குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

முன்னேசுவர மிருகபலி தடை! மறைந்திருக்கும் சதி! பௌத்தமாமன்றமும் இந்துமாமன்றமும்வேறல்ல சைவநெறிசபைதேவை.

 15.09. 2011 .த.ஆ. சுவிசிலிருந்து திருப்பிஅனுப்பப்பட்ட கிருமினலும் சில்வாவும் உயிர்பலியில் கரிசனை சிரிப்பதா அழுவதா? முன்னேசுவர மிருகபலி தடை! மறைந்திருக்கும் சதி! எதுவுமறியாத தமிழர் தலைமைகள்!!! முன்னேசுவரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருகபலி பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்துகொண்டிருக்க, திடிரென "அகிம்சை"க்கு இலக்கணமாக விளங்கும் இலங்கையின் பௌத்த துறவிகள் குறித்த மக்களின் சமயநம்பிக்கைக்கு தடா..பொடா சட்டம் உருவாக்க துடிப்பது ஏன்? எந்தத்தமிழ்த் தலைவர்களும் இதுபற்றி சிந்தித்தார்களில்லை! இதனால்த்தான் என்னவோ தமிழரை படித்த முட்டாள்கள் என்று சொல்வர்!!!!
 
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள புத்தளம்-சிலாபம் 'முன்னொரு" காலத்தில் தமிழரின் மண்ணாக விளங்கிய இடம். அந்நியர்கள் படையெடுத்து வந்து ஆட்சிசெய்த காலத்தில் இங்கிருந்த மக்கள் கிருஷ்தவமதத்தை பெருப்பாலும் தழுவிக்கொண்டனர். கிருஷ்தவத் தமிழராக இருந்தவர்களை கிருஷ்தவ சிங்களவர்களாக அரசாங்கம் மெதுமெதுவாக மாற்றியது. அதற்கு சிங்களக் கிருஷ்தவமிசன்கள் போதுமனளவுக்கு ஆதரவை வழங்கியதை நாம் உய்த்துணரலாம்.இப்படி சிங்களக் கிருஷ்தவர்களாக மாற்றம் பெற்றவர்களை மெதுவாக பௌத்தசிங்கள தேசியத்தைக் காட்டி, பௌத்தர்களாக மாற்றுவதிலும் அரசு வெற்றி கண்டது.
 
இதற்கு தமிழ்ப் பாடசாலைகள் இல்லாத குறையும் தமிழ் கிருஷ்தவ மிசன்களின் அக்கறையின்மையும் பெருங்காரணமாக இருந்தது.  இங்கு நடந்த இனமாற்றம் பற்றி எந்தவிதமான அக்கறையையையும் யாழ்ப்பாணத்து படித்த மேதாவித்தலைவர்கள் அன்றைய காலகட்டங்களில் வெளிக்காட்டியிருக்கவில்லை!அதற்கு படித்த மேல்தட்டு வர்க்க உணர்வே காரணமாக இருந்தது என்பது வெள்ளிடைமலை!
 
யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வீதி பள்ளிக்கூடங்களைப் பெருக்கிய நம்தலைவர்கள், புத்தளத்தில் தமிழ்ப் பாடசாலைகளின் அவசியத்தை உணர முற்படவில்லை! அது அவர்களுக்கு தேவையற்ற ஒன்றாகவே இருந்துள்ளது! மிசனரிகளால் நடந்தப்பட்ட பள்ளிகள் தமிழ்மொழிக் கல்வியை வழங்குவதில் இருந்து மெதுவாக விலகி சிங்களமொழி மூலக்கல்வியை வழங்க ஆரம்பித்தன! சிங்கள பௌத்த பாடசாலைகளும் பெருகின! எனவே, கல்வியை தமது சந்ததியினருக்கு வழங்க விரும்பி அவர்களின் பாடசாலைகளில் தமது பிள்ளைகளை பெற்றோர்கள் இணைத்துவிடவே சிங்களமொழியை எழுத்துமொழியாக கொண்ட தமிழ்ச்சமூகம் அங்கு உருவாகியது. இந்த மெதுவான மாற்றத்தை அன்றைய தலைவர்கள் நாடிபார்த்து உணரவில்லை! இன்று விஜயரட்ணம் இந்துக் கல்லூரி மற்றும் ஒருசில கிருஷ்தவ பாடசாலைகள் தவிர ஏனையவை சிங்களமொழி மூலக்கல்வியை வழங்குவனவாகவே உள்ளன! பெருப்பாலான தமிழ்மொழி மூலப்பாடசாலைகளும் வளப்பற்றாக்குறையில் இருந்தமையால் மாணவர் சேர்க்கை மந்தமாக இருக்கவே இழுத்து மூடப்பட்டுவிட்டன!
 
