குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 18 ம் திகதி செவ்வாய் கிழமை .

கைத்தொழில் முன்னேற்றம் கடுகளவுமில்லை மாகாணசுயாட்சி மருந்திற்குமில்லைவடகிழக்கிணைப்பு வதந்தியாயுமில்ல

வடகிழக்கிணைப்பு வதந்தியாயுமில்லை

மாகாணசுயாட்சி மருந்திற்குமில்லை

முதலீட்டு திட்டங்கள் முடமாயுமில்லை

திட்ட முன்மொழிவுகள் வழிமொழியவில்லை

தொழில் திட்டங்கள் தொடங்கவே இல்லை 

கைத்தொழில் முன்னேற்றம் கடுகளவுமில்லை

வேலைவாய்ப்புகள் வாய்க்கவே இல்லை

விவசாயம் செழிப்புற செய்திடவில்லை

சேவைகள் சீராக செய்குவாரில்லை

கல்வியில் உயர்ச்சி கணக்கிலுமில்லை

சுகாதாரம் சீராக இயங்கவுமில்லை

எண்ணை நீருக்கு தீர்வுவேதுமில்லை

மலக்கசிவு மாசுக்கு மாற்றுமில்லை

மருதங்கேணியில் குடிதண்ணீரில்லை


பொருண்மத்தி நிலையம் போட்டபடி இல்லை

இரணைமடுத்தண்ணீர் இப்போதும் இல்லை

முப்பதாயிரம் இளையோர்க்கு வேலையில்லை

அறுபத்தையாயிரம் வீட்டுக்கு அருகதையில்லை

அங்கவீனர்களுக்கு நிவாரணமில்லை

அனாதையானோருக்கு ஆறுதலில்லை.

சுற்றுலாத்துறை விருத்தியாய் இல்லை

திணைக்களம் ஒன்றும் வினைத்திறனாயில்லை

அபிவிருத்தியும் அழகும் நகரிலுமில்லை


கைத்தொழில் பேட்டைகள் இயங்கவுமில்லை

புதிய பேட்டைகள் தொடங்கவுமில்லை

வீதிப்புனரமைப்பு அகண்டதாயில்லை

மீள்குடியேற்றம் நடந்ததாயில்லை


குடியேறியவர்க்கு வீடுகள் இல்லை

குடிதண்ணீர்க்கிணறுகள் இல்லை

கழிப்பிடமும் காவலும் இல்லை

வாழ்வாதார வசதி இல்லை

வயிறார சோறுண்ண கறிபுளி இல்லை


அரசியல்கைதிகள் விடுதலை இல்லை

விடுதலைபெற்றவர்க்கு பாதுகாப்பில்லை

மெதுவிசமேற்றல் விசாரணையில்லை

தன்னிறைவு பொருளாதாரம் பொறுப்பாயில்லை

விவசாய பொறிமுறைகள் சிறப்பாயில்லை

இராணுவ வெளியேற்றம் படியளவுமில்லை

காணியை வெளியாக்க முடியவுமில்லை

வெளிப்படைத்தன்மை எதிலுமில்லை

தமக்குள் ஒருமித்த கருத்துமில்லை

தட்டிக்கேட்க ஒருதருமில்லை

நிறையக் கேள்விக்கு பதிலுமில்லை.

குறையைக்கேட்க மனதுமில்லை.

செய்தக்க செய்யாமையானும்

கெடும்.//

Via Ramasamy Rajeswaran