குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும்- மூத்த இராசதந்திரி சயந்த தனபால!

22.08.2011-இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவுடன் உறவுகளை சிறிலங்கா பலப்படுத்த வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐநா சபையின் ஆயுதபரிகரண விவாகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவரும் சிறிலங்காவின் மூத்த ராயதந்திரியுமான சயந்த தனபாலா தெரிவித்திருக்கின்றார். 20 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவை நாம் தூக்கி எறிந்து விட முடியாது. புத்திசாலித்தனமாக இந்தியாவுடனான உறவை இறுக்கமாக வைத்து வந்த சனாதிபதியிடமிருந்து 2009க்கு பின்னர் அந்தப்புத்திசாலித்தனத்தை காணமுடியவில்லையே’, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘வரலாற்று ரீதியாக இந்திய வம்சாவழியினர்தான் நநநநநநநசிறிலங்காவில் வாழ்ந்து வருகின்றார்கள். ஸ்ரீலங்காவில் நடக்கும் ஒவ்வொரு விவகாரமும் இந்தியாவின் தமிழ்நாட்டிலும் அதன் ஏனைய பகுதிகளிலிலும் நேரடித்தொடர்பு உடையதாகவே இருக்கின்றது.

13 ஆவது திருத்தச்சட்டம், அதற்கு அப்பால், இரண்டாவது சபை என்று கூறியது எல்லாம் போய் இப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு என்றெல்லாம்சனாதிபதி பேசுகின்றார், இந்திரா காந்தியைப் போன்று எம் கையை முறுக்கிய மாதிரியான அணுகுமுறையைக்
கடைப்பிடிக்காது, அரசியல் தீர்வு காணும் முயற்சியை விரைந்து காணும்படி இந்தியா சாந்தமாக கோருகின்றது. ஆனால் நாம் அச்செய்திக்கு காது கொடுப்பது போன்று தெரியவில்லை.

இந்திய-இலங்கை உடன்படிக்கையை 1980 களில் திணித்ததிலும் பார்க்க இந்தியாவின் சர்வதேச வளர்ச்சி இன்று 100 வீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வழிகாட்டலையே எதிர்பார்த்து நிற்கின்றன.

உலக ரீதியில் இந்தியாவிற்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்ல உறவுகளைப் பேண முடியும். முன்னரும் இவ்வாறே நடந்துள்ளோம். இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் . அப்போது எமக்கு இந்தியாவின் செல்வாக்கு உதவ முடியாது போகும் நிலை ஏற்படும் ‘ என்றும் சயந்த தனபால லக்பிம ஆங்கில வார இதழுக்கு தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.