குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

புதிய தலமைச் செயலகம் அரசு மருத்துவமனை ஆகிறது-சரவணாசின் சங்கதிகள் வடிவேலுசமாச்சாரங்கள்.

23.08.2011-கடந்த திமுக ஆட்சியின் போது கலைஞர் கருணாநிதியால் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டதுதான் புதிய தலைமைச் செயலகம். பழைய சட்டமன்றக் கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டையில் இட நெருக்கடியாக இருக்கிறது என்பதால் அவர் பிரமாண்டாமான ஓமந்தூரார் அரசுத் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை எடுத்தார். பல ஏக்கர் நிலப்பரப்பில் 1,300 கோடிச் செலவில் அந்த பிரமாண்ட கட்டிடம் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டது. அவசர அவசரமாக சட்டமன்ற வளாகம் மட்டும் கட்டி முடிக்கப்பட்டு திமுக ஆட்சியின் இறுதி பேரவைக் கூட்டமும் அங்கு நடந்தது. ஆனால் அது கட்டும் போதே எதிர்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் இயங்க மாட்டோம் என்றும் அறிவித்திருந்தார். அது கட்டி முடிக்கப்பட்ட போது அன்றைய முதல்வர் கலைஞர் புதிய கட்டிடத்தில் அழகை புகழ்ந்து தள்ளினார். ஆனால் உண்மையில் புதிய கட்டிடடம் யாரையுமே கவரவில்லை. கேரளாவிலும், கர்நாடகாவிலும் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டிடங்கள் பார்ப்போரை கவரும் வகையில் இருக்க தமிழக கட்டிடமோ ஒரு பிரமாண்ட குடோன் மாதிரி இருப்பதாக பலரும் கமெண்ட் அடித்தனர். ஆனாலும் கலைஞர் அவைகளைப் பற்றி கவலைப்படாமல் அதை புகழ்ந்து கொண்டிருந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட அந்தக் கட்டிடம் இனி சட்டமன்றமாக செயல்பட சாத்தியமே இல்லை.
 
புதிய அதிமுக அரசு பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் பதவியேற்ற போது திமுக அபிமானிகள் நீதிமன்றத்தை நாடினார்கள். அப்போது உயர்நீதிமன்றமோ புதிய அரசு ஜார்ஜ் கோட்டையில் செயல்பட தடையில்லை என்று தீர்ப்பளித்தது அதிமுக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவான ஒன்று. அடுத்தக் கட்டமாக புதிய சட்டமன்றம் கட்டப்பட்டத்தில் முறைகேடுகள் எதுவும் நடந்திருக்கிறதா? என்று அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் // சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக கட்டிடப் பணிகளுக்கு கூடுதலான செலவு, முறைகேடு காரணமாக அரசு கஜானாவுக்கு இழப்பு, இந்தப் பணிகளுக்கு சட்டப்பூர்வ அனுமதிகளும் மற்றும் ஒப்புதல்களும் பெறப்பட்டனவா?, காலதாமதம், கட்டுமானத்தில் குறைபாடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இதைத்தொடர்ந்து, இதை பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கருதி, மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக அரசு கருதுகிறது. அந்த அடிப்படையில், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது.புதிய தலைமை செயலக கட்டிடப் பணிக்கு கூடுதல் செலவு செய்யப்பட்டதா? அதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசு கஜானாவுக்கு இழப்பு ஏற்பட்டதா? கட்டுமானப் பணிகளுக்கு சட்டப்பூர்வமான அனைத்து அனுமதிகளும் மற்றும் ஒப்புதல்களும் பெறப்பட்டனவா? கட்டுமானத்தில் குறைபாடுகள் இருக்கிறதா? கட்டுமானப் பணியில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டதா? என்பது குறித்து இந்தக் குழு விசாரணை நடத்தும்.மேலும், புதிய தலைமை செயலக கட்டுமானப் பணிகளில் அரசு அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார்களா? தவறு ஏதும் செய்தார்களா? என்றும் இந்த குழு விசாரிக்கும். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க தகுந்த வழிமுறைகளை இந்த குழு பரிந்துரைக்கும். இந்தக் குழு 3 மாதங்களில் விசாரணை முடித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது//
 
மருத்துவமனை.
.............................
 
இந்நிலையில் புதிய கட்டிடத்தை என்ன பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம் என்ற கேள்வியை பலரும் கேட்ட போது சென்னை முழுக்க வெவ்வேறு இடங்களில் சிதறியுள்ள அரசு அலுவலங்களை நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வைக்கும் படி புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தலாம் என்று அரசு தெரிவித்தது. ஏனென்றால் பல அரசுத் துறை அலுவலகங்களுக்கு சொந்தமான கட்டிடங்களே கிடையாது. அவைகள் பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களில் வாடகை கொடுத்து செயல்படும் கட்டிடங்களாகவே இருக்கின்றன. இன்னும் சில அலுவலகங்களோ மிகப் பழமையான கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இதை எல்லாம் ஒருங்கிணைத்து காலியாகக் கிடக்கும் புதிய சட்டமன்றக் கட்டிடத்தில் செயல்படுத்தலாம் என்பதுதான் அரசின் நோக்கமாக இருந்த நிலையில் திடீரென தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, புதிய கட்டிடம் மல்டி ஸ்பெஷல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார். அரசியல்வாதிகளுக்காக நவீன வசதிகளோடு கலைஞரால் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை அரசு அதிகாரிகளுக்குக் கொடுக்கலாம் என நினைத்த ஜெயலலிதா அந்த வசதியான நவீன கட்டிடத்தை ஏழைகளுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.இது குறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு: // தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, (Multi Super Specialty Hospital) ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'ஏ' கட்டடத்தில் அமைக்கப்படும். இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தக் கட்டடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது. //
 
