குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழ் கட்சிகளின் டில்லிக் கூட்டம்! பேசிய விடயங்கள் இந்திய நாடாளுமன்றில் அலசப்படும்!- சுதர்சனம் நாச்ச

25.08.2011- இந்திய தமிழ் கட்சிகளின் டில்லிக் கூட்டம்! பேசிய விடயங்கள் இந்திய நாடாளுமன்றில் அலசப்படும்!- சுதர்சனம் நாச்சியநாடாளுமன்றத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் உலக வளர்ச்சிக்கான குழு, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக, இலங்கையில் உள்ள எட்டுத் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்களும் ஆலோசனை நடத்தியது.சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. தலைமையிலான அந்தக் குழு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில், நேற்று தங்களுக்குள் ஆலோசனை நடத்திய இலங்கைப் பிரதிநிதிகள், இன்று இந்திய எம்.பி.க்களுடன் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கை தமிழ் கட்சிகளுடன் பேசிய விடயங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் அலசப்படும் என்று கூறுகிறார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனம் நாச்சியப்பன்.

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக, இலங்கைக் குழுவைப் பொறுத்தவரை, பாதுகாப்பு என்ற பெயரில் ஆக்கிரமித்துள்ள நிலங்களில் இருந்து இலங்கை இராணுவம் வெளியேறி, அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்,

தமிழர் பகுதிகளில் இராணுவத்தை நிறுத்தக் கூடாது,

புலம் பெயர்ந்த மக்களை இடைத்தங்கல் முகாம்களில் இருந்து சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த வேண்டும்,

அவசரகாலச் சட்டம் மற்றும் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்

என கருத்துத் தெரிவித்ததாக, சுதர்சன நாச்சியப்பன், பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி, முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் எம்.பி.க்களை இக் கூட்டத்துக்கு அழைக்காதது ஏன் என்று சுதர்சன நாச்சியப்பனிடம் கேட்டபோது, ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்துக்களை ஏற்கனவே அறிந்திருப்பதாகக் கூறினார்.

அதே நேரத்தில், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஜேர்மனியில் உள்ள வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கேட்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.