குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

நவநீதம்பிள்ளையிடம் மகிந்த சமரசிங்க மன்றாட்டம் இந்தியாவின் மௌனம் சிறிலங்காவுக்கு கலக்கம் (இ.நிலைகள்)

 14.09.2011.த.ஆ.2042--சிறிலங்கா விவகாரத்தில் பாரபட்சமில்லாத கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் குழு மன்றாடியுள்ளது. யெனிவாவில் நேற்று முன்தினம் ஆரம்பமான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கடுமையாகச் சாடிய சிறிலங்கா அரசின் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அவருடன் சூடான வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தார்.

இந்தநிலையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நிபுணர் குழு அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், சிறிலங்காவுக்கு எதிரான ஆயுதம் இப்போது நவநீதம்பிள்ளையின் கைக்கு மாறியுள்ளது.

 புலிகளை அழித்ததற்கான தண்டனையே இது – சிறிலங்கா விசனம்------------------------------------------------------

விடுதலைப் புலிகளை இல்லாதொழித்ததற்கு சிறிலங்காவுக்கு தண்டனை வழங்கும் நோக்கிலேயே ஐ.நா சர்ச்சைக்குரிய நகர்வில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்திருப்பது குறித்தே அந்த சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் இவ்வாறு கூறியுள்ளன.

நாடுகளின் குழு ஒன்றினதும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களினதும் விருப்பங்களுக்கேற்பவே ஐ.நா இந்த சர்ச்சைக்குரிய நகர்வில் ஈடுபட்டதாகவும் சிறிலங்கா அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டிய அந்த வட்டாரங்கள், போருக்குப் பிந்திய அபிவிருத்தியை கெடுக்க அவை இரகசிய சதி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளன.
 இதையடுத்து யெனிவா கூட்டத்தொடருக்காக சிறிலங்கா அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட உயர்நிலைக்குழு நேற்று நவநீதம்பிள்ளை சந்தித்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என்றும் ஏனைய நாடுகளைப் போன்றே தம்மையும் சமமாக நடத்துமாறும் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்தச் சந்திப்பின் போது நவநீதம்பிள்ளையிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது நிபுணர்குழு அறிக்கையை பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்தது குறித்தும், அந்த விவகாரத்தை தாம் மூன்றாவது தரப்பின் ஊடாகவே அறிய நேரிட்டது குறித்தும் மகிந்த சமரசிங்க கவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அமைச்சர்கள் அனுர பிரியதர்சன யாப்பா, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் தாமரா குணநாயகம் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.


இந்தியாவின் மௌனம் – சிறிலங்காவுக்கு கலக்கம் ------- மந்திரக்கோல் எங்கே இருக்கிறது என்பது புரிகிறதா 

சிறிலங்கா இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கருத்து ஏதும் தெரிவிக்காமல் மெளனம் சாதித்து வருகிறது.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்றுமுன்தினம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கும் அனுப்பி வைத்திருந்தார்.

இந்த விவகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜெனிவாவிலோ அல்லது புதுடெல்லியிலோ இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு ஐ.நாவில் விவாதத்துக்கு வரும் போது வெளியிடப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்த தவறுகளுக்கு இந்தியா பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுமா?  கர்ணனின் உயிர் பிரிந்தது ஏன்? கீழே 2 அய்யும் வாசித்தால் மீள்நினைவுகள் வரும்.

செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணன் போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கின்றான். அவனின் உடல் முழுவதும் அம்புகளின் துளை. சில அம்புகள் அவன் மீது அன்பு கொண்டவை போல அகல மனமின்றி இருந்தன. போர்க் களத்தில் கிடக்கின்ற கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த கொடை -தர்மம் உயிரைக் காப்பாற்றுகிறது. கர்ணனைக் கொல்லாமல் எதுவும் சாத்திய மாகாது என்பதை உணர்ந்த கண்ணன் திட்டம் தீட்டுகின்றான். போர்க் களத்தில் ஆவி அகத்தோ, புறத்தோ என்று புரியாமல் கிடக்கின்ற கர்ணனிடம் நீ செய்த புண்ணியத்தைத் தா என்று மாயக் கண்ணன் கேட்க, கர்ணன் தன் உடலைத் தைத் துக் கொண்டிருக்கும் அம்பை எடுத்து அதன் வழியே பாயும் குருதியால் தன் புண்ணியத்தை கண்ணனிடம் கொடுக்க, அந்தக் கணமே கர்ணனின் உயிர் பிரிகின்றது.

புண்ணியத்தைக் கொடுத்தால் மேலும் புண்ணியம் சேர்ந்து அது இரட்டிப்பாகி கர்ணனின் உயிரைக் காப்பாற்றியல்லவா இருக்க வேண்டும் என்று வாதிடுவோரும் உள்ளனர். இது தொடர்பில் ஞானபூமி என்ற சஞ்சிகையில் நீண்டதொரு விவாதம் நடந்தது. இவ்விவாதத்தில் காஞ்சிப் பெரியவரும் கருத்துத் தெரிவித்தார். போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்ற கர்ணனின் ஆத்மா முத்தி இன்பம் பெறுவதற்கு அவனின் புண்ணியம் போதாமல் இருந்தது. எனவேதான் கண்ண பரமாத்மா அவனுக்கு மோட்சம் கொடுக்க விரும்பி உயிர் பிரியும் காலை அவன் செய்த புண்ணியத்தை தானமாகப் பெற்று குறை நிலையில் இருந்த புண்ணியத்தை உயர்த்தி விட்டான். அந்தக் கணமே கர்ணனின் ஆத்மா முத்தி இன்பம் பெற்றது என்றார்.

இதனை மாணவர்களுக்குக் கூறிக்கொண்டிருந்த போது, ஒரு மாணவன் இடைமறித்து சேர், ஒரு சந்தேகம் என்றான். என்ன? என்றேன். இலங்கை செய்த போர்க் குற்றத்தை ஐ.நா. சபை விசாரணை செய்யாதற்கு காரணம் என்ன என்று கேட்டான். மாணவனின் கேள்வியால் அதிர்ந்து போனேன். ஆபத்தான கேள்வி என்பதால் மெளனம் சாதித்தேன். என்ன சேர், இது மிகவும் இலகுவானது. இலங்கைக்கு தண்டனை கிடைப்பதற்கு இன்னும் கொஞ்சப் பாவம் போதாமல் இருக்கிறது. அது விரைவில் கிடைத்ததும் விசாரணை ஆரம்பிக்கப்படும். அங்கு கர்ணனுக்கு புண்ணியம் போதாதது போல இங்கு இலங்கைக்கு கொஞ்சம் பாவம் போதாது.

கர்ணனின் விடயத்தை எப்படி கண்ணன் சமாளித்தானோ அது போல உரிய நேரத்தில் இலங்கைக்கும் உரியதைக் கொடுக்காமல் அந்தக் கண்ணன் விடான் என்றான் மாணவன். மாணவனின் இந்தப் பதிலால் சித்தம் கலங்கியது. ஓ! அதுதான் சங்கதியோ. பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்த தவறுகளுக்கு இந்தியா பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுமா?

 நடந்து முடிந்த வன்னிப்போரின் போது பொது மக்கள் தஞ்சமடைவதற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசங்களில் அரச படைகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன் தாராளமாக ஷெல் வீச்சையும் மேற்கொண்டதாக இப்போது ஆதார பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

அமெரிக்கா இவை தொடர்பாகச் செய்மதி மூலம் எடுத்த படங்களை இலங்கை ஜனாதிபதியின் பார்வைக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் ஓர் உண்மை வெளிச்சத்துக்கு வருகின்றது. சனல்4 காணொளிக் காட்சிகள் வெளியாகு முன்னரே வன்னியின் போர் அவலங்கள் வெளிநாடுகளைச் சென்றடைந் திருக்கின்றன என்பதுதான் அது.
 