கலைஞரால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை அரசு அலுவலகங்கள் இதில் வந்தால் அடுத்து திமுக ஆட்சிக்கு வரும் போது மறுபடியும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் மருத்துவமனை என்றால் எப்படி மாற்றுவது அப்படியே மாற்றினால் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சைக்காக கொடுத்ததை மீண்டும் பிடுங்கி அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கிறார் கருணாநிதி என்ற குற்றச்சாட்டு வரும் என்ற நிலையில், அவர் முதலில் இதை வரவேற்றார். பின்னர் மு.க.ஸ்டாலினோ //இதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என்றார். சமச்சீர் கல்வியில் நீதிமன்றத்தின் மூலம் வென்றது போல இதிலும் வெல்வோம்//என்றார் ஆனால் உண்மையில் இதில் வெல்ல முடியாது புதிய அரசு தான் விரும்பிய இடத்தில் பதவியேற்று நிர்வாகம் செய்ய நீதிமன்றமே அனுமதியளித்து விட்ட நிலையில் காலியாக உள்ள புதிய கட்டிடத்தில் அரசு எதை விரும்புகிறதோ அதைத்தானே கொண்டு வரும். அதை நீதிமன்றம் விரும்பினால் கூட தடுக்க முடியாது.
 


வடிவேலுவின் தாராளம்.
...........................................
 
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்தார் நடிகர் வடிவேலு. விஜயகாந்துக்கு எதிராக களமிரங்கிய அவரை சரியாக பயன்படுத்திக் கொண்டது திமுக. புதிய அரசு பதவியேற்றதும் அவர் மீதான நில அபகரிப்பு வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டது. வடிவேலு மீது அசோக்நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் புகார் அளித்திருந்தார். அதில், 2006-ம் ஆண்டில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் ஒரு தொழில் முதலீட்டு நிறுவனம் சார்பில் 34 சென்ட் நிலம் ஏலத்துக்கு வந்தது. அந்த நிலத்தை எனது மகன் சொக்கலிங்கம் பெயரில் ரூ. 20 லட்சத்துக்கு வாங்கினேன். முன்னதாக, இந்த நிலத்தை அடமானமாக வைத்துத் தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த டி.கே.ராமச்சந்திரன் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. கடனை அவர் திருப்பிச் செலுத்ததால் அந்த நிலம் ஏலத்துக்கு வந்துள்ளது. எனது மகன் வெளிநாட்டில் இருந்ததால் நான்தான் அந்த நிலத்தை அவ்வப்போது கண்காணித்து வந்தேன். இதற்கிடையே அந்த நிலத்தை நடிகர் சிங்கமுத்துவுக்குப் போலி ஆவணங்கள் மூலம் ராமச்சந்திரனின் மகன் பிரபு விற்றதாக கூறப்படுகிறது. சிங்கமுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேலுக்கு விற்றாராம். போலி ஆவணங்கள் அடிப்படையில் அந்த நிலத்தை இப்போது வடிவேலு தனது மகன் பெயரில் வைத்துள்ளார். 2009ம் ஆண்டு அந்த நிலத்தில் நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர்கள் சுற்றுச்சுவர் கட்ட ஆரம்பித்தனர். அதைத் தடுக்க நான் முயன்ற போது எனக்கு அவர்கள் மிரட்டல் விடுத்தனர். அது குறித்து, அப்போதைய சென்னைப் புறநகர் காவல் ஆணையர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பழனியப்பன் தனது புகாரில் கூறியிருந்தார்.இந்த மனு மீது போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தன்னிடம் மோசடியாக விற்கப்பட்ட நிலத்தை ஒபப்டைக்க வடிவேலு முன்வந்தார். அதன்படி காவல்துறையிடம் ஒப்படைத்தார். இதையடுத்து விவகாரம் தீர்ந்ததால் அவர் மீ்தான வழக்கை போலீஸார் முடித்து வைத்தனர். இதுதான் புகார் இந்த புகாரை இப்போதைய அதிமுக அரசு கையிலெடுத்தவுடன் பாதிக்கப்பட்ட பழனியப்பனுக்கு நடிகர் வடிவேலு இப்போது நிலத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். எதற்கு வம்பு என்று நஷ்டத்தை பற்றி யோசிக்காமல் அந்த நிலத்தை உரியவர்களிடமே கொடுத்துள்ளார் வடிவேலு.ஆனால் இந்த நிலத்தை வடிவேலு நேரடியாக வாங்கவில்லை. சிங்கமுத்து என்ற சிரிப்பு நடிகரிடமிருந்தே வாங்கினார். சிங்கமுத்துவும் வடிவேலுவும் நீண்ட கால நண்பர்கள். சிங்கமுத்துக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்தும் வந்தார். பழனியப்பனின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றி வாங்கியது சிங்கமுத்து. அவரிடமிருந்து வடிவேலு வாங்கியிருக்கிறார். சொத்தின் ஆவணங்களை பரிசோதிக்காமல் வாங்கியது வடிவேலுவுவின் தவறுதான் என்றாலும். இதில் மோசடி செய்த சிங்கமுத்து ஏன் தண்டிக்கப்பட்வில்லை. அதுதான் அரசியல். வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும் பிரச்சனை வந்தவுடன் வடிவேலு திமுக உதவியை நாடினார்.சிங்கமுத்து அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தார். இப்போது அதிமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் சிங்கமுத்து மீது நடவடிக்கை இல்லை. ஆனால் நிலத்தை வைத்திருக்கும் வடிவேலு மீது போலீஸ் பாயும் என்பதால் கைது நடவடிக்கைக்கு பயந்து நிலத்தை ஒப்படைத்திருகிறார் வடிவேலு.


