குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

துாக்குதண்டனை மூவருக்கல்ல தமிழினத்திற்கு மோட்டுத்தமிழராக ஏமாந்தவராக உலகத்தமிழர்கள்.மு.வா.தமிழரை ..

 27.08.2011.த.ஆ.2042-துாக்குதண்டனை மூவருக்கல்ல தமிழினத்திற்கு  மோட்டுத்தமிழராக  ஏமாந்தவராக உலகத்தமிழர்கள்.மு.வா.தமிழரை காப்பாற்றாதவர்கள் இவர்களைக்..... தீர்க்கப்பட்ட குற்றச்சாட்டுக் காரர்களைக் காப்பாற்றுவார்களா? உலகம் எங்கும் தமிழர்கள் உறங்குகிறார்கள் இனம் மொழி என்ற ஒன்று பற்றியே  சிந்திக்காது வாழ்கின்றார்கள். அந்தவிதத்தில் நாம் மூடர் முழுக்குருடர்  செவிடர்.  எங்களுக்குள் பேராசிரியர்கள் கணிதமேதைகள் சட்டவல்லுணர்கள்  இருந்ததாக நாம் நம்புவது? இனத்தின்நிலை மிகவும் கேவலமாக இருக்கிறது.  இந்தஇனத்திற்கு முழு உலகிலும் உரிமைமறுக்கப்பட்டிருக்கிறது இது தெரியாமல் நாம் உலகில் உயர்வாய் வாழ்வதாக  எண்ணி ஏமாந்து கொண்டிருக்கும் ஒரே இனம் நான் பிறந்ததமிழினம்.இந்த விழிம்பிலும் வித்தைகாட்டும் தமிழ் ஊடகக்காரர். ஆழமில்லாத அரக்கர்கள்.

முதலாம் துாக்கு  பூநகரிநாச்சிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய கடற்படைத் தளத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராயபக்ச நேற்று திறந்தது.
 
இரண்டாம் துாக்கு இவ்வளவு தமிழ்ஊடகங்களும் இதன் உருவாக்கத்தையும் நோக்கத்தையும் உணராமை.

மூன்றாம் துாக்கு தேர்தலில் தமிழர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி என்ற மாயையில் நீந்துவது. மற்ர அனைத்திலும் தாம் தோல்வி என்பதை உணராமை.

கிறிசுமனிதர்பற்றி பாராளுமன்றில் பேசியது பெரியவிடயமாக்கப்ட்டிருக்கிறது. அதே தொகுதியில் பல மர்மநோக்கங்களோடு உருவாகிய கடற்படைத்தளம் பற்றியும் அதன்திறப்பு விழா பற்றியும் எதுவும் தெரியாதவர்களாக நாங்கள்.

எதைத் துாக்கிப்பிடிப்பது என்று தெரியாத மோடர்கள் நாங்கள் கிறிசு மனிதர்பற்றிப்  பாராளுமன்றில் பேசிக் கொண்டிருக்கம் போதே அதே தொகுதியில் கடற்படைத்தளம் திறக்கப்பட்டமை.  ஏமாந்து விட்டோம்  ஏமாற்றுகின்றோம் என்பதை உணராது இருக்கின்றோம்.

 தமிழ் உயிர்அழிவில் ஊர்அழிவில் சிலரையும் சில நிறுவனங்களையும் வளர்க்கின்றோம் என்பதை தமிழர்கள் உணராது இருக்கின்றோம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.