ஒரு தனிப்பட்ட வஞ்சத்தைத் தீர்ப்பதற்காக ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையே அழித்து விடுவதற்கு இந்தியா தயங்கவில்லை என்பதையும் அந்த அழிப்பு நடவடிக்கையை அது நிமிடத்துக்கு நிமிடம் பார்த்துக் கொண்டு இருந்தது என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. மனிதப் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டேதான் போரின்போது தங்குதடையின்றி இலங்கையரசுக்கு இந்தியா உதவிகளையும் வழங்கியுள்ளது. கௌரவருக்கு மகாபாரதத்தில் ஒரு சகுனி கிடைத்தமைபோன்று இந்தியாவின் இந்த பஞ்சமா பாதகங்களுக்கு ஒரு சகுனி ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
கௌரவருக்குச் சகுனி வழங்கிய ஆலோசனைகள் அவர்களை எத்தகைய மோசமான கதிக்குத் தள்ளியது என்பதனை நாமறிவோம். இது போன்று நவீன சகுனியான எம்.கே.நாராயணனின் தீர்க்க தரிசனமற்ற பிழையான ஆலோசனைகள் இந்தியாவைச் சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது.
 
1962ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சரான வி.கே.கிருஷ்ணமேனனின் தவறான ஆலோசனைகள் காரணமாக இந்தியா சீனாவிடம் மீண்டெழ முடியாத அளவுக்கு அடி வாங்கியது. ஏராளமான இந்திய நிலப்பரப்பும் சீனா வசமாகியது.இந்த ஏக்கத்திலேயே அப் போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணத்தைத் தழுவினார். சீனப் பிரதமராக இருந்த சௌ என்லாய் வெற்றிக்களிப்பில் கொக்கரித்தார்.
 
இப்போது ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா, எம்.கே.நாராயணனால் பழி சுமந்து நிற்கிறது.இலங்கைத் தமிழரின் இன்றைய இழி நிலைக்கு இந்தியா நிச்சயம் பதில் கூறித்தானாக வேண்டும். ஏனென்றால், இந்தப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி ஆயுத வன்முறையாக மாற்றிவிட்டது இந்தியாதான். பின்னர் அதனைப் பயங்கரவாதமாக்கியதும் இந்தியாதான்.
 
எனவே ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது இலங்கையில் தமிழ் மக்கள் கொடூரமான முறையில் ஆட்சியாளரின் உதவியுடன் கொலை செய்யபபட்டனர். உடனே தனது வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திராகாந்தி.
 
இவரின் காலத்திலேயே புலிகளுக்கு இந்தியாவில் புகலிடமும் பயிற்சிகளும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவரது மறைவுக்குப் பின்னர் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. தானென்ற ஆணவமும் தமிழரைக் கிள்ளுக்கீரையாக எண்ணிய மனோபாவமும் ராஜீவ் காந்தியின் கண்களை மறைத்தன. நண்பன் யார் எதிரி யார் என்று சீர்தூக்கிப் பார்க்கும் வல்லமையும் அவரிடம் இருந்ததில்லை.
 
இதன் காரணமாகவே 1987இல் அமைதிப் படையென்ற பெயரில் அழிவுப்படையொன்றை இலங்கைக்குள் பிரவேசித்தது. குள்ளநரியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நரித்தனங்களை எடைபோடும் அளவுக்கு ராஜீவ் காந்தி அரசியல் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை. இதனையே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அன்று கிண்டலாகத் தெரிவித்தார். "எனது அரசியல் அனுபவத்துக்கும் ராஜீவ் காந்தியின் வயதுக்கும் வேறுபாடு காணப்படவில்லை'' என்பதே ஜே. ஆரின் கூற்று. இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட கொழும்பு வந்தபோது தன்னைக் கொல்வதற்கு ஒரு சிங்களப்படையினன் என்ன காரணத்துக்காக முயன்றுள்ளான் என்பதைப்புரிந்து கொள்வதற்குக் கூட ராஜீவால் முடியவில்லை.
 
அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இந்திய இராணுவத்தினர் அட்டூ ழியங்கள் புரிந்ததும் இதன் விளைவாக ஏராளமான இந்திய வீரர்கள் மரணமடைந்ததும், பின்னர் "துண்டைக்காணோம் துணியைக் காணோமென'' இந்தியப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறியதும் பழைய கதைகள்.
 
இவற்றின் விளைவாகவே ராஜீவ் காந்தியின் அகால மரணமும் நிகழ்ந்தது. ஆனால் இந்த மரணத்தின் எதிர்விளைவுகள் ஈழத் தமிழர்களின் வாழ்வில் இத்தகைய கொடிய அவலங்களை விளைவிக்கும் என்பதை எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. தற்போது இலங்கையில் அரங்கேறிய மிகக் கொடிய போர்க்குற்றங்களில் இந்தியாவின் கரங்களும் தோய்ந்திருக்கின்றன என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது. நாராயணன் போன்றவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் வகுக்கப்பட்ட கொள்கைகள் இலங்கையின் பெரும்பான்மை மக்களை மகிழ்வடையச் செய்திருக்கலாம். ஆனால் இலங்கை அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள்முதல் அவலங்களையே சந்தித்து வருகின்ற தமிழ் மக்களைப் படுகுழிக்குள் தள்ளி வீழ்த்தியுள்ளது என்பதுதான் உண்மை.
எப்போதுமே இந்தியாவின் மீது ஒருவித பிரிக்கமுடியாத பிணைப்பையும், பாசத்தையும் கொண்டிருந்த ஈழத்தமிழ் மக்கள் இதனால் தமது மனப்போக்கில் மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். எமது ஒட்டு மொத்த அழிவுக்கும், அவலத்துக்கும் இந்தியா தான் காரணமென அவர்கள் ஐயம் திரிபுற அறிந்து கொண்டமையே இதற்கு முக்கிய காரணமாகும்.
 
இந்தியாவின் தமிழகத்திலுள்ள உறவுகள் இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்காக என்றுமில்லாதவாறு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றமை ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் சிறிதளவு ஆறுதலைக் கொடுத்தாலும் இந்தியாவின் நயவஞ்சகப் போக்கையும் துரோகங்களையும் அவர்களால் மன்னிக்க முடியாது. நாராயணனால் தவறாக இந்தியா வழி நடத்தப்பட்டதாக இப்போது தெரிவிக்கப்பட்டாலும் கூட புதுடில்லியின் போக்கில் இன்னும் மாற்றங்கள் ஏதுமில்லை. இந்த வாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனிதஉரிமைகள் சபைக் கூட்டத்தில் அது தெரியவரும். புதுடில்லியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஒருபோதும் நடக்காது என்ற உண்மை அங்கு வெளிப்படும்.
 
உண்மையில் இந்தியா இனிமேலும் தனது மோசமான ஆலோசகர்களை நம்பியிராது தீர்க்கமானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய தருணமிது.  ஈழத்தமிழர்களே இந்தியாவின் உண்மையான நண்பர்கள் என்ற யதார்த்தத்தை அது புரிந்து கொள்ள வேண்டும்.தவறான வழிகாட்டல்களால் இலங்கையிலேயே வாழ்கின்ற தமிழ் மக்களை எதிரிகளாகப் பார்ப்பதை விடுத்து இந்தியா தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியாவால் எவ்வளவோ துன்பங்களை ஈழத்தமிழர்கள் அனுபவித்துவிட்டார்கள். இதற்கெல்லாம் பிராயச்சித்தங்கள் செய்யவேண்டிய பொறுப்பும் இந்தியாவுக்குண்டு.                                     
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.