குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பெருந்தொகையான மனித உடல் எச்சங்கள் மற்றும் எலும்பு கூடுகள் மீட்பு:-

28.08. 2011  யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அருகில், புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாராக் குழியை தோண்டும் போது, பெருந்தொகையான மனித உடல் எச்சங்கள் மற்றும் எலும்பு கூடுகள் தோன்றியுள்ளன. இதனையடுத்து, இது குறித்து ஊர்காவற்துறை காவற்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. காவற்துறையினரின் அறிவிப்பின் பின்னர், பிரதேசத்திற்கு சென்ற ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி திருமதி மஹாதேவா விசாரணைகளை நடத்தியுள்ளார்.
 
யாழ் சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன் சம்பவ இடத்திற்கு சென்று சோதனைகளை நடத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த இடத்தில் 10 பேரின் எலும்பு கூடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன்னர், இந்த இடத்தில் அவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சோதனையில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட இடத்தில் ஆடைகள் எதுவும் காணப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
யாழ்ப்பாணம் 18 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. அதில் இருந்து இதுவரை காலமும், யாழ்ப்பாணம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 
இதேவேளை எழும்புக் கூடுகள் மீட்கப்பட்ட பிரதேசத்தில் முன்னர் கடற்படைமுகாம் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.

ஜயலலிதா - சுஷ்மா சுவராஜ் - மீரா குமார் ஆகியோரை இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளது:-
28.08.2011  தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், இந்திய நாடாளுமன்ற சபாநயகர் மீரா குமார் ஆகியோரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
 
 
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்து, அடுத்த மாதம் 17 ஆம் திகமுதல் 27 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க எண்ணியிருந்த போதிலும், அந்த திகதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு கிழக்கில் 90000 பெண்கள் குடும்பப் பராமரிப்பாளர்களாக வாழ்கின்றனர்
28.08. 2011  வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 90000 பெண்கள் குடும்பப் பராமரிப்பாளர்களாக வாழ்கின்றனர் என சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
 
பெண்களை மையப்படுத்தியே இந்த குடும்பங்கள் வாழ்வாதாரம் அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
கடந்த சில தசாப்தங்களாக பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நிலைமை உயர்வடைந்துள்ளது.
 
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
 
பெண்களை மையப்படுத்திய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சுயதொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற போர் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 49000 பெண்களும், வடக்கு மாகாணத்தில் 40000 பெண்களும் கணவரை இழந்து வாழ்கின்றனர்.
 
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.