சரவணாஸ்’சாம்ராஜ்ஜியம் சரிகிறது?
...................................................................
 
பல லட்சம் பேர் ஒரே நாளின் வந்து போகும் ஒரே இடம் என்றால் அது சென்னை சரவணா ஸ்டோர்ஸ்தான். சென்னை திநகரில் இரண்டு கடையாக இருந்த காலம் மாறி  தகப்பனாரின் மரணத்தின் பின்னர் சென்னை முழுக்க தன் சாம்ராஜ்ஜியத்தைப் பரப்பியது சரவணாஸ் ஸ்டோர்ஸ். ஒரு முதலாளிக்கு பிரமாண்டமான இத்தனைக் கடைகள் வேறு எவருக்கும் இருக்குமா?என்பதே சந்தேகம்தான். மிக வரிய குடும்பத்தில் இருந்து சென்னைக்கு வந்து படிப்படியாக முன்னேறி இன்று தியாகராயநகர் என்று சொல்லப்படும் ஒரு பிரமாண்ட வணிகச் சந்தையையின் பெரும்பான்மை வணிகத்தை தீர்மானிக்கும் சக்திகளாக வளர்ந்துள்ள நிலையில் இப்போது பெரும் சிக்கலை எதிர்கொள்கிறது இந்த நிறுவனங்கள். கடந்த வியாழக்கிழமை காலை கிட்டத்தட்ட 500 வருமான வரித்துறை அதிகாரிகள் சரவணா கடைகளின் அனைத்துக் கிளைகளையும் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர். அன்று காலை தொடங்கிய ரெய்டு கிட்டத்தட்ட 48 மணி நேரம் நீடித்தது. 2 நாட்கள் நடந்த இந்த அதிரடி சோதனையால் இரு நாடுகளும் சரவணா ஸ்டோர் கடைகள் அனைத்தும் விற்பனையை நிறுத்தின. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த அதிரடி ரெய்டு.இந்த ரெய்டு குறித்து வருமானவரித்துறை தற்போது விவரங்கள் தெரிவித்துள்ளது. 2 நாட்கள், 27 இடங்களில், 500 அதிகாரிகள் சேர்ந்து இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட கடைகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. நிறுவனங்களில் உள்ள இருப்புகள் குறித்த கணக்கெடுப்பு மட்டும் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் ரூ. 150 கோடி மதிப்பிலான நகை, பணம் சிக்கியுள்ளது. இவற்றை ரகசியமாக பதுக்கி வைத்திருந்தனர். இதற்குக் கணக்குகள் இல்லை. இவை குறித்து கணக்கு கேட்டபோது கடை உரிமையாளர்களால் சரியான ஆவணங்களையோ அல்லது விளக்கத்தையோ தர முடியவில்லை.ஒரே இடத்தில் மட்டும் ரூ. 15 கோடி பணத்தையும், ரூ. .3.5 கோடி மதிப்புள்ள நகைகளையும் பதுக்கி வைத்திருந்தனர். சோதனைக்குப் பின்னர் நிறுவனத்தின் 15 குடோன்களை மூடி சீல் வைத்துள்ளோம். கடைகள் குறித்த முழுமையான ஆய்வை முடிக்க ஒரு மாத காலமாகும். அதற்குப் பின்னர் எந்த அளவுக்கு மோசடி நடந்துள்ளது என்பது தெரியும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.கடை உரிமையாளர்களின் 7 வீடுகளையும் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அடுத்து கடை உரிமையாளர்கள், கடைகளின் வங்கிக் கணக்குகளை சோதனையிடவும், வங்கி லாக்கர்களைத் திறந்து ஆய்வு செய்யவும் வருமானவரித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மூடிக் கிடந்த கடையை நேற்றுதான் திறந்திருக்கிறார்கள். மூடிக்கிடந்த மூன்று நாளும் திநகரிலும் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது என்பதுதான் சரவணாஸ் ஸ்டோர்சின் பலம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.