குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கை விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - மனித உரிமை அமைப்புக்கள்

 14.09. 2011  இலங்கை விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
 
இறுதிக் கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியது மனித உரிமைப் பேரவையின் கடமையாகும் எனவும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
 
முழுமையான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைப் பேரவை அறிவிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
 
நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த இது பொருத்தமான தருணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலமாக நியாத்திற்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச மன்னிப்புச் சபையும் இலங்கை தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைப் பேரவையின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்துக்கான பிரதித் தூதுவரை இலங்கை மீள அழைக்கவுள்ளது?
14.09. 2011  சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கான இலங்கைப் பிரதித் தூதுவர் ஜெனரல் ஜகத் டயஸை அரசாங்கம் மீள அழைக்க உள்ளதாக சுவிட்சர்லாந்து செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 57ம் படையணியின் கட்டளைத் தளபதியாக ஜெனரல் டயஸ் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் உரிமை மீறல்களுக்கும் ஜகத் ஜயஸிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்திப்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய நிலையத்தின் மனித உரிமை மத்திய நிலையமும் ஜகத் டயஸ் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த விடயம் குறித்த சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மன் அரசாங்கங்கள் இலங்கையுடன் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.