குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

வடக்கு - கிழக்கு வீடமைப்புத் திட்டத்தில் யாழ்.மாவட்டத்துக்கு 13,350 வீடுகள்; அரச அதிபர் இமெல்டா சுகு

21.08.2011-வடக்கு கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின்கீழ் யாழ்.மாவட் டத்தில் 13 ஆயிரத்து 350 வீடுகள் அமைக்கும்பணி இடம் பெற்று வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
வடக்கு கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின்கீழ் யாழ்.மாவட்டத்தில் வீடமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 598 வீடுகளும், நெடுந்தீவில் 309 வீடுகளும், யாழ்.பிரதேச செய லர் பிரிவில் 361 வீடுகளும், காரைநகர் உதவி அரச அதிபர் பணிமனையில் 360 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.
 
கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவில் 888 வீடுகளும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 338 வீடுகளும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2566 வீடுகளும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 537 வீடுகளும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 366 வீடுகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 53 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.
 
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 956 வீடுகளும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 407 வீடுக ளும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 1125 வீடுகளும் வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் 461 வீடுகளும் மருதங்கேணியில் 25 வீடு களும் அமைக்கப்படவுள்ளன.
 
இதில் 10 ஆயிரத்து 391 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 2 ஆயிரத்து 959 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்
 
 
 
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.