குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

மரத்திற்குகீழ் மக்கள்பசியுடனிருக்க புலம்பெயர் தமிழர்களுடன் என்ன பேச்சு?தமிழர்அழிவுப்போர்தொடர்....

 30.08. 2011புலிகளை அழிக்கும்போர் நிறைவு தமிழர்களை அழிக்கும்போர் தொடர்கிறது-மரத்திற்குகீழ் மக்கள்பசியுடனிருக்க புலம்பெயர் தமிழர்களுடன் என்ன பேச்சு? போர் முற்றிலும் முடிந்துவிட்டதான போர்வையில் பெரும்பாலானவர்கள் போருக்குப் பிந்தைய நிலவரம், போருக்குப் பிந்தைய அரசியல், போருக்குப் பிந்தைய புனர்வாழ்வு, போருக்குப் பிந்தைய அபிவிருத்தி என்று போருக்குப் பிந்தையதான விடயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஆனால் உண்மையில் போர் முடிந்து விட்டதா என்பது ஒரு முக்கியமான வினா? இந்தக் கேள்வியை எழுப்பிப் பார்த்தாக வேண்டிய அவசியம் நம்முன் உள்ளது.
 இந்தக் கேள்வியை எழுப்பாமல் இலங்கையின் சிறுபான்மை இனமக்களின் எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது ஏன் இலங்கையின் எதிர்காலத்தைப் பற்றியோ பேசிவிட முடியாது.
 
இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை அவர்களை ஆயுத ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது என்பது உண்மை தான். அதில் யாருக்கும் எதுவித சந்தேகமுமிருக்கப் போவதில்லை.
 
ஆனால், இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு மேல் இலங்கை அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்ட போர் முடிவுக்கு வந்துவிட்டதா என்றால் இல்லை என்று தான் நிலைமைகள் உணர்த்துகின்றன.
 
அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் ஏன் தெற்கிலும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போர் முடிவுக்கு வந்து வி;ட்டது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை.
 
இறுதியாகக் கிடைத்த இரண்டு தகவல்களை மட்டும் பார்ப்போம்.
முதலாவது நல்லூர் பிரதேச செயலகப்பிரிவில் சீவிக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஒரு விண்ணப்பத்தை விநியோகித்திருக்கிறது.
 
அரசால் விநியோகிக்கப்பட்டுள்ள அந்த விண்ணப்பத்தில், காணியின் விபரம், அதன் சொந்தக்காரர் யார், அதன் பரப்பளவு, அந்தக் காணி பதிவு செய்யப்பட்ட திகதி போன்ற விபரங்கள் கோரப்பட்டிருக்கின்றன.
 
இலங்கையின் அரசியலமைப்புச்சட்டப்படி காணிகளைப் பதிந்து கொள்ள காணிப்பதிவுத் திணைக்களம் ஒன்று சட்ட ரீதியாக இயங்கி வருகிறது. எல்லாக் காணிகளது பதிவுகளும் மாற்றங்களும் விற்றல் வாங்கல் நடவடிக்கைகளும் அங்கு பதிவுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் செயற்படுத்தப்படாத அரசியலமைப்புக்கு முரணாக இந்தக் காரியத்தில் அரசாங்கம் இறங்கி இருக்கிறது.
 
நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்களுடைய காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கத் தயாராகி வருவதற்கான முதற்படி இதுவென்ற அச்சம் தமிழ் மக்களிடையே பொதுவாக எழுந்திருக்கிறது.
 
ஏற்கெனவே வன்னியில் மக்கள் குடியிருந்த நிலப்பிரதேசங்கள் அம்மக்களின் மீள் குடியமர்வுக்கு வழங்கப்படாமல் அரசாங்கத்தின் கையகல்வுக்கு ஆளாகி இருக்கிறது.
 
வடமராட்சி முதல் திருமலை வரையான கடற்கரைப்பகுதிகளும் அம்மக்களின் மீள் குடியமர்வுக்கோ அல்லது அவர்களது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடிக்கோ பெருமளவில் அனுமதிக்கப்பட்டதாக இல்லை. அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் மீனவர் மேலாக கட்டுப்பாடுகள் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவதாக இல்லை.
 
