குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்தியா தலைப்பா கட்டுகிறது. இலங்கைவிவகாரத்தில் தேங்காய் உடைக்கப்போகிறதாம்.சீனா ஒதுங்குமாம்.

01 .09. 2011  சுனந்ததேசப்பிரியாவின் பார்வை! நன்றி தமிழ் இணையம். 01 .09. 2011  இறுதிக்கட்ட போரின் போது, போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுவது குறித்து விசாரரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசாங்கம் தெரிவித்த கருத்து ராசபட்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவே பதிலிளித்திருந்தார்.  ராசபட்ச ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட போரிலேயே குறைந்தளவான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டதாக  வீரவங்ச குறிப்பிட்டுள்ளார். அவர் இவ்வாறும் குறிப்பிட்டிருந்தார். இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இந்திய அமைச்சர் இலங்கை மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தெரிவித்துள்ளதால், இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் இலங்கைக்கு விசாரணை நடத்த முடியும். வமல் வீரவங்ச நடத்தும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இந்த இந்தியா மற்றும் இந்திய தலைவர்கள் தொடர்பான ஆவேச கருத்துக்கள் வீரவங்ச மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் காணப்படும் கடுமையான இந்திய எதிர்ப்பு வன்முறை அரசியல் மனநிலையை சுட்டிக்காட்டியுள்ளது.
 
 
அதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என இந்திய அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மேற்கொண்டு வரும் கோரிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் நண்பர் எனக் கருத்தப்பட்ட சக்திகளையும் ஒன்றிணைத்தே இந்த கோரிக்கை விடுவிக்கப்பட்டு வருகின்றன.
 
 
இதற்கு சிறந்த உதாரணம் ராஜபக்ஷ அரசாங்கத்தின் நீண்டகால நண்பரான இந்து பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியர் என். ராம் ஆகியோர் கொண்டுள்ள நிலைப்பாடுகளாகும். இலங்கையின் அதியுயர் விருதான இலங்கை ரத்னா விருது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்து பத்திரிகை ஆசிரியர் ராமுக்கு வழங்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் எதிர்பாளரான ராம் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நீண்ட போட்டி ஒன்றை எடுக்க சந்தர்ப்பம் கிடைத்ததுடன் அதனை அவர் தனது ராஜபக்ஷ ஆதரவான நபர் என்பதை வெளிகாட்ட பயன்படுத்திக்கொண்டார்.
 
 
எவ்வாறாயினும் கடந்த 16 ஆம் திகதி ராம் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில் தம்பி நிர்வாகத்தில் இருந்து வெளியில் பாய்ந்துள்ளார் என்ற தலைப்பிட்டிருந்தார்.  மகிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரான கோத்தாய ராஜபக்ஷவையே அவர் தம்பி என்று குறிப்பிட்டிருந்தார்.
 
 
யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தீர்க்கப்படாமல் இருக்கும் இரண்டு பிரதான விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளார்.  சிங்கள பெரும்பான்மை இனத்திற்கும், தமிழ் சிறுபான்மை இனத்திற்கும் இடையில் நல்லுறவுகளை ஏற்படுத்த முனைப்புகளை மேற்கொள்ளாமை அதில் முதலாவது விடயமாகும்.  யுத்ததின் இறுதிக்கட்டத்தில் அறிந்தே பொதுமக்களை கொலை செய்தமை, கைதுசெய்யப்பட்டவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்து, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பது அவர் சுட்டிக்காட்டியுள்ள இரண்டாவது விடயமாகும்.
 
 
இந்த விடயங்களை சிறந்த முறையில் செவிமடுப்பதற்கு பதிலாக ஜனாதிபதியின் சகோதரான கோத்தபாய ராஜபக்ஷ இந்திய தொலைக்காட்சியான ஹெட்லைன் டுடே வழங்கிய செவ்வியின் மூலம் தற்போது காணப்படும் நிலைமை மேலும் மோசமடையும் வகையில் பேசியிருப்பதாக ராம் கூறியுள்ளார். கோத்தபாயவை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என ராம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் இறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 
இந்தியாவின் ஹெட்லைன் டுடோ தொலைக்காட்சியிடம் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்த மூன்று விடயங்கள் தற்போது, வாதவிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் தற்போது அரசியல் தீர்வு யோசனையில் எந்த பயனுமில்லை. இலங்கையில் உள்ள அரசியல் அமைப்பின் படி மாத்திரம்தான் தீர்வுகணை வழங்க முடியும். 13வது அரசியல் அமைப்பு திருத்தமானது இலங்கையின் விருப்பத்திற்கு அமைய உருவாக்கப்படவில்லை என கோத்தபாய தெரிவித்திருந்த இந்த கருத்துக்கள் தற்போது, வாதவிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
 
 
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாதுகாவலராக செயற்பட்ட என்.ராமின் இந்த குற்றச்சாட்டு, இந்தியாவில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான ஏற்பட்டு வரும் நிலைப்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இலங்கை அரசாங்கத்துடன் தொடர் மோதல்களில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடும் நிலைப்பாடுகளை கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பான அவர் ஒருபோதும் விடுதலைப்புலிகளை மன்னிக்கவில்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இருந்த தமிழகத்தில் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாக எந்த குரலும் தற்போது எழுப்படுவதில்லை. இந்தியாவில் அடுத்த பொதுத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வர போகிறார்கள் என்பதை எதிர்வு கூறமுடியாது எனினும்  ஜெயலலிதாவின் பலம் அதிகரித்து அவர் மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பது நிச்சயமாகும்.
 
