் வந்தது. லொயோலா கல்லூரியை அடிமைகளின் இருப்பிடம் என நகைச்சுவையாக வெளியில் அழைப்பார்கள். காரணம் கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் அமைந்த கல்லூரியில் இறுக்கமாக கட்டுப்பாடுகள் பல உண்டு. 600 மேற்பட்ட அறைகளைக் கொண்ட விடுதியில் இரவு 9 மணிக்கு மணி அடிக்கும். அதற்கு பின்னர் ஊரடங்கு தான். அறைகளுக்குள் சென்று படிக்கவேண்டும் அல்லது படுக்க வேண்டும். நண்பர்களுடன் கூட அறைக்குள் அளவளாவ முடியாது. எங்கள் பெண்கள் சகோதரக் கல்லூரியான ஸ்ரெல்லா மாரிசில் கூட ஊரடங்கு 10 மணிக்கு மேல் தான்.

புகழ்பூத்த கல்லூரியாதலால் பிரபலங்கள் பலரின் பிள்ளைகளும் இங்கு தான் படிப்பார்கள். நான் இணைந்த போது எனக்கு முன்னர் நாகேசின் மகன் ஆனந்பாபு கற்றுக் கொண்டிருந்தார். அதேபோன்று கருணாநிதியின் பேரனும் மாறனின் மகனும் தற்போதைய சன் நெட்வேர்க்கின் அதிபதி கலாநிதி மாறனும் இருந்தார். மாணவர் தேர்தலில் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் போட்டியிட ஒரு மறைமுக தடை உண்டு. ஏனென்றால் கல்லூரியை கட்சி அரசியலுக்குள் அழைத்துச் சென்று விடுவார்கள் என்ற பயம் காரணமாக.

இந்நிலையில் கலாநிதி மாறன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். மாணவர் செயற்பாட்டை விரிவாக்க முனைந்து கொண்டிருந்த எமக்கு அது வாய்ப்பு போல் பட்டதால் நாமும் முழு ஆதரவை வழங்கினோம். அவரும் தான் வெற்றி பெற்றால் ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுவதாக வேறு உறுதிமொழி தந்தார். ஆனாலும் கல்லூரி நிர்வாகம் அதனை அனுமதிக்க வேண்டுமே. ஒருவாறு போராடி பல வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் கலாநிதி மாறன் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார்.

வெற்றயை தொடர்ந்து எமக்கு எதாவது செய்ய நாமும் தூண்ட 85இன் ஆரம்ப பகுதியில் ஈழத்தமிழர் விவகாரத்தில் அனைத்துக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு ஒழுங்கு செய்தார். பெரும்பாலான கல்லூரிகளில் தி.மு.க மாணவர் அமைப்புக்கள் இருந்தமையால் அவர்கள் துணைகொண்டு அது முன்னெடுக்கப்பட்டது. அண்ணா சாலையில் இருந்த தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்து கோட்டையை நோக்கி மாணவர் பேரணி நகர ஆரம்பித்தது. பல்லாயிரத்தில் மாணவர்கள் எமக்காக முழங்கியவாறு முன்னேற எமக்கோ ஈழம் வென்றுவிட்டது போன்ற உணர்வு.

எம்மை சுற்றி காவலுக்கும் பல்லாயிரத்தில் கா.து வேறு. கோசங்களுடன் நகர்ந்த நாம் அண்ணா மேம்பாலத்தை அடைந்தோம். வீதிகளை முழுமையாக நிறைந்து போக்குவரத்தை நிறுத்தி நகர்ந்து கொண்டிருந்த நாம் அண்ணா மேம்பாலத்தால் ஏறி ஆயிரம்விளக்கு பகுதியை சென்றடைந்தோம். அந்த பகுதியின் ஒரு மூலையில் அமெரிக்க துணைத்தூதுவராலமும் அதை அண்டி குட்செப்பட் கொண்மண்டும் உண்டு. அபப்குதி சுவர்கள் பாதுகாப்பிற்காக மிக உயரமானவை. எமது பேரணின் முற்பகுதி ஆயிரம்விளக்கு சந்தியை சென்றடைந்தவேளை பின்பகுதி அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழ் இறங்கியிருந்தது.

