குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

ஆளும் கட்சியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளராக மிலிந்த கொழும்பு மாநகரசபை வேட்பாளராக மனோகணேசன்

22 .08. 2011  ஆளும் கட்சியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளராக முன்னாள் நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக மிலிந்த மொரகொடவை தெரிவு செய்துள்ளதாக ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 
நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
மிலிந்த மொரகொட, நீதி, பொருளாதாரத் திட்டமிடல், விஞ்ஞான தொழில்நுட்பம், திட்டமிடல் அமலக்கால் போன்ற துறைகளில் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை முன்னர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் மிலிந்த மொரகொட கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவியிருந்தார்.
 
மிலிந்த மொரகொட தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக கடயைமாற்றி வருகின்றார்.
 
கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக மனோ கணேசன்
 
கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக மனோ கணேசன் இன்று அறிவித்துள்ளார்.
 
புதிய இடதுசாரி முன்னணியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடத் தீர்மானிதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
தெஹிவளை மாநகரசபையின் மேயர் வேட்பளராக கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
 
இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனினும், தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவளிப்பது குறித்து இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளர் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என எட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.