 
ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்பான நம்பிக்கை இழக்கப்பட்டிருப்பதையே இந்தியாவின் இடதுசாரி புத்திஜீவிகள் ஆதரவு வழங்கி வரும் இந்திய மாக்சிஸ கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்தும் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தெளிவுப்படுத்துகின்றன. ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்திற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் தெரிவித்திருந்தார். அதேவேளை இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியினா பாரதீய ஜனதா கட்சியும் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
 
 
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் செவ்வியை ஒளிப்பரப்பிய சில தினங்களுக்கு பின்னர், ஹெட்லைன் டுடே இலங்கையின் போர் குற்றங்கள் குறித்த தனது விவரணப்படம் ஒன்றை ஒளிப்பரப்பியது. இந்த தொலைக்காட்சியினால் வன்னி பிரதேசத்திற்கு ரகிசயமான முறையில் அனுப்பி வைக்கப்பட்ட பெண் ஊடகவியலாளர் எடுத்திருந்த பேட்டிகளை ஒளிப்பரப்பியது. போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தாம் பட்ட துன்பங்களையும் தாம் எதிர்நோக்கி வரும் அச்சங்கள் பற்றியும் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்தும், கொத்து குண்டுகள் வீசப்பட்டமை, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து விபரித்திருந்தனர்.
 
 
எனினும் இதற்கு பதிலளித்திருந்த இலங்கை அரசாங்கம் இந்த செயற்பாடுகள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தரப்பினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தது.
 
 
இதனை தவிர கடந்த காலங்களில் மேலும் இரண்டு சர்வதேச ஊடகங்கள் இலங்கை போரில் சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அக்கறை கொண்டு  போர் குற்றம் தொடர்பான விவாதத்தை நடத்தின. சுவிஸர்லாந்தின் பிரபல தொலைக்காட்சியான எஸ்பப் தொலைக்காட்சியும் நெதர்லாந்தின் உலக வானொலியும் இந்த விவாதங்களை நடத்தின. இறுதிக்கட்ட யுத்ததின் போது, மீறப்பட்ட மனித உரிமை சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் காட்டி வெற்றியான மனநிலையை புறந்தள்ளி விட்டு, சர்வதேச ரீதியில் அதற்கு எதிரான நிலைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
 
 
இலங்கை தொடர்பாக இந்தியாவில் அதிகரித்து வரும் அரசியல் நிலைப்பாடுகள் சர்வதேச சூழலில் அதிக முக்கியம் பெறும். இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த முடிந்த நாடு இந்தியா என்பதே இதற்கான காரணமாகும். இந்தியா மேற்குலக வல்லரவு நாடு இல்லை என்ற போதிலும்,  அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இடையில் அழுத்தங்களை கொடுக்க கூடிய நாடாகும். இலங்கை சம்பந்தமாக உண்மையான அழுத்தங்கள் இருப்பது இந்தியாவிடம் இருந்தே அன்றி, சீனாவிடம் இருந்து அல்ல.  பொருளாதார துறையில் வல்லரசமாக உருவெடுப்பதே தற்போதைய சீனாவின் ஒரே நோக்கம். வட்டிக்கு கடன் வழங்குவதை தவிர சீனா எந்த நாட்டிற்காகவும் தீர்மானகரமான அரசியல் தலையீடுகளை மேற்கொண்டதில்லை;. தனது நெருங்கிய நட்பு நாடுகளான லிபியா, சூடான், சிரிய போன்ற நாடுகளை சீனா கைவிட்டது.
 
 
இதனால், இலங்கை சம்பந்தமாக எதிர்க்காலத்தில் முக்கியமான சர்வதேச பாத்திரத்தை ஏற்க போவது இந்தியாவே.  யாதார்த்தமான ஒரு அரச நிர்வாகம் யுத்த வெற்றி என்ற நிலைப்பாட்டில் தன்னை தானே சிறைவைத்து கொள்ள கூடாது. உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதிகரித்து வரும் நிலைமைகளை கவனத்தில் கொண்டு சாதகமான பதில்களை வழங்க வேண்டும்.இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஜனநாயக அதிகரிக்கும் சுயாட்சி அரசியலின் தேவையை உணர்ந்து கொள்ள மறுப்பது போன்றே  போரில் மனித உரிமை மீறப்பட்டமை சம்பந்தமாகவும் அதிகரித்து வரும் சர்வதேச முக்கியமாக இந்தியாவில் ஏற்பட்டு வரும் அரசியல் நிலைப்பாடுகளை தம்மால் புரிந்துக்கொள்ள முடிந்துள்ளது என்பதை ராஜபக்ஷ அரசாங்கம் இதுவரை வெளிகாட்டவில்லை.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.