குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

அமெரிக்காவிடம் சரணடைகிறார் சிறிலங்கா அதிபர்சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதிக்குப் பேரிடி

29.08.2011-போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் விடயத்தில் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவையும் அணுக வேண்டும் என்று நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராயாங்கத் திணைக்கள உதவி செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏனைய நாடுகள் விடயதில் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, சிறிலங்கா விடயத்தில் மாறுபாடான கொள்கையைக் கடைப்பிடித்து தனிமைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது.

எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே தம்மையும் நடத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவிடம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

நாளை கொழும்பு வரும் றொபேட் ஓ பிளேக்கிடம் இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க விருப்பம் வெளியிட்டிருந்தார்.

இந்தச் சந்திப்பு நாளை நடைபெறும் என்று கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையை முன்வைப்பதற்காகவே பிளேக்கைச் சந்திக்க மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக அமெரிக்காவுடன் மோதல் போக்கை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது சற்று இறங்கிப் போக முடிவு செய்துள்ளதையே இது வெளிப்படுத்துவதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிளேக் வலியுறுத்தி வந்தநிலையில், கடந்தமுறை கொழும்பு வந்த அவரை சிறிலங்கா அதிபர் சந்திக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு நெருக்கடிகளை அதிகரித்து வரும் நிலையிலேயே, ஏனைய நாடுகளைப் போன்று தம்மையும் அணுகுமாறு அமெரிக்காவிடம் சரணடைய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சிறிலங்காவினால் ஏற்றுமதி செய்யப்படும் 300 மில்லியன் கிலோ தேயிலையில், 78 வீதமானவற்றை ஈரான், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளே வாங்கி வந்தன.

ஆனால் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிறிலங்காவில் இருந்து 55 மில்லியின் கிலோ தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தேயிலை ஏற்றுமதியில் 30 வீதம் மட்டுமேயாகும்.

அரசியல் நெருக்கடிகளால் லிபியா, சிரியா போன்ற நாடுகளின் பிரதான துறைமுகங்களுக்கு தேயிலையை அனுப்ப முடியாத நிலை உள்ளதாக கொழும்பின் முன்னணி தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரான மலிக் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடையும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஈரானில் இருந்து ஏற்றுமதியாளர்கள் தமக்கான கொடுப்பனவை உள்ளூர் வணிக வங்கி ஒன்றின் ஏற்பாட்டில் வேறு வழிமுறை ஒன்றின் ஊடாகவே பெறுவதாகவமு அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவின் நான்காவது மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதி நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும், ஆண்டுதோறும் 10 மில்லியன் கிலோ தேயிலை அனுப்பப்படும் லிபியாவின் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா தேயிலை சபையின் பணிப்பாளர் ஹசித டி சில்வா தெரிவித்துள்ளார்.

போசூறாவளியால் பிளேக்கின் கொழும்புப் பயணம் தடைப்பட்டது - ஜெனிவா கூட்டத்துக்கு முன் வருவார்?

சிறிலங்காவுக்கு இன்று பயணத்தை மேற்கொள்ளவிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக் கடைசி நேரத்தில் தனது பயணத்தை இடைநிறுத்தியுள்ளார்.

அமெரிக்காவைத் தாக்கியுள்ள சூறாவளியினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை அடுத்தே அவர் சிறிலங்காவுக்கான பயணத்தை பிற்போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளேக்கின் பயணம் பிற்போடப்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள அமெரிக்கத் துதரகம் உறுதி செய்துள்ளது.

ஆனால் அவர் சிறிலங்காவுக்கு எப்போது வருவார் என்ற தகவலை அது வெளியிடவில்லை.

இன்று தொடக்கம் புதன்கிழமை வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவிருந்த பிளேக், யாழ்ப்பாணத்துக்குச் செல்லவும், சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரைச் சந்திக்கவும், அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவும் திட்டமிட்டிருந்தார்.

பிளேக்கின் வருகை சிறிலங்காவுக்கு அழுத்தங்களை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பயணம் பிற்போடப்பட்டுள்ளது சிறிலங்கா அரசுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

எனினும் அவர் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் செப்ரெம்பர் 12ம் நாள் ஆரம்பமாவதற்கு முன்னதாக கொழும்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.