குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பூநகரிநாச்சிக்குடாவில் 752 ஏக்கரில் பாரிய நிரந்தர கடற்படைத்தளம் – கோத்தாபய திறந்து வைத்தார்

 26.08.2011-த.ஆ.2042-பூநகரிநாச்சிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய கடற்படைத் தளத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராயபக்ச நேற்று திறந்து வைத்துள்ளார்.தமிழர்களைவிடவும் இந்தியாவே யோசிக்கவேண்டும். தமிழகத்திற்கு அண்மையாக இருக்கும் தளம்என்பது குறிப்பிடத்தக்கது. பூநகரிமக்களுக்கு அடிப்படைவசதிகள் இல்லை. ஆனால் கடற்படைத்தளமா? எங்கிருந்துவந்தபணம்? நாச்சிக்குடா முசுலீம்கள் நிலை அவலம்.றிசாட் பெளதீன் அரசுக்கு ஆதரவுவழங்கி கண்டநன்மை இதுதானா?   சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் மன்னார்-பூநகரி வீதிக்கு நெருக்கமாக இந்த பாரிய கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு பிராந்திய கடற்படைத் தலைமையகமாக எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படவுள்ள இந்தப் பாரிய தளத்தை அமைப்பதற்காக 752 ஏக்கர் நிலத்தை சிறிலங்கா கடற்படையினர் சுவீகரித்துள்ளனர்.


பூநகரிநாச்சிக்குடா கடற்படைத்தளத்தில் சிறிலங்கா கடற்படையின் தரை மற்றும் கடல் நடவடிக்கைப் பிரிவுகள் நிலைகொள்ளவுள்ளன.

இந்தப் பகுதியில் கடற்பகுதிக் கண்காணிப்பை மட்டுமன்றி கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பையும் சிறிலங்கா கடற்படையினரே பொறுப்பேற்கவுள்ளனர்.

பூநகரிநாச்சிக்குடா தளத்தை கன்டோன்மென்ட் தளமாக மாற்றியமைக்கவுள்ளதாகவும், மன்னாரில் இருக்கும் வடமேற்கு பிராந்திய கடற்படைத் தலைமையகத்தை இங்கு மாற்றவுள்ளதாகவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கரையோரப் பகுதிகளில் சிறிலங்கா கடற்படை மேலும் பல முகாம்களை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பூநகரிநாச்சிக்குடா கடற்படைத் தளத் திறப்பு விழாவில் சிறிலங்கா கடற்படை தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க, கூட்டுப்படைகள் தளபதி எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக உள்ளிட்ட படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.