திடீரென் வெடிச்சத்தம் கேட்டது முற்பகுதியில் இருந்து மாணவர்கள் கலைத்தோட ஆரம்பித்தார்கள். பேரணிய்ன் நடுவில் வந்துகொண்டிருந்த நான் யாரோ சுடுகிறார்களா என்று பார்க்க முன்னேறியபோது தான் தெரிந்தது. எம்மை சுற்றி வளைத்து வந்த கா.து சரியான இடத்தை தெரிவு செய்து தாக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது. தங்கள் கையில் இருந்த லத்தியால் மாணவர்களை பின்னியெடுத்துக் கொண்டிருந்தனர். நான் முன்னர் குறிப்பிட்டது போல் ஒரு பகுதி அதியுயர் மதில்களைக் கொண்ட பகுதி ஆயிரம்விளக்கு சந்தியிலும் அண்ணாமேம்பாலத்தின் பின்புறமும் அதிக அளவில் கா.து நின்றனர். ஆகவே தப்பிச் செல்வதற்கு ஒரு பகுதி தான் இருந்தது.

அந்த பகுதியில் சில சந்துக்கள் இருந்தன. அதன் வாயிலிலும் கும்பலாக கா.து நின்றனர். இவ்வாறு ஒரு சந்தில் நான் ஓட முனைந்தபோது அதில் மாணவாகள் அடைபட்டுக்கிடந்தனர். பின்னால் திரும்பிப் பார்த்தால் கா.து  லத்தியுடன் நின்றனர். அவர்கள் அடிக்கும் அடி தலையில் பட்டு விபரீதமாகிவிடக்கூடாது என்பற்காக அடைபட்டுக் கொண்டிருந்த மாணவர்களுள் என் தலையை புதைத்துக் கொண்டேன். என் முதுகு பின்புறம் தள்ளிக் கொண்டிருந்தது. டமார் டமார் என முதுகில் அடிகள் விழஆரம்பித்தன. வலி தாங்க முடியவில்லை. அப்படியே இருந்தால் அடித்தே கொன்று விடுவார்கள் போல் இருந்தது.

பின்னர் தான் புரிந்தது அந்த சந்தில் ஓடும் போது அந்த வழியால் வந்த ஓட்டோ ஒன்றை தள்ளிக்கொண்டு ஓட அது பிரண்டுவிட்டது. அதுவே வழியை அடைத்துக்கொண்டு நிற்கிறது. இதில் அடியில் அகப்பட்டுக் கொண்ட மாணவன் ஒருவன் எமது தமிழில் ஐயோ ஐPசஸ் காப்பாத்து என கத்திக் கொண்டிருந்தான். மூன்று பலமான அடிகள் விழுந்திருக்கும் தலையை வெளியே எடுத்து அடுத்த சந்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். கிளித்தட்டு மாதிரி; ஒவ்வொரு கா.து உச்சி அடுத்த சந்தை நோக்கி முன்னேறினேன். அடுத்த சந்தின் வாயிலில் கும்பலாக ஒரு தொகுதி பொலிசார் பின்னியெடுப்பதற்கு தயாராக நின்றனர்.

இவ்வளவு கலேபரத்தின் மத்தியிலும் காலில் இருந்த ஊரில் வாங்கிய அந்த பாட்டா செருப்பின் மீது அதீத கவனம். வீதிகள் எங்கும் மாணவர்களின் காலணிகளால் நிறைந்து கிடக்க எனது பாட்டா செருப்பு இன்னும் என் காலில். அடுத்த சந்தில் இருந்த கா.து ர் வா வா என காத்துக் கொண்டிருந்தனர். அவர்களினூடாக தப்பிச்செல்ல முனைந்த மாணவர்கள் தர்ம அடி வாங்கிக்கொண்டு ஓடினர். சற்று நிதானித்துப் பார்த்தேன். அதில் ஒரு சிறு மதில் இருந்தது. பொலிசாரின் கவனத்தை சற்று திருப்பிவிட்டு மதில் பாய்தால் தப்பலாம் என்பது புரிந்தது.

வேகமாக என் காலில் இருந்த அந்த பாரிய பாட்டா செருப்பை கா.து முகத்தை நோக்கி என் காலால் வீசினேன். அதை சற்றும் எதிர்பாராத அவர்கள் நிலைகுலைந்து சற்றுப்பின்வாங்க அதுவரை பாதுகாத்த பாட்டாவை தியாகம் செய்து மதில் பாய்தேன். இப்போது அவர்களை கடந்துவிட்டேன். சற்று சுதாகரித்த அவர்கள் என்னை விரட்ட ஆரம்பித்தார்கள். கையில் மாட்டினேன் துலைந்தேன் என்பதால் உசைன் போல்டைவிட் வேகமாக ஓடினேன். மூவர் விரட்டியபடியே வந்தார்கள். நான் ஓடிக்கொண்டிருந்தபோது இரு மாணவர்கள் நின்று நான் ஓடிவருதை பார்த்துக் கொணட்டிருந்தார்கள். நான் ஓடுங்கள் வருறான்கள் என்றுபடியே ஓடினேன். அவர்கள் அசையவில்லை. அவர்களை கடந்து ஓடியபின் நின்று திரும்பிப்பார்த்தேன்.

