குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

ராயபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்! இந்திய லோக்சபா விவாதத்தில் திமுக, அதிமுக

26.08.2011-த.ஆ.2042-ஒப்புக்கு ஓம் என்று விவாதமா?இந்திய லோக்சபாவில் இன்று பெரும் இழுபறிக்குப் பின்னர் அரை மனதாக இலங்கைப் பிரச்சினை குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்டு பாயக, அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் பேசினர்.திமுக எம்பி் பாலு பேசுகையில், இனவெறி படுகொலைகளை நடத்திய ராயபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

பொஸ்னியாவில் இனவெறிப் படுகொலைகளை நடத்திய அந்த நாட்டு இராணுவத் தளபதியை சர்வதேச கோர்ட் தண்டித்துள்ளது. அப்படி இருக்கையில் அதேபோன்ற தண்டனையை ஏன் ராயபக்சவுக்குத் தர முடியாது.

ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளைக் கூட இலங்கை அரசு தரவில்லை. முகாம்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டனர். இன்னும் கூட அவர்களுக்கு விடிவு பிறக்கவில்லை. இதை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையே சொல்கிறது.

முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கும், சித்திரவதைக்கும் உள்ளானார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிப்புக்குள்ளானார்கள்.

இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு சர்வதேச கோர்ட்டில் கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும். தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கையை இந்தியா கடுமையாக கேட்டு் கொள்ள வேண்டும் என்றார் பாலு.

இலங்கையில் போர் முடிந்து விட்ட பிறகும், தொடர்ந்து தமிழர்களை சித்திரவதை செய்து குற்றவியல் நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது அந்த நாட்டு அரசு என்று கூறியுள்ளார்

அதிமுக லோக்சபா குழுத் தலைவர் தம்பித்துரை.

லோக்சபாவில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு தம்பித்துரை பேசுகையில், இந்தியா அளித்த, அளித்து வரும் எந்த உதவியுமே அப்பாவித் தமிழ் மக்களுக்குப் போய்ச் சேரவே இல்லை என்பதே உண்மை. இது கடும் கண்டனத்துக்குரியது.

இலங்கைப் படையினரும், அரசும், தமிழர்கள் விவகாரத்தில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து வருகின்றனர். மனிதாபிமானமே இல்லாத வகையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

போர் முடிந்து விட்ட பிறகும் கூட இலங்கை ராணுவம் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதைத் தடுக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார் தம்பித்துரை.

தென்காசி எம்.பி. லிங்கம்

தென்காசி தொகுதி கம்யூனிஸ்ட் எம்.பி. லிங்கம் பேசுகையில், ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது இலங்கைப் படைகள். இருந்தும் இந்தியா இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய அரசு இதில் தயக்கம் காட்டுவது ஏன் என்றார் அவர்.

பாயக உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் பேசுகையில்,

இலங்கையில் தமிழர்கள் மொழி சிறுபான்மையினர் என்பது மட்டுமல்ல, இன ரீதியாகவும் சிறுபான்மையினர் என்பதால், உரிய மரியாதை தரப்படவேண்டும். தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும். இன அடிப்படையில் தமிழர்களுக்கு உரிய மரியாதையை இலங்கை அரசு தரவேண்டும்.

இலங்கைப் பிரச்னை விவகாரத்தில், தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத்தக்கது. மாநில அரசு இயற்றும் தீர்மானத்தில் யாரும் தலையிட முடியாது.

கச்சத்தீவில் தமிழர்கள் மீன்பிடிப்பதை தடுக்க இலங்கை அரசுக்கு உரிமையில்லை என்றார்.

திருச்சி சிவா பேசுகையில்,

தமிழர்கள் தனிநாடு கேட்டார்கள் என்பதற்காக அவர்களைக் கொல்லவில்லை. இலங்கை. மாறாக அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்தனர். கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

தமிழர்கள் மீது துவேஷம் காரணமாக, தமிழ் நூல் நிலையத்தை தீவைத்து எரித்தனர். பெண்கள் மொத்தமாக மானபங்கப்படுத்தப்பட்டனர். தமிழ் இளைஞர்களே இல்லாத நிலையை இலங்கை அரசு உருவாக்கி விட்டது.

உள்நாட்டுப் போர் என்ற பெயரில் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை இனவெறி ஆட்சி.

இலங்கைக்கு ரூ. 500 கோடி நிவாரண நிதியை அளித்தது இந்தியா. அந்த நிதி எப்படி செலவழிக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி ஆய்வு நடத்த வேண்டும்.

அமெரிக்கப் பிரஜையாகவும் உள்ள கோத்தபயா ராஜபக்சேவை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க வேண்டும். அதேபோல முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் விசாரிக்க வேண்டும் என்றார் சிவா.

மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி பேசுகையில்,

பயங்கவாரத்தை அழிக்க நடந்த போர் அல்ல ஈழத்தில் நடந்த போர். அது பயங்கரவாதிகளை அழிப்பது என்ற பெயரில் நடந்த இன அழித்தலாகும். பயங்கரவாதிகள் என்று கூறி தமிழர்களை அழித்து விட்டனர்.

இந்தியாவின் முழு உதவியுடன் இந்த இன அழித்தல் நடந்துள்ளது. பாதுகாப்பான இடங்களில் இருந்தவர்களை தேடித் தேடி அழித்துள்ளனர்.

சிங்களவர்களுடன் நேசமாக இருக்க தமிழர்களை அழிக்காதீர்கள் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.