ஈற்றில் இன்று புத்தளம்-சிலாபம் சுவாமிப்பிள்ளை ஜோசப் பண்டாரசிங்க என்று சிங்கள இனமாக மாறிவிட்ட தமிழர் மண்ணாக உள்ளது.
ஆயினும் தமிழர் மண்ணே இதுவென்பதற்கு அடையாளமாக சுற்றிவர சிங்களக்கிராமங்களால் சூழப்பட்ட உடப்பு என்ற கிராமமும் உடப்பு திரெளபதி அம்மன் ஆலயமும் முன்னேசுவர சிவன் ஆலயமும் அதனைச் சூழவுள்ள பத்திரகாளி அம்மன் ஆலயம் போன்றனவுமே சான்றாக உள்ளன! இவைதான் புத்தளத்தின் தமிழரின் இருப்புக்கு இன்றும் ஆலமர வேர் போன்று இருப்பன!
 
உடப்பு தீமிதிப்பு விழாவும் முன்னேசுவர பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடக்கு மிருகபலி  சடங்கும் மக்களோடு ஒன்றிய நிகழ்வுகள்!ஆலய வழிபாட்டு நடைமுறைகளில் மக்களோடு ஒன்றியவற்றை மக்களிடம் இருந்து பிரித்துவிட்டால் மக்கள் ஆலயவழிபாட்டை கைவிட்டுவிடுவர் என்பர் ஊரறித்த விடயம்! உலக வரலாறு சொல்லும் தத்துவம்! எனவே ஆலய வழிபாட்டை எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் கைவிட்டுவிட்டால் அவர்களை சிங்களக் கிருஷ்வர்களாகவோ அன்றி சிங்கள பௌத்தர்களாகவே ஏனையவர்களை மாற்றியதுபோல் மாற்றிவிடலாம் என்று ஒருசிலர் போட்ட கணக்கு இப்போது மெதுவாக அரங்கேறுகின்றது! இந்த கணக்கை நம்மவரில் யாரும் உணர முற்படவில்லை!
 
அகில இலங்கை இந்து மாமன்றம் விழுந்தடித்து பௌத்தர்களின் கோரிக்கை 'சரி' என்று குடைபிடித்து அறிக்கைவிட்டிருக்கின்றது!!!! இந்துமதம் என்றால் பௌத்தமும் அடக்கம் என்பது இந்திய சட்ட விரிவுரை! அகில இலங்கை இந்துமாமன்றம் சைவ சமயத்துக்கு மாமன்றமாக இல்லாமல் பௌத்தமதத்துக்கு மாமன்றம் ஆனது எப்போது என்றுதான் தெரியவில்லை? அல்லது முன்னைய யாழ்ப்பாணத்து தமிழ்த்தலைவர்கள் விட்டபிழையை மாமன்ற சட்டத்தரணிகள் விடுகின்றனரோ?
 
"மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇத் தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து"
என்றும்
 
"சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து "
என்றும்
 
சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து வைத்து,ஆட்டுக்கிடாவை அறுத்து; மிருகபலிவாயிலாக பழமுதிர்ச்சோலையில் முருகக்கடவுள் வழிபடப்பட்டதை கூறுகின்றது திருமுருகாற்றுப்படை.
 
படித்த மேல்த்தட்டு வர்க்கப் பண்பாடு வேறு! உழைக்கும் அடிமட்ட மக்களின் பண்பாட்டுத்தளம் வேறு! சிதம்பரம் கோயிலில் பூசைசெய்தும் அந்தணருக்கும் சைவசித்தாந்தம் படிக்கும் பேறுபெற்ற பண்டிதர்களுக்கும் கோயிலில் மிருகத்தை பலியிடுவது தவறகாகத்தான் தெரியும்!
 
ஆனால்; சிவபெருமானுக்கு கண்ணப்பர் செய்த மிருகபலி...அவர் படைத்த இறைஞ்சி....அவர் அபிடேகம் செய்ய பயன்படுத்திய எச்சில் அனைத்தும் உகந்ததாகவே இருந்தது!!!! ஏனேனில் கண்ணப்பரின் சமூகத்தளம் வேறு! அவருடைய சமூகத்தளத்தில் இருந்து பார்த்தால்த்தான் இந்த உண்மை உரைக்கும்! அப்படி அவருடைய சமூகத்தளத்தில் நின்று பார்த்தவர்தான் சேக்கிழார்!
 
