குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 7 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

நேர்காணலில் யெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

28.03.2016-விருதுநகர் ; சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது யெயலலிதாவை புகழ்ந்து  பேசி அவரை சிரிக்கவைத்தார் விருதுநகரிலிருந்து வேட்பாளர் தேர்விற்கு சென்ற அதிமுக பெண் தொண்டர் ஒருவர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர் சட்டசபை தொகுதிகளை தவிர மீதமுள்ள சட்டசபை தொகுதிகளில் தொகுதிக்கு 3 பேர் வீதம் நேர்காணலுக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் சாத்துர், சிறிவில்லிப்புத்துார், ராயபாளையம் உள்பட சட்டசபை தொகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டிருந்தனர். நேர்காணலில் முதல்வர் யெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்வது என்று ஒவ்வொரு நிர்வாகிக்கும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதில் சிறிவில்லிப்புத்துார் சட்டசபை தொகுதியில் இருந்து மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி சந்திரபிரபா, மாவட்ட துணைச்செயலாளர் வசந்திமான்ராய், சீனிவாசன் ஆகியோர் நேர்காணலுக்கு சென்றனர்.

 

மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி சந்திரபிரபா எம்.ஏ., தமிழ் முதுநிலைப்படிப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். அதிகம் படித்திருந்தாலும் கிராமத்து பெண்மணியான அவர் எப்போதும் வெகுளியாகவே பேசுவார். முதல்வர் யெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவரது கணவர் முத்தையா தனியாக 2 நாள் கிளாஸ் எடுத்திருந்தார் அவருக்கு.

 

கணவன் சொல்லே மந்திரம் என்ற ரீதியாக போயஸ் கார்டனுக்குள் நுழைந்த சந்திர பிரபா  நேர்காணல் நடந்த அறைக்குள் நுழைந்ததும்  முதலமைச்சர் யெயலலிதாவின் காலில் நெடுஞ்சான் கிடையாக காலில் விழுந்து எழுந்ததோடு குனிஞ்சுக்கிட்டே தலையை நிமிராமல் கையை எடுத்து கும்பிட்டப்படி சில நிமிடங்கள் நின்றாராம். யெயலலிதா 'சீட்டுல உட்காருங்க' என்று சொன்னதற்கு 'இல்லம்மா' என்று சொல்லி விட்டு...திடீரென “தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வம்”என்று கிராமத்து பாணியில் பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல் புகழத்தொடங்கி விட்டாராம்.

 

மனப்பாடம் செய்து ஓப்பிப்பதுபோல் சந்திர பிரபா கூறியதை கேட்ட யெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம்.பின்னர், 'போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை' என்று சொல்லி சிரித்து விட்டு.. என்ன படிச்சிருக்கீங்க என்றாராம். தமிழில் ஆராய்ச்சி பட்டம் வாங்கியிருக்கேன்னு சொல்லவும் அப்படியா என்பதுபோல் பார்த்த யெயலலிதா மீண்டும் வாய் விட்டு சிரித்து சரி போய் வா...என்று வாழ்த்து என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.

- எம்.கார்த்தி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.