குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

சிறிலங்காவின் இறுதிப்போர் -மீளாய்வுசெய்ய மற்றொருநிபுணரை நியமித்தார் பான்கீமூன்!

14.09.2011.த.ஆ.2042-சிறிலங்காவின் இறுதிப்போர் -மீளாய்வு செய்ய மற்றொரு நிபுணரை நியமித்தார் பான் கீ மூன்! மகிந்தரின் வெற்றிக்களிப்பு  தத்தளிப்பாக மாறுகிறதா? அறம்வென்றால்சரி அழும்தமிழர் ஆறுதல் அடைந்தால் சரி. ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைக்குப் பதிலளிக்க சிறிலங்கா அரசுக்குப் போதிய காலஅவகாசம் வழக்கப்பட்ட போதும், பதிலை வழங்க சிறிலங்கா அரசு மறுத்து விட்டதாக ஐ.நா தகவல் நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் வடக்கு நிலைமைகள் பற்றி தாம் தயாரித்த அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச்செயலருக்கு அனுப்பியதாகவும், அந்த அறிக்கையையும் இணைத்தே மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில், போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்வதற்கு நிபுணர் ஒருவரையும் பான் கீ மூன் நியமித்துள்ளார்.

ஐ.நா சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா அகமட் ஒபெய்ட் [Thoraya Obaid, former Executive Director of the UN Population Fund - UNFPA] என்ற நிபுணரையே இதுபற்றி மீளாய்வு செய்யுமாறு பான் கீ மூன் கேட்டுள்ளார்.

இவர் தனது பணிகளை விரைவில் தொடங்குவார் என்றும் ஐ.நா செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.