குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

மலேசிய விமானத்தை ரசுய ஏவுகணையே வீழ்த்தியது விசாரணையில் தகவல்.

29.09.2016-மலேசிய ஏர்லைன்சு நிறுவனத்துக்கு சொந்தமான  எம்எச் 17 ரக விமானத்தை ரசுயாவிலிருந்து  உக்ரைனுக்கு தருவிக்கப்பட்ட ஏவுகணையே சுட்டு வீழ்த்தியது என்று விசாரணை முடிவில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

விண்ணுந்து-விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து கிடைத்த சில பாகங்கள் ரசுயாவின் தரையில் இருந்து வானத்தில் தாக்கும் பக் (BUK) ஏவுகணையின்  பாகங்களுடன்  பொருந்துவதாகவும் கிடைக்கப்பெற்ற ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில்  மலேசிய  விமானமானது ரஷ்யாவின் பக் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் நெதர்லாந்து தேசிய புலனாய்வுத்துறை தலைவரும் விமான விபத்து விசாரணை அதிகாரியுமான வில்பர்ட் பவுலிசென் தெரிவித்துள்ளார்.

உக்ரெய்னின் சுனிசுனி கிராமத்துக்கு  தெற்கே  6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள  விவசாய நிலப்பரப்பிலிருந்து  ஏவுகணை செலுத்தி மூலம் எறிகணை ஏவப்பட்டதாகவும் தாக்குதலுக்கு பின்னர்  ஏவுகணை மீண்டும்  செலுத்தி ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமானம் தாக்குதலுக்கு இலக்கான வேளையில் குறித்த பகுதி ரசுய ஆதரவு ஆயுததாரிகளின்  கட்டுப்பாட்டில்  இருந்தது  என்றும் அவர்  கூறி உள்ளார்.

நெதர்லாந்து  தலைநகர் அமசுடர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு  கடந்த 2014 யுலை மாதம் 17ம் தேதி  புறப்பட்ட விமானம் உக்ரைன் வான் பரப்பில்  சுட்டு வீழ்த்தப்பட்டதில் 15 விமான பணியாளர்கள் உட்பட அதிலிருந்த  298 பேர் உயிரிழந்திருந்தனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.