குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கடாபியின் சகாப்தம் முடிந்தது – புரட்சிப்படைகள் அரண்மனையை கைப்பற்றினர்!

25.08.2011-பலத்த சண்டையின் பின்னர் இன்று காலை புரட்சிப்போராளிகள் மும்மார் கடாபியின் வளாகத்தினுன் பிரவேசித்தனர் என்றும் அதிபர் கடாபி தந்திரோபயமான முறையில் பின்வாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆறுமாத கால கிளர்ச்சியின் பின்னர் புரட்சிப்போராளிகள்  கடாபியின் பாப-அல் அஸிஸியாவின் வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு
வந்தனர் என்றும் பிபிசி தெரிவித்தது
இன்று காலை ஆரம்பமான பாரிய தாக்குதலை தொடர்ந்து வளாகத்தின் வெளிச்சுவர்களை உடைத்துக் கொண்டு புரட்சிப்போராளிகள் நுழையும்போது வானில் நேட்டேவின் ஜெட் விமானங்கள் சுற்றிக்கொண்டிருந்தன

அந்த வளாகத்தினுள் கடாபியோ அல்லது அவரின் உறவினர்களோ இருந்தார்களா என்பது தெரியவில்லை.

வளாகம் புரட்சிவாதிகளிடம் வீழ்;ச்சியடைந்ததை அடுத்து ஓடியோ சாதனம் மூலம் கடாபி தாம் வாபஸ் வாங்கியுள்ளதாகவும் நேட்டோவிற்கு எதிராக வெற்றி நோக்கி செல்வதாகவும் தெரிவித்தார்.

வளாகத்தினுள் பிரவேசித்த புரட்சிப் போராளிகள் கடாபிக்கு ஆதரவான படைகள் வெளியேறிவிட்டதைக் கண்டனர்.

கடாபியின் 42 ஆண்டு கால சர்வாதிகாரஆட்சி முடீவுக்கு வந்ததை அறிவிக்குமுகமாக புரட்சிவாதிகள் தங்களின் கொடிகளை ஏற்றினர். கடாபியின் ஆட்சியை பிரதிபலிக்கும் சின்னங்கள் மற்றும் அடையாளங்களை அழித்து விடுவதில் புரட்சிவாதிகள் ஈடுபட்டிருந்தனர். தங்கத்திலான கடாபின் தலைச்சின்னம் நொருக்கப்பட்டது.

புரட்சிவாதிகளின் திரிபோலி தளபதி அப்துல் ஹாகிம் பெல்ஹாஜ் ‘ நாம் சண்டையில் வென்று விட்டோம். சண்டை முடிந்து விட்டது’ என்று வளாகத்தினுள் இருந்து அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.