குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 7 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

60 ஆண்டுகால வரலாற்றில் திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக வென்றதில்லை

21.03.2016-ஆன்மிக புகழ்மிக்க திருவண்ணாமலைக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான உறவும், வரலாற்று தொடர்பும் உண்டு. தந்தை பெரியாருக்கும், அப்போைதய இந்திய கவர்னர் யெனரல் ராயாயிக்கும் இடையே திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நடந்த சந்திப்பும், அதைத்தொடர்ந்து நிகழ்ந்த பெரியாரின் மறுமணம், திமுக உதயம் ஆகியவை தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனைகள்.அதனாலோ என்னவோ கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலைக்கும், திமுகவுக்கும் இணக்கமான உறவு நீடிக்கிறது. திமுகவுக்கு முதல் நகரசபை தலைவர், முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரை வழங்கியதும் திருவண்ணாமலைதான். காங்கிரஸ் வலிமையாக திகழ்ந்தபோது, 1963ம் ஆண்டு நடந்த திருவண்ணாமலை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் கடந்த 1957ம் ஆண்டு முதல் கடந்த 2011 வரை நடந்த 13 பொதுத்தேர்தல்களில், திமுகவும் காங்கிரஸ் கட்சியும் மட்டுமே மாறிமாறி வெற்றிவாகை சூடியுள்ளன. 8 முறை திமுகவும், 5 முறை காங்கிரசும் வென்றிருக்கிறது. குறிப்பாக, கடந்த 1996ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை இத்தொகுதியில் திமுகவே வெற்றியை தக்க வைத்திருக்கிறது.திருவண்ணாமலை தொகுதியில் இதுவரை ஒருமுறைகூட அதிமுக வென்றதில்லை. இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 1957, 1963, 1971, 1977ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றிபெற்ற முன்னணி தலைவர்களில் ஒருவரான ப.உ.சண்முகம், 1980ம் ஆண்டு அதிமுக சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இத்தொகுதியில் திமுகவின் வலிமை காரணமாக அவரால் வெற்றிபெற இயலவில்லை.

அதிமுகவுக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவம் காரணமாக, கடந்த 1980ம் ஆண்டுக்கு பிறகு, திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக போட்டியிடாமல் தவிர்த்தது.

 

என்றாலும், 2006ம் ஆண்டு அதிமுக சார்பில் முன்னாள் நகராட்சித் தலைவர் பவன்குமாரும், கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரனும் இத்தொகுதியில் போட்டியிட்டனர். தோல்வியை தழுவினர். அதுமட்டுமல்ல அதன்பிறகு, அவர்களின் அரசியல் வாழ்வும் சரிந்தது. எனவே, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவது அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்து என்ற ‘சென்டிமென்ட் பீதி’ அதிமுக நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த தொகுதியில் போட்டியிட அதிமுகவினரிடம் ஆர்வம் குறைந்திருக்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.