குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

அவசரகாலசட்டம்நீக்கம் தீமைகள்தமிழர்களுக்கு நிகழ்திருந்தாலும் அவசரகாலச்சட்டத்தை நீக்கியதற்குபாராட்டு

  26.08. 2011  இலங்கையில் தற்போது அமுலிலுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சனாதிபதி மகிந்த ராசபட்ச பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு தீமைகள் நிகழ்திருந்தாலும் அவசரகாலச் சட்டத்தை நீக்கியமைக்கு நன்றி குமரிநாடு.நெற் சர்வதேச நாடுகளின் அழுத்தம்- அவசரகால சட்டம் நீக்கம்- மகிந்த நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!

அவசரகால சட்டம் நீக்கப்படுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்ச இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.
மாதாமாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நீடிக்கப்பட்டு வந்த இச்சட்ட மூலம் இன்றிலிருந்து நீக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
அவசரகால சட்டத்தை நீக்கும் பட்சத்திலேயே இலங்கைக்கான கடன் உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என அண்மையில் அமெரிக்க கொங்கிரஷ் அறிவித்திருந்தது. அதேபோல மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அவசரகால சட்டத்தை நீக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்தி இருந்ததுடன் அவசரகால சட்டம் நீக்கப்படும் பட்சத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஏற்றுமதி வரிச்சலுகையை நடைமுறைக்கு கொண்டு வரமுடியும் என தெரிவித்திருந்தது.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையிலும் அவசரகால சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும் இல்லையேல் இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்பட நேரிடும் என எச்சரித்திருந்தது.
அது மட்டுமன்றி மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட மனித உரிமை அமைப்புக்களும் அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் இதனை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தன.
சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா அதிபர் மகிந்த ராசபக்ச இன்று அவசரகால சட்டத்தை நீக்குவதாக அறிவித்திருக்கிறார்.
எனினும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே சனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், சாதாரண சட்டத்தின் அடிப்படையில் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தாம் திருப்பியடைவதாகவும் இதனால் அவசரகாலச் சட்டத்தை நீக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராயபடசச இதன்போது தெரிவித்தார்.  

இதேவேளை, அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கசனாதிபதி மகிந்த ராயபக்‌ஷவிற்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் நீக்க நடவடிக்கை எடுத்தமையானது நாட்டில் சனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனினும், அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதன் மூலம் மாத்திரம் சனநாயகத்தை உறுதி செய்ய முடியாது எனவும், அதற்காக எடுக்க வேண்டிய சட்ட திட்டங்கள் அநேகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம், எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது – சனாதிபதி

 அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என சனாதிபதி மகிந்த ராசபட்ச பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

 

ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றில் நீடிக்கப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம்,  இனி வரும் காலங்களில் நீடிக்கப்பட மாட்டாது என சனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் சனாதிபதி மகிந்த ராயபட்ச இன்று பாராளுமன்றில் விசேட உரையொன்றை சற்று முன்னர் நிகழ்த்தினார்.

 

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்கான அவசியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவசரகாலச் சட்டத்தின் அவசியம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எதிர்காலத்தில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

 

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்கள் அடக்கப்படவில்லை –சனாதிபதி

 

அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவில்லை என சனாதிபதி மகிந்த ராயபட்ச தெரிவித்துள்ளார்.

 

சில ஊடகங்கள் அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனப் பாங்கான செய்திகளை வெளியிட்டு வந்ததாகக் குறிப்பிட்டு;ள்ளார்.

 

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு அவசரகாலச் சட்டம் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அவசரகாலச் சட்ட ,ல்லாதொழிப்பு குறித்து பாராளுமன்றில் ஆற்றிய உரையின் போது அவர் ,தனைக் குறிப்பிட்டுள்ளார்.

  2ஆம் இணைப்பு:- அவசரகாலச் சட்டத்தை நீக்கும் யோசனையை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்
 
இலங்கையில் தற்போது நடைமுறையில் அவசரகால சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் சனாதிபதி மகிந்த ராயபட்ச இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை மேற்கொள்வார் என இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
1971 ம் ஆண்டு இலங்கiயில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தொடாந்து அவசரக்காலச் சட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
இதன் பின்னர் அந்த சடட்ம் நீக்கப்பட்ட நிலையியல் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லச்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
 
தற்போதைய நிலையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து  விட்டதனாலும், இலங்கையில் விடுதலைப் புலியினர் ஒழிக்கப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் இடம்பெறாததினால் அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
 
அதுமட்டுமல்லாது மனித உரிமை அமைப்புமற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.
 
இவ்வாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அவசரகால சட்டத்தை நீக்காத விடத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலைகையை நீக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிபந்தனை விதித்தது.
 
இதனை இலங்கை அரசு பொருட்படுத்தத்தாதை அடுத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சபை நிபுணர் குழு அறிக்கையில் கூட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
 
இக்காலகட்டத்தில் இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை சர்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையென கூறியிருந்தது. பிற்காலத்தில் சனல் 4 ஆவணப்படத்திலும் கூட இலங்கை அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
 
தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தன.
 
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் அவசரக்காலச்சட்டத்தை நீக்கவுள்ளதாகவும், இதனை இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவிக்ககூடும் எனவும் த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.