குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு முற்றாக இடிக்கப்படுகிறது

 23.08.2011-வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனது பிறந்த வீட்டின் மிச்சம் மீதிகளும் இன்றிரவு இரவோடிரவாக இடித்தகற்றப்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாயிலிங்கம் அறிவித்துள்ளார்.  இரவோடிரவாக வல்வெட்டித்துறைப் பகுதியெங்கும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்த அவர்  கனரக வாகனங்கள் சகிதம் வீட்டின் எச்சங்கள் அகழப்பட்டு அவையும் எங்கோ ஏற்றிச் செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.

போராட்டத்தின் ஆரம்ப காலப்பகுதிகளில் இராணுவ கெடுபிடிகளையடுத்து குடும்பத்தவர்கள் வீட்டினை விட்டு வெளியேறியிருந்த நிலையில் அவ்வீடு அப்போது கொள்ளையிடப்பட்டிருந்ததுடன் சேதமாக்கப்பட்டும் இருந்தது.

அண்மைக் காலங்களில் யாழ் செல்லும் தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட வேண்டிய சுற்றுலா மையங்களில் ஒன்றாகவும் அது மாறியிருந்தது. இதையடுத்து அவசர அவசரமாக அவ்வீடு மீண்டும் படையினரால் தகர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த இடிபாடுகளை பார்வையிடவும் நாள் தோறும் சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்தும் படையெடுத்து சென்ற வண்ணமேயுள்ளனர். இதையடுத்தே அந்த இடிபாடுகளையும் அகற்றிவிட படைத்தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே வல்வெட்டித்துறையின் தீருவிலில் அமைக்கப்படடிருந்த குமரப்பா புலேந்திரன் ஞாபகார்த்த தூபிகளும் அண்மையில இடித்தழிக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு முற்றாக இடிக்கப்படுகிறது -
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முற்றாக இடிக்கும் பணிகள் தற்போது இராணுவத்திரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வல்வெட்டித்துறையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புடையினரால் பெரிய புல்டோசர்கள் கொண்டு செல்லப்பட்டு வீடு இடிக்கும் பணிகள் தொடரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது:-

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.