குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

வீட்டோஅதிகாரம் கொண்ட இரண்டு நாடுகள் எம்மை மீட்கும் என்று அதீதமாக நம்பியிருப்பது ஆபத்தாகிவிடும்

 22.08.2011த.ஆ.2042-சிறிலங்கா, உலக சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படும் அபாயம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது!சிறிலங்கா, உலக சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படும் அபாயம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் எதிர்நோக்கும் பெரிய சவாலாக இது அமைந்துள்ளது. நேரம் ஓடிக்கொண்டிருக்கின்றது. போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் விசாரணைக்குழுவை எதிர்நோக்குவது மட்டுமாக இருக்கப் போவதில்லை. வர்த்தகத்தடைகள், வெளிநாட்டுப்பயணத்தடைகள் மற்றும் கடன்களை முடக்கி வைப்பது
போன்ற நடவடிக்கைகiளுக்கு சிறிலங்காவும் அதன் மக்களும் ஆளாகப்போகின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழ் ஆசிரிய தலையங்கத்தில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள்- காலம் பிந்துவதற்கு முன்னர் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஆசிரிய தலையங்கத்திலிருந்து சில பகுதிகள் வருமாறு:-

சிறிலங்கா பிரச்சினையில் ‘புதிய சிந்தனையுடன்’ செயல்படுவதாகக் கூறிய அமெரிக்கா கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தில்
ஆராய்வதற்காக சமர்ப்பிக்கும்படி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு னுநுஆயுசுஊர்நு என்ற ராஜதந்திர பாஷையிலான எச்சரிக்கையை அனுப்பி வைத்திருக்கின்றது.

அடுத்த மாதம்நடைபெறவிருக்கும் இருக்கும் ஐநா பொதுச்சபையின் கூட்டத்திலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

அரசாங்கம் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் கீழ்த்தரமாக நடத்தப்பட்டதற்காகவே இந்நாடுகள் அரசாங்கத்தை தங்கள் காலடிக்குக் கொண்டு வரவைப்பதற்காகவே மனித உரிமைகள் மீறல்கள் குற்றசாட்டுக்களை ஒரு
கருவியாக பயன்படுத்துகின்றன.

இதிலிருந்து மீள்வதற்கு பாரிய ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய சவாலை எதிர்நோக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என்றும் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது. வீட்டோ அதிகாரம் கொண்ட இரண்டு நாடுகள் எம்மை மீட்கும் என்று அதீதமாக நம்பியிருப்பது அபாயகரமான நடவடிக்கையாக அமைந்து விடும். அந்த நாடுகளுக்கு தங்களின் தேச நலன் தன் முக்கியமானதாக இருக்கும்.

லிபியாவின் தலைவருடனான நெருங்கிய தொடர்புகளை எல்லாம் அந்நாடுகள் கைவிட்டுள்ளன. அத்துடன் லிபியா மீது விமானத் தாக்குதலை அந்த நாடுகள் அனுமதித்துள்ளன. இதனை நினைவில் கொள்ள வேண்டும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.