குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

யெனீவாவில் இலங்கைகுறித்து சூடானவாதங்கள்.அய்.நா.அறிக்கை ம.உ. அவையில் சரமர்ப்பிப்பு.

 13.09.2011-த.ஆ.2042-யெனீவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கையை விவாதத்துக்கு விடுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிக்கு இலங்கை அரசு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது குறித்து தமக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்ற ஒழுங்குப் பிரச்சினையை அது உடனடியாகக் கிளப்பி உள்ளது. முன்னதாக மனித உரிமைகள் சபையின் ஒரு தொகுதி உறுப்பு நாடுகளைச் சந்தித்த மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை நிபுணர் குழுவின் அறிக்கையைச் சபையில் பகிரங்கப்படுத்த உள்ளதாகக் கூறி இருந்தார். இலங்கையில் இறுதிப் போர் நடந்தபோது நிகழ்ந்தவை என்று குற்றஞ்சாட்டப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை அளிக்க மூவர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்  கீ மூன் நியமித்திருந்தார்.
 
இந்தோனேசியாவைச் சேர்ந்த தஸ்ருமன் தலைமையிலான அந்தக் குழு தனது அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா. பொதுச் செயலரிடம் கையளித்திருந்தது. இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று தெரிவித்த அந்த அறிக்கை, அது தொடர்பில் அனைத்துலக விசாரணை நடத்தப்படுவது அவசியமானது என்றும் பரிந்துரை செய்திருந்தது.
 
எனினும் கடந்த நான்கு மாதங்களாக அந்த அறிக்கை ஐ.நாவின் எந்தவொரு சபையிலும் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவில்லை. தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத் தொடரில் அதனைச் சமர்ப்பிப்பதற்கு ஐ.நா. திட்டமிட்டிருந்தது.
 
'கடந்த 9ஆம் திகதி உறுப்பு நாடுகள் சிலவற்றைச் சந்தித்த நவிப்பிள்ளை, நிபுணர் குழு அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அலுவலகம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்'' இவ்வாறு பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சரும், ஜெனீவா சென்றுள்ள இலங்கைக் குழுவுக்குத் தலைமை தாங்குபவருமான மஹிந்தர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
'ஐ.நாவின் உறுப்பு நாடான இலங்கைக்கு இது பற்றி அறிவிக்காமல் விட்டது மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் செய்த மிகப் பெரிய தவறு. கடைசி நேரத்தில் அது பற்றி எமக்குத் தெரிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று மனித உரிமைகள் சபையிடம் தெரிவித்திருக்கிறார் அமைச்சர். இதுபற்றிக் கேட்டதற்கு, 'இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளதுதான் என நவிப்பிள்ளையின் ஊடகப் பேச்சாளர் பதிலளித்தார்;.
 
 
ஜெனீவாவில் நேற்று இலங்கை நிலைப்பாடு குறித்து சூடான வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறப்பட்டன.
 
ஜெனீவாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் சபை அமர்வில், இலங்கை நிலைப்பாடு குறித்து சூடான வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறப்பட்டன.
 
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மனித உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிய நாடுகள் தொடர்பில், மனித உரிமை களுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, இலங்கையை முன்னுதாரணமாகக் கையாண்டார். இதையடுத்து, இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளையின் கூற்றுக்குக் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். நவநீதம்பிள்ளை தமதுரையில், பயங்கரவாதத்துக்கு எதிரான சண்டையின்போது, மனித உரிமைகள் குறித்து பல நாடுகள் போதிய அளவில் அக்கறைகொள்ளவில்லை என சுட்டிக்காட்டினார். உரிமைகளை நசுக்குதல், கலாசார புறக்கணிப்பு, பாரபட்சம் ஆகியவற்றுக்கு இது வழி சமைத்துள்ளது. அத்துடன், வன்முறைகளையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இந்த வரிசையில் இலங்கையும் ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு அமைச்சர் சமரசிங்க கண்டனம் வெளியிட்டதுடன் இலங்கை அரசுப்பக்கத்தின் நியாயத்தையும் விளக்கினார்.
 
 
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது நடந்தவை குறித்தும் போரின் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
 
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சனல்4 தொலைக்காட்சி, வெளியிட்ட சிறீலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப் படத்துக்குப் பதிலாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு தயாரித்த வீடியோவும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
 
வொஷிங்ரனில் உள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் சாளிய விக்கிரம சூரியவினால் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. போருக்குப் பின்னர் இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜாலிய விக்கிரம சூரிய விளக்கினார்.  அப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த நல்லிணத்துக்காக கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் நிச்சயமாக வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.     
 
