குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமரிடம், கூட்டமைப்பு முறைப்பாடு சீனஉளவு சேவைக் கப்பல்

01.09.2011-தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் டொக்டர் மன் மோகன் சிங்கிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.குறிப்பாக இலங்கையின் வடக்கு>கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றிக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு, அழுத்த கொடுக்கப்பட வேண்டுமென கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் குறித்த முறைப்பாடு பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டுனெவும் வலியுறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கின் சில பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதியில்லை எனவும், இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரதமரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய கடற்படையினரை வேவுபார்த்த சீன உளவு சேவைக் கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது.

இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளை வேவு பார்த்த சீன உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக இந்தியாவின் என்.டி.ரீ.வி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.மீன்பிடி ட்ரோலர் படகை போல் பயணித்த சீனாவின் உளவு சேவைக்கு சொந்தமான கப்பல் பல்வேறு தகவல்களை திரட்டிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தக் கப்பலை இந்திய கடற்படையினர் கண்காணித்ததையடுத்து அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தமானின் சிறிய தீவுகளுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபடும் தோரiணில் குறித்த கப்பல் தகவல்களை திரட்டிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த மாதத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படும் இந்த கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இத்தகைய படகொன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தமை தொடர்பாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.