உயர்ந்த பொருளோடு உவமை சொல்ல வேண்டும் என்பது இலக்கண விதி! ஆனால் சேக்கிழார் "வங்கினைப் பற்றிப் போகா வல்லுடும் பென்ன நீங்கா.."  என்று தமிழ் இலக்கணத்தை விதியை மீறி விலங்கினங்களில் கீழான உடுப்பை ஒப்புவமையாக கையாளுகின்றார்.
 
அதாவது உடுப்பைப்போல் கண்ணப்பர் குடும்பித்தேவரை(சிவலிங்கத்தை) பிடித்துக் கொண்டிருந்தார் என்று நாணன் என்னும் வேடன் காடன் என்னும் வேடனுக்கு சொல்வதாக சேக்கிழார் காட்டும்போதே உந்த உடும்பு என்கின்ற பதத்தை பயன்படுத்தினார். அதாவது வேடுவர்களாகிய அவர்கள் பேசுகின்றபோது அவர்கள் உடும்புபோல்  என்று சொல்வார்களே ஒழிய, தமிழ் இலக்கணவிதி உணர்ந்து தாழ்ந்த மிருகம் என்று சிந்தித்து இருந்திருப்பர் என்றால் அது யதார்த்தம் ஆகாமல் போய்விடும்! எனவே சேக்கிழார் தமிழ் இலக்கணவிதியை மீறி அவர்கள் பேச்சை பதிவுசெய்தபோது அவர்களின் சமூகத்தளத்தில் இருந்தே தனது கற்பனை ஆற்றலை இலக்கியம் ஆக்கினார்! தமிழ்ப்புலவர்கள் சேக்கிழாரின் புலமையை கொண்டாடினர்! மன்னன் யானைமீது ஏற்றிவித்து ஊர்வலமாய் அழைத்துச்சென்று கௌரவித்தான்!
 
ஆனால் இன்றைய இந்து மாமன்றத்தின் சட்டத்தரணிகளான பெரியவர்களுக்கு சேக்கிழாரும் தெரிந்தில்லை! கண்ணப்பரையும் அறிந்தில்லை! இலங்கை பெரும்பான்மை சமூகத்தின் கணக்கும் புரித்தில்லை! இவர்கள் சட்டம் படித்து என்ன பிரயோசனம்?  யாழ்ப்பாணத்தில் மாமன்ற கட்டிடம் கட்டுவதால் சமயம் வளரப்போவதில்லை! புத்தளத்தில் கட்டினால் சமயத்தோடு இனமும் வளர வாய்ப்பிருந்திருக்கும்!!!! படித்த மேல்த்தட்டு வர்க்க சிந்தனையில் இருந்து விடுபட்டால்த்தான் உண்மையான சிவதொண்டர்கள் ஆகமுடியும் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வரோ!!!!
 
இந்துமாமன்ற பெரியவர்களும் ஆலயத்தில் மிருகபலி தவறு என்று மெத்தப்படித்த மேதாவித்தனம் பேசுவோரும் சிவராத்திரி பிரதோசம் தவிர்ந்த ஏனைய நாட்களில் மாமிச உணவு சாப்பிடும்போது "மிருகபலி" தெரியதில்லை! ஏனெனில் அன்று மாமிசத்துக்கென்று தனியான பாத்திரம் வைத்து சமைப்பார்கள். சாப்பிட்டதும் கோயிலுக்கு போகாது தவிர்ப்பார்கள்! வீட்டில் உள்ள சுவாமி அறைக்கு திரைச்சீலை போட்டுவிடுவார்கள்!
 
ஏனெனில் இவர்களிடம் சுவாமி அறையென்று தனியாக அறைகட்டி சுவாமியை வழிபட பணம் உண்டு! மாமிசம் சமைக்க என்றும் மாமிசம் சாப்பிட என்றும் தனியான பாத்திரம் வாங்கி வைத்திருக்க பணவசதி உண்டு!!!
 
மிருகபலிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் முதலில் மாமிச உணவை கைவிடவேண்டும். இரண்டாவது உலகம் முழுவதும் உணவுக்காக வெட்டப்படுகின்ற ஆடுகள்,மாடுகள்,கோழிகள்,பன்றிகள் யாவற்றையும் ஐ.நா தடைசெய்ய போராட வேண்டும்! அதற்கு "சாப்பாட்டுக்கு வெட்டுவதும் கோயிலில் வெட்டுவதும் ஒன்றா?" என்கின்றனர்! கள்ளத்தனமாக கடவுள் படங்களுக்கு திரைச்சீலை போட்டுவிட்டு வெட்டி, மாமிச சமயலறையில் சமைத்து சாப்பிட்டுவிட்டு எங்கே கோயிலுக்கு போனால் கடவுளுக்கு தெரிந்துவிடுமோ என்று கோயிலுக்கு போகாமல் ஒழிந்து கொள்ளும் கயவர்களிலும், கடவுளுக்கு முன்னாலேயே தாம் சாப்பிடப்போகும் உணவை நேர்த்தியாக கடவுளுக்கே அர்ப்பணித்து வெட்டி விருந்துண்ணும் மிருகபலி வழிபாட்டுக்காரர் ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களே!!!!
 
ஆனால் ஏழை மீனவனுக்கு? ஒரே அறையில்த்தான் சுவாமி படமும் படுக்கை விரிப்பும் சமையல் இடமும் இருக்கும்!!!! இப்போது சொல்லுங்கள் அங்கு மீன்காச்சும்போது அந்த ஏழைக்குடிசை வீட்டைவிட்டு சிவபெருமான் பறந்துபோய்விடுவாரா என்ன? படித்த மேல்த்தட்டு வர்க்கம் ஏழை மீனவன் எப்படி சுவாமிப்படத்தை வைத்துக்கொண்டு மீன் சமைக்கலாம் என்று சிந்தித்ததன் விளைவே மீனவர்களில் பெரும்பான்மையினர் சைவசமயத்தை ஒழுகும்பேறை இழக்கக் காரணம்!
 
கண்ணப்பருக்கு சைவாகமும் சித்தாந்தமும் போதித்திருந்தால் அவர் பூவும் பாலும் கொண்டே இறைவனை வழிபட்டிருந்திருப்பார். எனவே கண்ணப்பரின் வழிபாட்டில் குற்றமில்லை! அவருக்கு(வேடுவருக்கு) சைவாகம் படிக்கும் சூழலை ஏற்படுத்தியிராத சமூக மேல்த்தட்டு வர்க்கத்தின் குற்றமே அவரது பூசையில் காணப்பட்டது!!!!
உழைக்கும் கீழ்த்தட்டு வர்க்க மக்களின் மிருகபலி சடங்கிலும் !!!! அவர்களுக்கு உரிய கல்வியை வழங்காக மேல்த்தட்டு வர்க்கமே மிருகபலியின் பாவத்தை சுமக்க வேண்டியவர்கள்!
 
வெட்டப்படும் மிருங்கள் ஈற்றில் உணவாகின்றன!  இவர்கள் ஆலயத்தில் நேர்ந்து வெட்டுகிறார்கள்! ஏனையவர்கள் பலிசெய்வதற்கென்றே பண்னைவைத்து வெட்டுகிறார்கள்!!! அவ்வளவுதான் வித்தியாசம்! அதாவது வெட்டப்படும் இடம்தான்! வெட்டப்படும் இடம் சைவ ஆலயம்! எனவே அதுபற்றிய முடிவுகளை எடுக்க வேண்டியது சைவ அமைப்புகளே ஒழிய பௌத்த சங்கங்கள் அல்ல!!! எனவே மிருகபலி எதிர்ப்பு கோஷம் இங்கு செல்லாத விடயம்! மிருகபலி தடைச்சட்டம் ஆலயத்தில் நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை சைவசமூகம் சிந்திக்க வேண்டுமே தவிர அரசு அல்ல!!! ஆலய மிருகபலி தடைச்சட்டம் என்று ஒன்றை கொண்டுவர வேண்டுமென்றால் அதை பௌத்த அரசு சைவசமய ஆலயவிடயத்தில் கொண்டுவருவதற்கு சைவசமய அமைப்புக்களிடம் பூரண அனுமதியை பெற வேண்டும். அதுவே நியாயமும் கூட!!!! எனவே ஆலயதில் வெட்டுவது நியாயமா இல்லையா என்பதை சைவசமய தலைமைபீடங்கள் எடுக்க வேண்டுமே தவிர பௌத்தபீடங்கள் அல்ல!!!!!


