குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்மத்திய அரசும், தமிழக அரசும் அனைத்து முயற்சிகளும்எடுக்க

27.8. 2011ராயீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசும், தமிழக அரசும் அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.காங்கிரசு கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்னையில் அக்கறையோடு 3 உயிர்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 30.000-40.000 ஒரு இலச்சம் பேர் இறந்த போதும் இந்த அம்மா இருந்தார் இந்த மூவருக்காய் இறங்கிவருவாரா அய்யா?  சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரைத் தூக்கிலிட உத்தரவு வந்துவிட்டது குறித்து சில நாள்களுக்கு முன் செய்தியாளர்கள் என்னிடம் கேட்டனர். தூக்குத் தண்டனை என்பதே கூடாது என்று பல ஆண்டுகளாகச் சொல்லி வரும் கருத்தினை வலியுறுத்தியதோடு, அந்தக் கருத்து இந்த மூவருக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
 
 இந்த வாலிபர்கள் மூவருமே இருபதாண்டுகள் சிறையிலே இருந்துவிட்டார்கள். அவர்கள் செய்தது குற்றமே ஆயினும் - அவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையிலே இருந்ததை மனதிலே கொண்டு - மனிதாபிமானத்தோடு - ''மறப்போம், மன்னிப்போம்'' என்ற நிலையில் - உலகமெங்கும் உள்ள தமிழர்கள் எல்லாம் விடுக்கிற வேண்டுகோளினை ஏற்று - தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களைக் காப்பாற்ற நம்மால் முடிந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகிறது.
 
முடிவெடுக்க இன்னும் சில நாள்களே இருக்கின்ற நிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் இந்தப் பிரச்னையிலே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, இந்த மூவரின் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்திட வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.