 
இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக வாய்ப்பில்லை:-
 
இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு தற்போது நடைபெற்று வரும் 18 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இல்லை என கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
 
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான கால எல்லையொன்று இலங்கைக்கு வழங்கப்படும் என்று அந்த தகவல்கள் நேற்று உறுதியாகத் தெரிவித்தன.
 
 
இறுதிச் சண்டை இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தாராளமாக இடம்பெற்றன என்றும் அதுகுறித்தான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இதன்படி தற்போது நடைபெறும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படலாமெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
 
 
ஆனால் அப்படியான ஒன்று இப்போதைக்கு நடைபெறமாட்டாதெனத் தெரியவருகிறது. மனித உரிமை மீறல்கள் குறித்தான தனது பக்க நியாயத்தை விளக்குவதற்காக இலங்கைக்கு கால அவகாசமொன்றை வழங்குவதற்கு அமெரிக்கா, இந்தியா உட்பட்ட நாடுகள் ஆலோசித்திருப்பதாகத் தெரிகிறது.
 
 
இதன்படி ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச்சில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் இலங்கை தனது நியாயத்தைத் தெளிவுபடுத்த அவகாசம் வழங்கப்படலாமெனத் தெரிகிறது.
 
 
இது குறித்து கொழும்பு சென்றுள்ள அமெரிக்க உதவிச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கும் அரச தரப்பு பேச்சுகளின்போது ஆராய்ந் திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 
இலங்கை மீது நியாயமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் சுமத்துவதை நிறுத்த வேண்டும் - மஹிந்த சமரசிங்க
 
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா.  மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கைத் தூதுக்குழுவின் தலைவர் மஹிந்த சமரசிங்க இலங்கை மீது நியாயமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் சுமத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
புதிய இலங்கையின் உருவாக்கத்துக்கு விரோதமான சில குழுக்கள் அல்லது தனிப்பட்டவர்களின் வெளிப்படையான கருத்துக்களுக்கு மத்தியிலும் நாங்கள் எமது நாட்டின் முன்னேற்றத்துக்கு எங்களின் முழுச்சக்தியையும் பயன்படுத்தி உழைப்போம் என மஹிந்த சமரசிங்க சூளுரைத்தார்.
 
இலங்கைக்கு எதிராக விடுக்கப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளை அங்கீகரிக்கவும், திறந்த மனதுடனும் பரஸ்பர சுயகௌரவத்துடனும் எமது நேச நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னேற்றத்துக்கு அர்ப்பணிப்புடன் நாம் செயலாற்றுவதைப் புரிந்துகொள்ளவும் நியாயமான உணர்வுள்ள எந்தநபரும் முயற்சிப்பார் என்று கூறிய அமைச்சர்.'நாங்கள் கேட்டுக்கொண்டதெல்லாம் சரியான ஆராய்வும், எங்களது பக்க நியாயத்தை நிரூபிக்கத் தேவையான அவகாசமும் மட்டுமே'' என  மேலும் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச சமூகத்துடன் சரியான அணுகுமுறைகளையே இலங்கை அரசு முன்னெடுத்துள்ளது எனக் கூறிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க,  அரசின் அணுகுமுறைகள் ஆக்கபூர்வமான கொள்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படு கின்றனவே தவிர, ஒருபோதும் கோழைத்தனமாகவோ, தைரியமற்றதாகவோ அமைந்தது கிடையாது எனவும்கருத்துப் பரிமாற்றங்களில் அரசு தெளிவாகவும், யதார்த்தமாகவும் எப்போதும் நடந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இரண்டு வருடங்களுக்கு முன்பு அதாவது 2009இல் மூன்று தசாப்தங்களாக நிலவிவந்த பயங்கரவாதத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தோம். இந்த இரண்டு வருட காலத்தில் ஆச்சரியப்படத்தக்க முன்னேற்றங்களை, அபிவிருத்திகளை நாம் செய்துள்ளோம். நாங்கள் சிரமப்பட்ட காலப் பகுதியிலும் அதன் பின்பும் எங்களுக்கு நேசக்கரம் நீட்டியவர்களை என்றும் நினைவில் வைத்திருப்போம். எங்களது மனசாட்சிக்கு விரோதமின்றி எடுத்த கருமத்தை சிறப்பாக முடிப்பதே எங்களது தீர்க்கமான கொள்கை.  எந்தக் காரணத்தைக் கொண்டும் எமது நேரிய கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
 
