குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

துணை இராணுவ குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்- கொழும்பில் பிளேக்!

 14.09.2011த.ஆ.2042 நே.ப.11.30மணி-வடக்கில் துணை இராணுவ குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராயாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் கூறியுள்ளார். மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கு முதல் இன்று கொழும்பில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனைத்தெரிவித்தார்.
மீள்குடியேறச்செல்லும் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்பவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பெருமளவு பணிகளை ஆற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மர்மமனிதன் பிரச்சினையால் வடபகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். வடபகுதியில் பாதுகாப்பு நிலமையை வழமைக்கு கொண்டுவருவதாக இருந்தால் தமிழ் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறு ஈடுபடுத்தினால் இராணுவத்தினரது தேவைப்பாடு நீடிக்காது எனவும் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை தான் ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கில் மனித உரிமையின் நிலைப்பாடு குறித்தும் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வளித்தல் குறித்து தான் கவனத்தில் கொண்டதுடன் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்தும் தான் கவனத்தில் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்தில்ரொபர்ட் ஓ பிளேக்கின் சந்திப்பு நடந்தேறியது – வால்பிடிக்கும்கட்சி தமிழர்தலையிலும் தன்தலையிலும் மண்போட ஈ.பி.டி.பி.யின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாது தனது சந்திப்பினை திட்டமிட்ட படி மேற்கொண்டு திரும்பியுள்ளார் அமெரிக்காவின் தெற்காசியப் பிராந்தியங்களுக்கான பிரதி இராயாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணயம் மேற்கொண்ட றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவினர் பலாலியில் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியையும், யாழ் செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபரையும், அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தினரையும் முதலில் சந்தித்து உரையாடியிருந்தனர். ஈ.பி.டி.பி.யின் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னர் சளைக்காது  யாழ் ஆயரையும்  ஆயர் இல்லத்தில் வைத்து பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளையும் சந்தித்து குடாநாட்டின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து திரும்பியுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்திற்கு பயணமொன்றை மேற்கொண்டு சென்றிருந்த தெற்காசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராயாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவினருக்கு யாழ் மாவட்ட செயலகத்திலோ மற்றும் ஆர்ப்பாட்டத்தின்போதோ உரிய முறையிலான பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

யாழ். செயலகத்திற்கு காலை 10.30 மணிக்கு குழுவினர் வருகை தருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபோதும் யாழ் செயலகத்தில் வந்திருந்த அவர்களை வரவேற்பதற்கு எவ்விதமான ஏற்பாடுகளையும் செயலக அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவில்லை. அவர்களாகவே செயலக வரவேற்பாளரிடம் விசாரித்து அரசாங்க அதிபர் அலுவலகத்திற்குச் சென்று சந்திப்பை நடாத்தி திரும்பியிருந்தனர்.

இதேவேளை 4ம் குறுக்குத் தெருவிலுள்ள அமெரிக்கத் தகவல் நிலையத்தில் பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அங்கு ஈ.பி.டி.பி.யினர் கறுப்புக் கொடிகளையும் பதாதைகளையும் ஏந்திய வண்ணம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிசாரினதோ படையினரதோ பிரசன்னம் அவ்விடத்தில் இருந்திருக்கவில்லை.  அரை மணித்தியாலத்தின் பின்னரே அவ்விடத்திற்கு சென்ற  காவலதுறையினர் ஆர்ப்பாட்டக் காரர்களிடம் வீதிகளை தடை செய்து மறிக்காது நிற்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவ்வேளையில் அங்கு நின்ற கா.து.உயர் அதிகாரிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு சென்றதை அடுத்து எவ்வித அறிவித்தலும் வழங்காது விலகியே நின்று வேடிக்கை பார்த்த காவலதுறையினர் பின்னர் கலைந்து சென்று விட்டனர். காவல்துறையினரது பாதுகாப்புடன் அமெரிக்கத் தகவல் நிலையத்தினுள் செல்ல காத்திருந்த குழுவினரும் திரும்பியிருந்தனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.