மிருகபலியை தடைசெய்ய சைவ அமைப்புகள் ஆதரவு தெரிவிக்கலாமா?
 
1)மிருகபலி தடைமூலம் புத்தளத்தில் உள்ள எஞ்சியுள்ள சொற்ப தமிழர்களை அவர்களுடைய சமயநம்பிக்கையில் இருந்து விடுவித்து மெதுவாக மதமாற்றங்களை அரங்கேற்றி அவர்களையும் சிங்களவர்களாக மாற்றும் 'அரசியல் கணக்கு"த்தான் இந்த மிருகபலி தடை நாடகம் என்பதை முதலில் தமிழர் அனைவரும் உணர வேண்டும்! மேர்வின் சில்வா உட்பட அனைத்து பேரினவாத கொள்கையுடைய பௌத்த அமைப்புகளும் இதில் தலையிடுவதைக் கொண்டே இதைத்துணியலாம்.
அதுவும் ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் "தடைவிதிக்க முடியாது" என்று தீர்ப்பு வழங்கிய  பின்னர் சிங்கள-தமிழ் இனக்கலவரம் வரும் என்று காரணம் கூறப்பட்டு சிலாபம் நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு தற்போது பெறப்பட்டுள்ளமையை உற்றுணர்ந்து பார்த்தால் தெளிவாகத் தெரிவது இங்கு நடப்பது தமிழ் இனத்துக்கு எதிரான சதி என்பதே! அகில இலங்கை இந்து மாமன்றம் பௌத்த சங்கங்களுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து இருக்கையில் சிங்கள- தமிழ் இனக்கலவரம் வரவேண்டிய அவசியம்தான் என்ன?
 
2)ஒரு பண்பாட்டு அலகைக் கொண்டு இன்னொரு பண்பாட்டை அளக்கக்கூடாது என்பது உலக பண்பாடுகள் பற்றிய ஆய்வுகளை நடத்தும் கற்கைநெறியில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறை. எனவே படித்த மேல்த்தட்டு வர்க்க பண்பாட்டில் சிந்தனைக்கோட்பாட்டோடு உழைக்கும் கீழ்த்தட்டு வர்க்க மக்களின் பண்பாட்டு சமயநம்பிக்கைகளை அளப்பது வரம்புக்கு முரணானது!
 
3)சைவசித்தாந்த விதிப்படி பார்த்தால்- கண்ணப்ப நாயனாருக்கு ஒரு நியாயமும் இந்தப் பாமர மக்களுக்கு இன்னொரு நியாயமும் இருக்க வாய்ப்பில்லை! எனவே
 
"கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் "- மாணிக்கவாசகர்
 
மாணிக்கவாசகர் ஒரு நாட்டின் அமைச்சராக இருந்தவர். வேதம் ஆகமம் கற்றவர். அவரே கண்ணப்பநாயனாரின் சமூகத்தளத்துக்குள் தன்னை அழைத்துச்சென்று தனது பக்தியின் திறத்தை அளந்துபார்த்தபோது அது கண்ணப்பநாயனாரைப்போல் இருக்கவில்லை என்று பாடியிருக்கின்றார். அதாவது உழைக்கும் கீழ்த்தட்டு மக்களின் பண்பாட்டை ஆராயும்போது அவர்களுடைய சமூகத்தளத்தில் நம்மையும் இருந்தி அதன்பின்னரே ஆராய முனையவேண்டும் என்ப்தையே இது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகின்றது.  எனவே சைவசித்தாந்த விதிப்படி கீழ்த்தட்டு மக்களின் சமூகத்தளத்துக்கு நாமும் மாறினால்த்தான் உண்மையை உணரமுடியும்! நிச்சயம் கண்ணப்பரின் முன் மாணிக்கவாசகப் பெருமான் வெட்கிநின்றதைக் காட்டிலும் நாம் மிக இழிவாக வெட்கி தலைகுனிந்து நிற்க வேண்டிவரும்! காரணம் மாணிக்கவாசகர் எங்கே? வீட்டுக்குள் கோழிக்கறியும் வெளியில் மிருகபலி தவறு என்ற ஞான உபதேசமும் பண்ணும் நாம் எங்கே?
 
உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது என்றாரே சுவாமி விபுலானந்தர். கல்லையும் பூவாகக் கருதியவருக்கு எச்சிலையும் அபிடேகப்பாலாக கருதியவருக்கு இறைஞ்சிப்படையலையும் அமுதமாகக் கருதியவருக்கு தேவைப்படுவதெல்லாம் பக்தியே!