இந்த சீரிய கருத்தைப் பின்பற்றி நேர்மையுடன் செயற்படும் எந்த அரசும் சோடை போவதில்லை. இலங்கை அரசு கடந்த காலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் பெற்ற வெற்றி இன்னும் பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்றவற்றால் நிலைகுலைந்து தடுமாறும் நாடுகளுக்கு நல்ல போதனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
கடந்த சில வருடங்களாக எங்களது அயராத முயற்சிகளும் அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகளும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளாலும் மிலேச்சத்தனமான வாதங்களாலும் எள்ளி நகையாடப்பட்டு வந்துள்ளன. எனினும், தூரநோக்குடனும், தெளிவான சிந்தனைகளுடனும் பார்க்கும் எவருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் எங்கள் மீது சேறு பூச முயலும் சிலரின் சித்து விளையாட்டு என்பது புரிந்துபோகும்.2009இல் யுத்தம் முடிவடைவதற்கு முன்பே சர்வதேச மட்டத்தில் புலிகளின் ஊடுருவல் மேலோங்கி இருப்பதாகவும், அவர்களின் வலைப்பின்னல் இலங்கைக்கு எப்போதும் நெருக்கடி கொடுக்கும் எனவும் நாங்கள் சர்வதேசத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம். டயஸ்போரா (புலம்பெயர் சமூகம்) எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் எந்தெந்த வகையில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியுமோ அதனை மும்முரமாக செய்வதில் குரூர திருப்தியைக் காண்கிறார்கள். நேரடி பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட பின்பும் இத்தகைய மறைமுகப் பயங்கரவாதத்துக்கு நாங்கள் முகம் கொடுத்து வருகிறோம்.
 
குறுகிய அரசியல் நோக்கமும், அடித்தளம் இல்லாத கொள்கைகளையும் கொண்ட சிலர் எங்கள் மீது சேற்றை அள்ளி வீசுவதையே அன்றாடக் கடமையாக வைத்திருக்கிறார்கள். கொடிய பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் இந்த நாடு பெறவேண்டிய அபிவிருத்திகளைக் கவனத்தில் எடுக்காமல் பிதற்றித் திரிகிறார்கள்.
 
எங்களது தெளிவான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளின் மூலம் மொழி, இனம், சமயம், கலாசார வேறுபாடுகளுக்கு  அப்பால் இலங்கையர் என்ற ஒரே கூரையின் கீழ் திரண்டு எமது நாட்டை முன்னேற்ற ஒவ்வொரு பிரயையும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்பதே எமது குறிக்கோள். இரண்டொரு தினங்களுக்கு முன்பு எமது மேதகு சனாதிபதி மகிந்த ராசபட்ச கூறிய சில வாசகங்களை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
 
'இலங்கை இப்போது தேசிய ஒருமைப்பாட்டிலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் முனைந்து செயற்படுகின்றது. கோரப் போரில் நாங்கள் பெற்ற கசப்பான அனுபவங்களை பின் தள்ளிவிட்டு எங்களது முழுச் சக்தியையும் பிரயோகித்து நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றோம். நாங்கள் புதியதோர் தேசத்தை உருவாக்கி வருகிறோம்.கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு புதியவற்றை கற்றுக்கொள்கிறோம். எதிர்கால வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு உழைக்கிறோம். பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள முடியுமென உலகுக்கு நாம் ஏற்கனவே காட்டியுள்ளோம். மனித பாரம்பரியங்களின் அர்ப்பணிப்புடன் பிரதேசத்தின் கலாசார மரபுரிமையை நம் பாதுகாத்து வந்துள்ளோம்.மனித உரிமைகளுக்கான எமது கடப்பாடும், அர்ப்பணிப்பும் ஒருபோதும் இரண்டாம் பட்சமானது கிடையாது. அந்த சீரிய உணர்வுடன் அமைதியானதும், அர்ப்பணிப்பு மிக்கதும், சமத்துவத்தைக் கொண்டதுமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
13 09. 2011  ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில், தாரூஸ்மான் தலைமையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினரும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
சுயாதீன விசாரணைகளை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவை, பாதுகாப்புப் பேரவை போன்றவற்றின் கோரிக்கை அவசியமானது என பான் கீ மூன் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.