விரட்டிவந்த பொலிசார் அருகில் வரும்வரை பார்த்துக்கொண்டிருந்த அந்த மாணவர்கள் தீடீரென தம்கைகளில் மறைத்து வைத்திருந்த கற்களால் அவர்களை தாக்கினர். இரண்டு கா.து தலைகளை அந்த கற்கள் பதம்பார்க்க அவர்கள் தலைகளில் இருந்து இரத்தம் குபீரிட்டுப் பாய்ந்தது.

இப்போது அவர்கள் திரும்பி ஓட ஆரம்பித்தனர். இவர்கள் போய் ஏனையவர்களும் திரும்பி வந்தால்..... நான் மீண்டும் ஓட ஆரம்பித்தேன். அந்த மாணவர்களும் பின்தொடர்ந்து வந்தனர். தாங்கள் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் என்றனர். நான் லொயோலா என்றேன். என் தமிழில் நான் ஒரு ஈழத்தமிழன் என்பதையும் புரிந்து கொண்டார்கள். இங்கேயும் உங்களை அடித்துவிட்டார்கள் என்று கரிசனைப்பட்டனர். அப்போது எனது வலது பக்கம் விரைக்க ஆரம்பித்தது. வலிலால் நான் துடித்துக் கொண்டிருந்தேன். என் நிலைமையைக் கண்ட அவர்கள் அவ்வழியால் வந்த ஓட்டோ ஒன்றை மறித்து அதில் என்னை ஏற்றி லொயோலா கொண்டு சென்றனர்.

அங்கு சென்ற போது உறவுகள் உடன் என் சேட்டைக்கழட்டி என்ன என்று பார்த்தனர். மூன்று தளம்புகள் பெரிதாக இருந்தது. நல்லகாலம் தோலில் எங்கும் வெடிப்புகள் இருக்கவில்லை. அப்போது இன்னொரு ஈழ மாணவனை கொண்டு வந்து இறக்கினார்கள். அவனே வலியில் அலரிக் கொண்டிருந்தான். மாணவர்கள் கலைந்து ஓடும் போது இவன் நினைத்திருக்கிறான் யாரோ சுடுகிறார்கள் என்று. நான் முன்னர் குறிப்பிட்டது போல் அந்த வெடிச்சத்தம் முன்னர் போன மாணவர்கள் பொலிசாரை நோக்கி கொழுத்திப் போட்ட பட்டாசு. துப்பாக்கிச்சூடு படக்கூடாது என்றால் தரையில் படுக்கவேண்டும் என்பதை தெரிச்த நம்மாள் வீதியில் குப்புற படுத்துவிட்டார். சுற்றி நின்று நான்கு கா.து பாம்பை அடித்தது போல் நம்மாளை பின்னியெடுத்திருக்கின்றார்கள்.

இந்தளவிற்கும் தசைவேறு குறை;ந்த ஒல்லான உருவமைப்புக் கொண்ட அவன் சேட்டை கழட்டினோம். தளம்புகள் எத்தனை என்று எண்ணமுடியவில்லை. அவன் தோல்வேறு அடிகளால் வெடித்து இரத்தம் பனியனில் ஊறி ஒட்டியிருந்தது. வேறு வழியில்லை என டாக்டரிடம் அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து முறிவில்லை என்பi உறுதிப்டுத்தி பின்னர் டெற்றோல் போட்டு பனியனைக் கழற்ற அவர் அலறினான். அவனுக்கு கட்டுப்போட்டு மீண்டும் விடுதிக்கு வந்தபோது இன்னுமொரு ஈழமாணவன் கால் முறிந்து கால் கட்டுப்போட்டு அங்கிருந்தான். அவன் கதையை கேட்டபோது தான் புரிந்தது. ஐயோ ஐPசஸ் காப்பாற்று என் கத்திக் கொண்டிருந்தவன் அவன் தான் என்பது. ஆகமொத்தத்தில் ஈழப்பிரச்சனைக்காக போராட வெளிக்கிட்டு நாமே பாதிக்கப்பட்டு வந்திருந்தோம். எம் மாணவர்களில் பலர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வந்திருந்தனர்.

