குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பாராளுமன்றில் விவாதம்இந்திய அரசாங்கம் தீர்வுத்திட்டமொன்றை

22 .08.2011  இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
 நாளைய தினம் இந்திய பாராளுமன்றில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் மேல்நிலை அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
 
உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், நீதி அமைச்சர் சல்மான் குர்ஷிட் மற்றும் அரச விவகார அமைச்சர் வீ.நாரயணசாமி ஆகியோர் நாளைய தினம் ஆளும் கட்சியினர் தரப்பில் வெளியிடப்பட வேண்டிய கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து உரையாடப்படவுள்ளது.
 
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கருத்துக்களை வெளியிட சில அரசியல்வாதிகள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி நடைபெற்ற விவாதத்தில் இலங்கை விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இடம்பெயர் மக்களின் வாழ்வாதாத்தை மேம்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைத்தல் போன்ற விவகாரங்கள் குறித்து முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

22.08.2011.த.ஆ2042-இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய அரசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கையின் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்ததை நடத்தியதன் பின்னர் இந்த தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் என்பது தொடர்பான யோசனைத் திட்டமாக இந்த தீர்வுத் திட்ட பரிந்துரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஓர் கட்டமாக தமிழ் அரசியல் கட்சிகளுடன் இந்திய அரசியல் தலைவர்கள் இந்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்படும் பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் உத்தேச தீர்வுத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு கிழக்கிற்கான தீர்வுத் திட்டம் காலத்திற்கு காலம் ஒத்தி வைக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் இந்த உத்தேச தீர்வுத் திட்ட பரிந்துரையை முன்வைக்கத் தீர்மானித்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.