குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வானத்தால் போன சனியனை ஏணிவைத்து இறக்கி வீட்டுக்குள்வைக்கும் த.தே.அ.சித்திரையைதமிழ்ப்புத்தாண்டாக்கும்

 24.08.2011 திருவள்ளுவராண்டு.2042-வானத்தால் போன சனியனை ஏணிவைத்து இறக்கி வீட்டுக்குள் வைக்கும் கூட்டமைப்பினர்! சித்திரையை தமிழ்ப்புத்தாண்டாக்கும் பார்ப்பணமுதல்வர்ரெலோ உறுப்பினர் சிவாயிலிங்கத்தை மீண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இணைத்தது வானத்தால் போன சனியனை ஏணி வைத்து இறக்கி வீட்டுக்குள் வைத்த கதையாகிப் போய்விட்டது என தமிழ்தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான பதவி ஏற்பு வைபவம் நேற்று நடைபெற்ற போது தாமும் மேடையில் இருக்க வேண்டும் என்று சிலர் அடம்பிடித்ததை பார்த்த போது இதுதான் நினைவுக்கு வந்ததாக அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் தெரிவித்தனர்.
நிகழ்வின் முக்கியஸ்தர்கள் அமர்வதற்கென மேடையில் கதிரைகள் எண்ணிக்கை அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருந்தன. கதிரைகள் அடுக்கப்பட்டுக்கொண்டிருந்த போது திடீரென மேடையில் ஏறிய சிவாஜிலிங்கம் கதிரை ஒன்றைப்பிடித்து அமர்ந்து கொண்டார்.
இதேவேளை கதிரைகள் போடுவதற்கு இடம்போதவில்லை என்பதை அவதானித்த மாவை சேனாதிராசா உடனடியாக சிவாஜிலிங்கத்தினைப் பார்த்து நீங்கள் கீழே இறங்கிச் சென்று உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுடன் அமர்ந்து கொள்ளுங்கள் எனக் கோரியிருக்கின்றார்.
இதனை அடுத்து மாவை சேனாதிராசாவைப் பார்த்த சிவாஜிலிங்கம் ‘நான் ஏன் மேடையை விட்டு இறங்க வேண்டும், நானும் ஒரு காலத்தில் எம்.பி தான் நான் இறங்க மாட்டேன்’ என்று அடம்பிடித்துக் கொண்டு கதிரையில் அமர்ந்துவிட்டதாகவும் சிவாஜிலிங்கம் தனது சொல்லுக்கு மதிப்பளிக்கவில்லை என்று மாவை சேனாதிராசா கடிந்து கொண்டதாக அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தமிழரசுக்கட்சியின் இளநிலை முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
குலநாயகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் நுழைந்த சிவாஜிலிங்கம் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபையில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தையே பெற்றுக்கொண்டார்.
வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராசா தன்னடக்கமாக சபையோர் இருந்த வரிசையில் அமர்ந்திருந்த போது உபதலைவராக தெரிவு செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் மேடைக்கு அழையா விருந்தாளியாக மேடையில் அமர்ந்து கொண்டார்.
கட்சித்தலைமைக்கு கட்டுப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார். பொதுத்தேர்தலில் தனியாக போட்டியிட்ட சிவாஜிலிங்கத்தை தமிழ் மக்கள் நிராகரித்து படுதோல்வியை அடைந்திருந்தார். பின்னர் மக்கள் செல்வாக்கற்ற மற்றொருவரான வல்வெட்டித்துறை குலநாயகத்தின் ஊடாக பின்கதவால் மாவையை அணுகி வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் தமிழரசுக்கட்சி பட்டியிலில் இடம்பிடித்துக்கொண்டார்.
வல்வெட்டித்துறை நகரசபைக்கு தானே தலைவர் என சொல்லித்திருந்த சிவாஜிலிங்கத்தை வல்வெட்டித்துறை மக்கள் நகரசபை தலைவராக தெரிவு செய்யவில்லை. வல்வெட்டித்துறை மக்கள் புத்திசாலித்தனமாக நகரசபை தலைவர் பதவிக்கு தகுதியான கல்விமான் அனந்தராசையே தெரிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முக்கிய பிரமுகர் வரிசையில் தானும் அமர வேண்டும் என அடம்பிடித்திருந்தார்.
இதேவேளை தன்னுடைய சொல்லுக்கு சிவாஜிலிங்கம் மதிப்பு தரவில்லை என மாவை சிலரிடம் கூறி கவலைப்பட்டதாகவும் தெரியவருகிறது. இது மாவைக்கு தேவைதான். வானத்தால் போன சனியனை ஏணிவைத்து இறக்கி நடுவீட்டுக்குள் வைத்தால் சனியனின் தொந்தரவுகளை அது கொடுக்கத்தான் செய்யும். இது மட்டுமல்ல தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமைக்கு இன்னும் தொந்தரவுகள் இருக்கிறது சிவாஜிலிங்கத்தால்.
சனியன் பிடித்தால் ஏழரை வருடத்திற்கு அது ஆட்டிப்படைக்கும் தானே.
அது மட்டுமல்ல இன்னொரு சனியனையும் ஏணி வைத்து இறக்கி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நடுவீட்டிற்குள் வைப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக தமிழ் மக்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
அந்த சனியன் யார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமைக்கு கட்டுப்படாமல் செயற்பட்டார்கள் என்ற காரணத்தால் விலக்கி வைக்கப்பட்ட கஜேந்திரன் தான்.
கஜேந்திரன் தன்னை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் சேர்ந்து விடுமாறு பின்கதவால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.
தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட கஜேந்திரனை மீண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் சேர்ப்பது வானத்தால் போற மற்றொரு சனியனை ஏணி வைத்து இறக்கி நடு வீட்டிக்குள் வைக்கும் வேலைதான். சும்மா போன சனியனை நடுவீட்டிற்குள் வைத்தால் சனியன் பின்னர் ஆட்டிப்படைக்கும் என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமைக்கு விளங்கவில்லைப்போலும்.
கட்சித்தலைமைக்கு கட்டுப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் இணைக்கப்படும் போது கட்சித்தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்ற என்ன உத்தரவாதம் இருக்கிறது. கடந்த தேர்தலில் சிவாஜிலிங்கம், கஜேந்திரன் ஆனந்தசங்கரி போன்ற சனியன்களை விலக்கி வைத்ததால்தான்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பீடை நீங்கி வெற்றி பெற முடிந்தது.
சும்மா போற சனியன்களை மீண்டும் நடுவீட்டிற்குள் கொண்டுவர நினைத்தால் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு சனியன் பிடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.