அவர்களிடம் எப்படி என்று கேட்டேன். அவர்கள் அருகில் இருந்த டி.ஐ.ஐp ஒருவரின் மகனைப் பாத்துச் சிரித்தனர். நான் அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அப்போது தான் அவன் சொன்னான் இது ஈழப்பிரச்சனையை கடந்து தி.மு.க மாணவர் அணி தன் கட்சி சார்ந்த விடயமாகவே முன்னெடுத்தது. அதனால் அவர்கள் எல்லை மீறினால் போட்டு தாக்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. நிலைமை மீறுகிறது என்று புரிந்தவுடன் நான் இவர்களை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த கடைக்குள் புகுந்துவிட்டேன். உன்னைத் தேடினேன் நீ கண்ணில் படவில்லை என்றான். அப்போது முன்னணியில் கலாநிதி மாறனுடன் சென்று கொண்டிருந்த எங்கள் ஈழ உறவு ஒன்றைப் பார்த்து உனக்கும் எதுவும் நடைபெறவில்லை எவ்வாறு என்றேன். அவன் சொன்னான் எங்களை பொலீஸ் வான் ஒன்றில் ஏற்றி சற்று தூரத்தில் இறக்கிவிட்டனர் என்றான்.

மாணவர்கள் தாக்கப்பட்டதால் அதை எதிர்கொள்ளும் வகையில் இரண்டு வாரங்கள் கல்லூரிகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களும் தங்கள் ஊர்களுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். மாலையில் பத்திரிகைகள் என்ன சொல்கின்றன எனப் பார்போம் என மாலை முரசை வாங்கிப்பார்த்தால் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. கருணாநிதியின் பேரன் அடித்து நொருக்கப்பட்டான் என கலாநிதி மாறனின் இடது கையில் முழுமையாக கட்டுப்போட்டவாறு இருக்கும் படம் இருந்தது. நான் அவனுடன் சென்ற உறவை மீண்டும் பார்த்தேன். அவன் சிரித்தான் எல்லாம் அரசியல் என்றான். நாம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அன்று மாலை எங்களைப் பார்க்க கலாநிதியும் வந்தான். அதே கைக்கட்டுகளுடன் வந்தான்.

அவனைப் பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது. எங்கள் உயிர் பிரச்சனையில் உனக்கு அரசியலா வெட்கமாயில்லையா என்று கேட்கனும் போல் இருந்தது. இல்லை இது தான் இங்கு அரசியல். இது உனக்கு பாடமாக இருக்கட்டும். வருங்காலத்தில் இதையும் கடந்து பயணிக்கும் பாதையைத் தேடு. உருவாக்கு என என் உள்மனது சொல்லியது. அந்த வரலாற்றுப்பாடம் தமிழகத்தில் பலவற்றை பின்னாளில் சாதிப்பதற்கு வழிகோலியது என்றால் மிகையில்லை. மூன்று நாட்களில் தன் வேசத்தை கலைத்துவிட்டு எவ்வித குற்றவுணர்வுமின்றி மீண்டும் என்முன்னாள் நின்றான் கலாநிதி. அத்ன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் பேரணிகள் ஈழவிவகாரத்தை மையப்படுத்தி நடந்தேறின. பொலிசாரும் பயபக்கிதியுடன் நடந்து கொண்டனர். அரசியல் கட்சிச்சாயமும் இல்லாதிருந்தது. இன்று இந்திய பெரும் பணக்காரர்களில் கலாநிதி மாறனும் ஒருவர். 2008 தமிழகம் சென்றபோது உறவொன்று கலாநிதியை சென்று சந்திக்கப்போகிறாயா ஒழுங்கு செய்யவா என்று கேட்டான். வேண்டாம் என்று கூறிவிட்டேன். சில நாட்களுக்கு முன்னர் எனது மாதாந்த பரிசோதனைகளுக்காக வைத்தியசாலை சென்றபோது எனது வலது கையில் இரத்த அழுத்தத்தை பார்த்போது எதுவும் காட்டவில்லை. இயந்திரங்களை மாற்றிப் பார்த்தார்கள். அப்போதும் இல்லை.. ஏன் என்றார்கள் நான் ஏலியன் என்றேன். சிரித்தார்கள். வலது பக்கத்தில் சிக்கல்கள் வரும்போது எனக்கு அன்று வாங்கிய அடியும் அதனால் ஏற்ப்ட்ட வலதுபக்க விறைப்பும் இன்றும் நிலலாடுகின்றது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.