குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

பகைவர் யார்?இந்து சமஸ்கிருத ஆண்டு பிறப்பை தமிழ்ப்புத்தாண்டு என்போர்.

 28 .08. 2011   தமிழ்ப் பகைவர் செய்த பிழை திருத்தி சித்திரை முதல் நாளே தமிழர் தம் புத்தாண்டு என தீர்ப்பெழுதிய தீர்க்க தரிசியே! இரண்டாம் சுதந்திரத்தை இம்மண் ணுக்குப் பெற்றுத் தந்த வாழும் ஜான்சி ராணியே! வல்லமைகளின் குவியலே!... இத்தியாதி இத்தியாதி முழுப் பக்க விளம்பரம் ஒன்று இவ் வார குமுதம் ரிப்போர்ட் டரில் வெளியாகியுள்ளது. விளம்பரம் கொடுத் திருப்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினரும்கூட, எதற் காக அவர் பெயரைச் சொல்லி விளம்பரப்படுத்த வேண்டும்?
பிரபவ தொடங்கி அட்சயவில் முடியும் சமஸ்கிருத பெயர்களை உடைய சித்திரைப் பிறப்பு தமிழருக்கு உரியதாம்.

இந்த சமஸ்கிருத ஆண்டு பிறப்பைப்பற்றி தை பிறந்தால் வழி பிறக் கும் என்றமுறையில் உண் மையான தமிழ்ப் பேரறி ஞர்கள் கூடி முடிவெ டுத்த தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற தி.மு.க. அரசின் சட்டத் திருத்தம் தமிழ்ப் பகைவ ரால் கொண்டு வரப்பட்ட தாம்!

பார்ப்பனத் தலை மையை ஏற்றதால் நம் தமிழர்கள் புத்தி எவ்வளவு கேவலத்தில் தள்ளாடு கிறது பார்த்தீர்களா?

அதுவும் அண்ணா வின் பெயரைக் கட்சி யில் வைத்துக் கொண் டுள்ளவர்கள் திராவிட அடையாளத்தை கட்சியின் பெயரில் பொறித்துக் கொண்ட வர்கள் எவ்வளவு பெரிய திரிபுவாத நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள்!

ஆரிய மாயை நூலில் - (நூல் என்றால் பூணூல் அல்ல புத்தகம்) அறிஞர் அண்ணா மிக அழகாகவே படம் பிடித் துக் காட்டினாரே -

போதை ஏறியவன், கல் தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும், திராவிட இனத்திடையே கருத்திலே போதை மூண் டிடச் செய்து விட்டுப் பிறகு கீழே உருட்டினர். திராவிடன் ஆரிய வீரத் தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கி ஆனான். சோர்ந்தான், சுருண்டான்.

இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியா தாரே என்றார் அண்ணா.
இன்று நடப்பதை தொலைநோக்கோடு அண்ணா படம்பிடித்து விட்டாரோ!

அந்த அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சியே அண்ணாவின் எண்ணத்துக்கு மாறாக ஆரியக் கருத்துப் போதை ஏறி, பகைவரை பாச முள்ள நண்பர் என்றும், நண்பரை நயவஞ்சகப் பகைவர் என்றும் கூறும் நிலை ஏற்பட்டு விட்டதே.

அய்யகோ வெட்கக் கேடு!

- மயிலாடன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.