குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான நிலைப்பாட்டை தற்போதைக்கு வெளியிடப் போவதில்லை - இந்தியா

26 .8.2011    இது தான் நரித்தனத்தின் உச்சம்.  போர்க்காலம் வியேநம்பியார் பாக்கீன் மூன் அய்.நா முடக்கம் இதற்கெல்லாம் யார்காரணம்.?ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான நிலைப்பாட்டை தற்போதைக்கு வெளியிடப் போவதில்லை என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் எந்தவொரு நிறுவனத்திலும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக பேசப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய நிறுவனங்களில் நிபுணர் குழு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் அது தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிபுணர் குழு விவகாரம் உத்தியோகபூர்வமாக பேசப்படும் வரையில் இந்தியா காத்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பாராளுமன்றில் ஆற்றிய உரையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.