குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

ஈழம்இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காணவேண்டும் இலங்கை எம்.பி. சீனித்தம்பி

  இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காணவேண்டும் இலங்கை(மட்டக்களப்பு) எம்.பி. சீனி தம்பி யோகேஸ்வரன் வெள்ளி, 02 செப்டம்பர் 2011 16:01   நாகர்கோவில், செப் 2-இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு இந்திய அரசால்தான் தீர்வு காண முடியும் என்று இலங்கை எம்.பி. சீனி தம்பி யோகேசுவரன் கூறினார். இலங்கை மட்டக் கிளப்பு எம்.பி. சீனிதம்பி யோகேசுவரன் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை யில் உள்ள 2 கோடி மக்களில், 29 லட்சம் பேர் இந்துக்கள். இலங் கையின் பூர்வீக மதம் சைவம்(இந்து) மதம் தான். பின் னர் தான் பவுத்தர்கள் அங்கு குடியேற தொடங் கினர். தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று 1952ல் அகிம்சை வழியில் போராட் டத்தை தொடர்ந்தனர்.  அதன் பின்னர் போடப் பட்ட ஒப்பந்தங்களை இலங்கை அரசு மதிக்க வில்லை. அதனால் தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட தொடங் கினர். 31 வருட போராட் டம் கடந்த 2009 மே 18ஆம்தேதி முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் 3 லட்சத்துக்கும் அதிக மான தமிழர்கள் முகாம் களில் அமர்த்தப்பட் டனர். இந்த போரின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போனார் கள். அவர்களின் நிலை என்ன என்பது தெரிய வில்லை. யுத்தம் முடிவுற் றதால், இலங்கையில் தமிழர் களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர் பார்த்தோம். ஆனால்  அது நடக்கவில்லை. எங்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இலங்கை அரசு டன் 10 முறை பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால் இலங்கை அரசு நாங்கள் வைத்த கோரிக்கை களை ஏற்றுக்கொள் ளாததால் பேச்சு வார்த்தை பாதியில் நிற்கிறது.

வீடுகட்டிக் கொடுக்கப்படவில்லை

அங்குள்ள பிரச்சி னைக்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தான் தீர்வு காண முடியும்.  இலங்கை தமிழர் களுக்காக 50 ஆயிரம் வீடு கட்டி கொடுக்கப் படும் என இந்திய அரசு அறிவித்தது. ஒன்றரை வருடங்கள் ஆகியும், ஆயிரம் வீடுகள் கூட முழுமையாக கட்டிக் கொடுக்கப்படவில்லை. இந்திய அரசு வழங்கும் உதவிகள் முழுமையாக தமிழர்களை போய்ச் சேரவில்லை. தற்போது இலங்கையில் அவசர கால தடை சட்டத்தை விலக்கி கொள்வதாக இலங்கை அரசு அறிவித் தாலும் கூட, எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. பயங்கரவாத தடை சட்டத்தை பலப்படுத் தும் நடவடிக்கையை அந்த நாட்டு அரசு வேகப்படுத்தி இருக் கிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் இலங்கை தமிழர்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் தமிழக முதல மைச்சர் ஜெயலலிதா, தேர்தலுக்கு பிறகும் கூட இலங்கை தமிழர் களுக்காக சட்டசபை யில் சில தீர்மானங்களை நிறைவேற்றி இருப்ப தற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ் வாறு சீனிதம்பி யோ கேஸ்வரன் கூறினார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.