பல இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் எவ்விதத் தங்கு தடங்கலுமின்றி இயல்பாக நடந்தேறி வருகின்றன.  கிழக்கிலும் பாசிக்குடா முதல் பல பிரதேசங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருப்பது வடக்கின் நிலைமைக்கு எவ்விதத்திலும் கிழக்கு வேறுபட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. கிழக்கில் முஸ்லிம் மக்களுடைய ஏராளமான விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பது பற்றி முஸ்லிம் அரசியல் வாதிகள் வாயே திறப்பதில்லை.
 
இப்போது அம்பாறையின் பாணமை பிரதேசத்தில் பெருமளவான முஸ்லிம்களதும் சிறியளலான தமிழ் மற்றும் சிங்கள மக்களுடையதுமான 850 ஏக்கரை அரசாங்கம் பலவந்தமாகச் சுவீகரித்திருக்கிறது.
 
புதிய கடற்படை தளம் ஒன்றுக்காகவே இந்த 850 ஏக்கரும் சுவீகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செங்கமுவ படைப்பிரிவின் 231 பிரிகேட்டின் தளம் அங்கு அமைக்கப்படவிருக்கிறது. விவசாயத்தையே அடிப்படைத் தொழிலாகக் கொண்டிருந்த மக்கள் இப்போது தமது வயல்களுக்குச் செல்ல முடியாதபடி பொலிஸாரால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
அரசாங்கம் சொல்வதன்படி போர் முடிவடைந்து இரண்டு வருடங்களான பின்னர் 850 ஏக்கரில் கடற்படைத் தளம் அமைக்க வேண்டிய தேவை தான் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் அப்பிரதேசக்கிராமவாசி ஒருவர்.
 
135 குடும்பங்களைக் கொண்ட அக்கிராமத்தில் மூன்றிலிரு பகுதியினர் தற்போது காணி எதுவுமின்றி நிர்க்கதியாகியுள்ளனர். அவர்களுக்காகக் குரலெழுப்பக் கூடிய எந்த அரசியல் தலைமையும் தற்போது இல்லை. அவர்கள் நிர்க்கதியாவது தொடர்கிறது.
 
இங்கு அண்மையில் நடைபெற்ற இரு சம்பவங்களை மட்டுமே எடுத்துக்காட்டினோம். அரசாங்கம் அம் மக்கள் மேல் தொடுத்திருக்கும் போரின் ஏனைய பல அம்சங்களை விரிவஞ்சி இங்கு தவிர்க்கிறோம்.
 
இவ்வாறு சிறுபான்மை இன மக்களுக்கெதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் வடக்கு கிழக்கு எங்கணும் தொடரும் நிலையில், அவர்களுடைய எதிர்ப்பு வலுவிழந்திருக்கும் ஒரு நிலையில் அம் மக்களுக்கெதிரான போh: முடிந்து விட்டதாகப் பாவனை பண்ணி போருக்குப் பிந்தைய அரசியல் பேசுவதை என்னவென்பது?

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயார்பிரதமர்-மரத்திற்குகீழ் மக்கள்பசியுடனிருக்க புலம்பெயர் தமிழர்களுடன் என்ன பேச்சு?
30.08. 2011தேசிய அரசாங்க மொன்றை உருவாக்குவதன் மூலம் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையில்
தேசிய அராசங்கமொன்றை அமைப்பதற்கு தயார் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தால் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மூன்று தசாப்த காலமாக யுத்தம் இடம்பெற்று வந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய அரசாங்கமொன்று அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் இதுவரையில் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித அழைப்பையும் விடுக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
 
தேசிய பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தொடர்பில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதன் மூலம் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் வலுவான பிணைப்பை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் இதுவரையில் அராசங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.
 
எனினும், பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பிலான கருத்துக்களை முன்வைத்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அந்தக் கருதுகோளுக்குப் பின்னால் நமது ஊடகவியலாளரும் அரசியலாளரும் புத்திசீவிகளும் செல்வதை எந்த வார்த்தைகளைக் கொண்டு வர்ணிப்பது?

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.