அப்படியானால் ஆலய மிருகபலி?
 
பண்டைய காலத்தில் பழமுதிர்ச்சோலையில் மிருகபலி நடந்ததை திருமுருகாற்றுப்படை மூலம் அறியலாம். வேதத்திலும் வேள்விப்பூசையில் பலியிடல் ஒரு அங்கமாக கூறப்படுகின்றது. ஆனால் இன்று வேதவேள்வி செய்யும்போது யாரும் பலியிடுவதில்லை! அது எப்படி சாத்தியமானது? கல்வி அறிவே!!! சிந்தனை வளர்ச்சியே !!!!
 
எனவே மிருகபலி வழிபாட்டு உடையோரின் சமூகத்தளத்தை கல்வியாளும் பொருளாதாரத்தாலும் உயர்த்தும்போது அவர்கள் மிருகபலியை மெதுமெதுவாக தவிர்ப்பர். இதுவே யதார்த்தம்! எனவே; சைவ சித்தாந்த பாடசாலைகளை, சைவக்கல்லூரிகளை, சைவ மன்றங்களை அங்கு பெருக்க வேண்டியதே சைவத்தலைமைகள் செய்ய வேண்டிய கடமை! கல்வி அவர்கள் சமூகத்தளத்தை மாற்றும்! அதைவிடுத்து சேக்கிழார் விழா என்றாலும் சரி, உலக இந்து மாநாடு என்றாலும் சரி, சிவதொண்டர் மாநாடு என்றாலும் சரி, திருமுறை மாநாடு என்றாலும் சரி..........அனைத்தையும் யாழ்ப்பாணம் கொழும்பு மட்டக்களப்பு என்று சுருக்கி வைத்திருக்கும் மேல்த்தட்டு வர்க்க சிந்தனை மாற வேண்டும்! புத்தளத்திலும் இவற்றை ஒழுங்கு படுத்தினால் விழாக்கள் நடக்காதா என்ன? அல்லது திருமுறை மாநாடுகளுக்கு தேவாரமுதலிகள் எழுந்தருள மாட்டார்களா என்ன?
 
பௌத்த துறவிகளுக்கு சைவாலயத்துக்குள் வருவதற்கு ஆகமமுறைப்படி அனுமதியில்லை! கொழும்புக்கு அருகாமையில் உள்ள முருகன் ஆலயத்துக்குள் பௌத்த துறவி வந்து அரசியல் பேசினார்! சிங்கள இடத்தில் அவர்களை அனுசரித்துத்தான் பூசை செய்ய வேண்டுமென்றனர்! அதாவது ஆகமம் பெரிதில்லை;பெரும்பான்மையினரை அரவணைப்பதே பெரிது என்றனர்!!!
 
அப்படியானால் ஆகம பயன்பாடு எதற்கு? 
 
சைவ அமைப்புகளுக்கு இந்த உழைக்கும் சமூகத்தளத்தின் மதநம்பிக்கையை குழைத்து பெரும்பான்மையின சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு போலும்!!!
 
எனவே; தமிழ் அரசியல் தலைவர்கள் இதில் தலையிடும் பொறுப்பை எப்போது உணர்வார்கள்? காலம் பதில் சொல்வதற்கும் காட்சிகள் மாறிவிடும்!!!! பெரும்பான்மைச் சமூகத்தின் சதியை உணர்ந்து சைவ தலைமைகள் கூடி ஆக்கபூர்வமான முடிவெடுக்க வேண்டும். தற்போது தேவைப்படுவது மேர்வின் சில்வாவின் தலையீடுகளையும் பௌத்த சிங்கள சங்கங்களின் தலையீடுகளையும் சைவ ஆலயங்களுக்குள் இருந்து அகற்ற ஆவண செய்ய வேண்டும். தூர நோக்கில் செய்ய வேண்டிய விடயங்கள் இக்கட்டுரை முழுதும் பரவிக்கிடக்கின்றன! உணர்ந்து ஒழுகவேண்டியது அகில இலங்கை இந்து மாமன்றம் தொட்டு அனைத்து சைவ அமைப்புகளின் கடமையாகும். உருப்படியாக எதையேனும் செய்வார்களா? அல்லது புத்தளம் தானே........யாழ்ப்பாணம் இல்லையே.....போனால் போகட்டும்.....நமக்கென்ன என்று இருப்பார்களா?
 
-திவியரஞ்சினியன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.